அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள்: நவம்பர்: விழித்தெழு! மற்றும்/அல்லது காவற்கோபுரம் சந்தாக்கள். மாதத்துக்கு இருமுறை வரும் வெளியீடுகளுக்கு முழு ஆண்டின் சந்தா ரூ60 மற்றும் ஆறு மாத சந்தா ரூ30. மாதாந்தர வெளியீடுகளுக்கு முழு ஆண்டின் சந்தா ரூ30. மாதாந்தர வெளியீடுகளுக்கு ஆறு மாத சந்தா கிடையாது. டிசம்பர்: மிகப்பெரிய மனிதர் ரூ40-க்கு அளித்தல். கிடைக்காதபோது பைபிள் கதைகள் புத்தகத்தை அல்லது என்றும் வாழலாம் புத்தகத்தைப் பயன்படுத்துங்கள். ஜனவரி 1993: பழைய 192 பக்க புத்தகங்களின் விசேஷ அளிப்பு, ஒவ்வொன்றும் ரூ6-க்கு. 1983-ல் அல்லது அதற்கு முன்னால் பிரசுரிக்கப்பட்ட 192 பக்கப் புத்தகங்கள் யாவும் இதில் அடங்கியுள்ளன. மலையாளத்திலும் தமிழிலும்: மெய்ச் சமாதானமும் பாதுகாப்பும்—எந்த மூலக்காரணத்திலிருந்து? மற்றும் ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல். குஜராத்தியில்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் சத்தியம் மற்றும் இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைத்தானா? இந்தியிலும் கன்னடாவிலும்: உங்களை மகிழ்ச்சியாக்க நற்செய்தி மற்றும் “உம்முடைய ராஜ்யம் வருவதாக.” தெலுங்கில்: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைத்தானா? மராத்தியில்: பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல் மற்றும் இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைத்தானா? பெங்காலியிலும் நேப்பாலியிலும்: நம்முடைய பிரச்னைகள் புரொஷூர். பிப்ரவரி: என்றென்றும் வாழலாம் புத்தகம் ரூ40-க்கு. (சிறியது ரூ20) கவனியுங்கள்: டிசம்பர் முதற்கொண்டு புத்தக அளிப்பில் ஒரு மாற்றம் உள்ளது. மேல் குறிப்பிட்ட அளிப்புகளுக்குத் தேவைப்படுபவற்றை இன்னும் தருவித்திராத சபைகள் தங்கள் அடுத்த புத்தக ஆர்டர் பாரத்தில் அவ்வாறு செய்ய வேண்டும்.
◼ நடத்தும் கண்காணி அல்லது அவர் நியமிக்கும் ஒருவர் டிசம்பர் 1-ல் அல்லது அதன்பின் கூடிய சீக்கிரத்தில் சபை கணக்குகளைத் தணிக்கைச் செய்ய வேண்டும். இதைச் செய்துமுடித்தப் பின்பு சபைக்கு அறிவிப்பு செய்யுங்கள்.
◼ ஜனவரியில் தொடங்கி, வட்டாரக் கண்காணிகள், “உலகத்தின் தூய்மைக் கேடுகளிலிருந்து நம்மைச் சுத்திகரித்தல்” என்ற பொதுப்பேச்சைக் கொடுப்பார்கள்.
◼ இந்திய மொழிகளில் மாதத்துக்கு இருமுறை வரும் காவற்கோபுர பதிப்புகள் ஜூலை மாதத்திலிருந்து, ஆங்கில பதிப்புக்கு இணையாக, மற்றும் மூன்று மாதங்களே பிந்தினவையாக இருப்பதை நீங்கள் ஒருவேளை கவனித்திருக்கலாம். இந்தக் கால அட்டவணை இப்பொழுது விடாமல் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும். இவ்வாறு ஆங்கில காவற்கோபுர பதிப்பில் ஒரு கட்டுரை தோன்றுகையில், அதை நீங்கள், இந்திய மொழிகளில் மாதத்துக்கு இருமுறை வரும் காவற்கோபுர பதிப்புகளில் மூன்றே மாதங்களுக்குப் பின்பு காணும்படி எதிர்பார்க்கலாம். இந்திய மொழிகளின் காவற்கோபுர மாதாந்தர பதிப்புகளில் வரும் படிப்பு கட்டுரைகளைக் குறித்ததிலும் அவ்வாறே இருக்கிறது. உதாரணமாக, இந்திய மொழிகளில் வரும் காவற்கோபுர மாதாந்தர பதிப்புகளின் ஜூலை 1, 1992-ன் வெளியீடு நான்கு படிப்புக் கட்டுரைகளைக் கொண்டிருந்தது. இவை ஆங்கில காவற்கோபுர ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 15, 1992-ல் வெளிவந்த படிப்புக் கட்டுரைகள். இந்தக் காரணத்தினிமித்தம், தேச முழுவதிலும் இந்திய மொழிகளிலுள்ள காவற்கோபுர படிப்புகளில் இப்பொழுது ஒரு முழு படிப்பு கட்டுரையும் படிக்கப்படும். மேலும் இந்தக் கட்டுரை உலகமுழுவதிலும் பெரும்பான்மையான நம் சகோதரர்கள் படிக்கும் கட்டுரைக்கு மூன்றே மாதங்கள் பிந்தினவையாக இருக்கும். இந்த நாட்டில் அச்சடிக்கப்படும் காவற்கோபுர பதிப்புகளின் எல்லா மொழிகளிலும், ஆவிக்குரிய “ஏற்றவேளை போஜனத்தை” நாம் பெற்றுக்கொண்டிருக்கும்படி இந்த ஏற்பாட்டைச் செய்ததற்காக நாம் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துகிறோம்.—மத். 24:45.
◼ கையிருப்பில் இராத பிரசுரங்கள்:
ஆங்கிலம்: யெகோவாவுக்குத் துதி பாடுங்கள் (Sing Praises to Jehovah) (பெரிய பாட்டுப்புத்தகம்); உவாட்ச் டவர் பிரசுரங்களின் இன்டெக்ஸ் (30-85). இந்தி: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!
◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
கன்னடா: நம்முடைய ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல்.
◼ மறுபடியும் கிடைக்கும் பிரசுரங்கள்:
ஆங்கிலம்: நியு உவோர்ல்ட் டிரான்ஸ்லேஷன் டிலக்ஸ் பைபிள் (DLbi12) (ஒத்துவாக்கிய குறிப்புகளுடன்) கருநிறத்திலும் சிவப்பிலும்; நியு உலோர்ல்ட் டிரான்ஸ்லேஷன் பெரிய அச்சு பைபிள் (Rbi8) (துணைக் குறிப்புகளுடன்); வேதவசனங்களின்பேரில் உட்பார்வை (இரு புத்தகங்களும்); வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்; வேதவார்த்தைகளெல்லாம் கடவுளால் ஏவப்பட்டன பயனுள்ளவை; யெகோவாவுக்குத் துதிகள் பாடுங்கள் (சிறிய பாட்டுப் புத்தகம்); மகிழ்ச்சி—அதை எவ்வாறு கண்டடைவது; உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல்; புதிய பூமிக்குள் தப்பிப்பிழைத்தல்; பரிசுத்த ஆவி—வரவிருக்கும் புதிய ஒழுங்குக்குப் பின்னாலுள்ள வல்லமை! மரித்தோரின் ஆவிகள்—அவை உங்களுக்கு உதவிசெய்யக்கூடுமா அல்லது தீங்குசெய்யுமா? அவை உண்மையில் இருக்கின்றனவா?
ஃபிரெஞ்ச்: நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவிசெய்வார்? உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்?