உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 12/92 பக். 1
  • தேவனுடைய வார்த்தையின் வல்லமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவனுடைய வார்த்தையின் வல்லமை
  • நம் ராஜ்ய ஊழியம்—1992
  • இதே தகவல்
  • மிகப்பெரிய மனிதர் புத்தகத்தில்பைபிள் படிப்புகளை ஆரம்பித்தல்
    நம் ராஜ்ய ஊழியம்—1993
  • மற்றவர்கள் கடவுளுடைய குமாரன், இயேசு கிறிஸ்துவைப்பற்றி கற்றுக்கொள்ள உதவுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1993
  • மக்கள் எவ்வாறு என்றும் வாழலாம் என்பதைக் கற்றுக்கொள்ள உதவிசெய்யத் திரும்பிச்செல்லுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1993
  • பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு உதவி
    நம் ராஜ்ய ஊழியம்—2013
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1992
km 12/92 பக். 1

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

1 தேவனுடைய வார்த்தை வல்லமையுள்ளதாய் இருக்கிறது. (எபி. 4:12) மக்கள் தாங்கள் பைபிளில் கற்றுக்கொள்ளும் காரியங்களைத் தங்கள் சொந்த வாழ்க்கையில் அப்பியாசிப்பதன் காரணமாக, கோடிக்கணக்கானோரின் வாழ்க்கை நல்லமுறையில் மாற்றப்பட்டிருப்பதிலிருந்து இன்று இதற்கான அத்தாட்சியைக் காண முடிகிறது. முதல் நூற்றாண்டில் இயேசுவின் சீஷர்கள் கடவுளுடைய வார்த்தையைப்பற்றிய அறிவை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டபோதும் இதுவே உண்மையாக இருந்தது.—ரோ. 12:2.

2 பைபிளுடைய போதனைகளிலிருந்து மக்கள் பயனடையும் பொருட்டு, அவர்கள் பைபிள் கடவுளுடைய வார்த்தை என்று அங்கீகரித்து, பைபிளைத் திருத்தமாகப் புரிந்துகொள்வது அவசியமாக இருக்கிறது. (1 தெச. 2:13) டிசம்பர் மாதத்தில் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை அளிப்பதன் மூலம் பைபிளின் மதிப்பைப்பற்றி அதிகமாகக் கற்றுக்கொள்வதற்கும் திருத்தமான புரிந்துகொள்ளுதலைப் பெறுவதற்கும் மக்களுக்கு வாய்ப்பைக் கொடுப்போம்.

3 என்றும் வாழலாம் புத்தகத்தின் சில அக்கறைக்குரிய அம்சங்களை ஏன் விமர்சிக்கக்கூடாது? பொருளடக்கத்தின் பட்டியல், யெகோவா தேவன் மற்றும் இயேசு கிறிஸ்துவின் பங்குகள், மரணம், நரகம், பொல்லாத ஆவிகள், உயிர்த்தெழுதல், தேவனுடைய ராஜ்யம் பற்றிய அடிப்படை கொள்கைகளைக் கலந்தாலோசிக்கும் அதிகாரங்களுக்கு வழிநடத்தும். அங்கு பல புகைப்படங்களும் விளக்கப்படங்களும் உள்ளன. இந்த அம்சங்கள், நம் பிராந்தியத்திலுள்ள மக்கள் அதில் அடங்கியுள்ள நற்செய்தியைக் கேட்கவேண்டும் என்ற உண்மையான ஆர்வத்துடனும் உறுதியான நம்பிக்கையுடனும் அந்தப் புத்தகத்தை அளிக்க உதவிசெய்யும். இந்த நேர்த்தியான பிரசுரத்திற்கான நம்முடைய ஆர்வம், வீட்டுக்காரர் நம்முடைய ராஜ்ய செய்திக்கும் அளிப்புக்கும் அதிக மனமார பிரதிபலிப்பதில் விளைவடையும்.

4 மனிதவர்க்கத்திற்கு எதிர்காலம் எதைக் கொண்டிருக்கிறது என்று உண்மையிலேயே தெரிந்துகொள்ள விரும்பும் ஓர் ஆளை நாம் எதிர்ப்பட்டால் இந்தப் புத்தகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம். பூமிக்கும் மனிதவர்க்கத்துக்குமான கடவுளுடைய நோக்கத்தைப்பற்றி கூறும், அதிகாரம் 1-ன் பக்கங்கள் 12, 13-ஐ உயர்த்திக் காண்பித்து, இந்த மகத்தான ஆசீர்வாதங்கள் அருகில் இருக்கின்றன என்பதைக் குறிப்பிடுங்கள். பக்கங்கள் 155-158-ல் உள்ள படங்களுக்கு அவருடைய கவனத்தைத் திருப்பலாம். இந்தப் படங்களுக்கு அருகே குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களை வாசிப்பது உங்களுடைய கலந்தாலோசிப்பு பைபிள் அடிப்படையிலானது என்று உறுதியளிக்கும்.

5 கிறிஸ்தவமண்டலத்தின் நடத்தையின் காரணமாக அநேகர் பைபிளைக் கடவுளுடைய வார்த்தையென ஏற்க மறுக்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தில், யெகோவாவின் சாட்சிகள் பிறப்பித்திருக்கும் கனிகளுக்கும் மற்ற மதங்கள் பிறப்பித்திருப்பவற்றிற்குமுள்ள வித்தியாசத்தைக் காண்பிக்க “உண்மையான மதத்தை அடையாளங் கண்டுகொள்ளுதல்” என்ற அதிகாரம் 22-ஐ திறம்பட பயன்படுத்தலாம்.

6 நாம் ஒரு வசனத்தை நம்முடைய ஆங்கில பைபிளிலிருந்து வாசித்தால், அந்த வீட்டுக்காரர், புதிய உலக மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழியின் தெளிவைப்பற்றி குறிப்பிடலாம். அல்லது வீட்டுக்காரர் நம்முடைய செய்தியில் அக்கறை காண்பிக்கலாம், ஆனால் பைபிள் அவரிடம் இல்லாதிருப்பதை நாம் காணலாம். இதைப் போன்ற நிலைமைகளில், நாம் பயன்படுத்தும் பைபிளின் தனித்தன்மையான அம்சங்களையும், நாம் ஏன் மற்றவற்றைக் காட்டிலும் இதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதற்கான காரணங்களையும் விவரிக்கலாம். மற்ற காரியங்களோடு, பைபிளின் பின்னால் இருக்கும் அட்டவணை மற்றும் “கலந்துபேசுவதற்கான பைபிள் பேச்சுப்பொருள்கள்” என்ற அம்சத்தையும் சுட்டிக்காண்பிக்கலாம். இது அந்த வீட்டுக்காரரோடு ஒரு புதிய உலக மொழிபெயர்ப்பை அளிப்பதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கும்; அப்போது நாம் எடுத்துச்செல்லாமல் இருந்திருந்தாலும், ஒரு புதிய பிரதியுடன் மறுபடியும் சந்திக்க விருப்பம் தெரிவிக்கலாம்.

7 பைபிளின் மூலமாக, யெகோவா மனிதவர்க்கத்திடம் தம்முடைய செயல்தொடர்புகளைத் தெரியப்படுத்தி, அவ்வாறாக தமது மகத்தான ஆள்தன்மைக்கு நம்மை அறிமுகப்படுத்தியிருக்கிறார். யெகோவாவைப்பற்றியும் அவருடைய வார்த்தையின் வல்லமையைப்பற்றியும் கற்றுக்கொள்ள உதவுவதில் புதிய உலக மொழிபெயர்ப்பு மற்றும் என்றும் வாழலாம் புத்தகத்தைத் திறம்பட பயன்படுத்துவோமாக!—2 கொரி. 10:4.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்