அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள்: டிசம்பர்: புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிளும் பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? என்ற ஆங்கில புத்தகமும் சேர்த்து ரூ60-க்கு. பெங்காலி மற்றும் நேப்பாளி: நம்முடைய பிரச்னைகள் புரொஷூர். கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? ஆங்கில புத்தகம் கிடைக்காத மொழிகளில் என்றும் வாழலாம் புத்தகத்தைப் பயன்படுத்துங்கள். ஜனவரி 1993: பழைய 192-பக்க புத்தகங்களின் விசேஷ அளிப்பு, ஒவ்வொன்றும் ரூ6-க்கு. மலையாளம் மற்றும் தமிழில்: மெய்ச் சமாதானமும் பாதுகாப்பும்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து? (பழைய பதிப்பு) குஜராத்தியில்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் மற்றும் இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? ஹிந்தி மற்றும் கன்னடத்தில்: உங்களை மகிழ்ச்சியாக்கும் நற்செய்தி மற்றும் “உம்முடைய ராஜ்யம் வருவதாக.” தெலுங்கில்: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? மராத்தியில்: பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல் மற்றும் இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? பெங்காலி மற்றும் நேப்பாளி: நம்முடைய பிரச்னைகள் புரொஷூர். பிப்ரவரி: என்றும் வாழலாம் புத்தகம் ரூ40-க்கு. (சிறியது ரூ20.) மார்ச்: இளைஞர் கேட்கின்றனர் புத்தகம் ரூ20-க்கு. இது கிடைக்காத மொழிகளில் என்றும் வாழலாம் புத்தகம் ரூ40-க்கு. (சிறியது ரூ20.) குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரசுர அளிப்புகளில் சில மாற்றங்கள் உள்ளன. இது ஏனென்றால் ‘இந்தியாவுக்கு’ வரும் நம் ராஜ்ய ஊழியம் தயாரிக்கப்படுவதில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது; அது அடுத்த அறிவிப்பில் விவரிக்கப்பட்டிருக்கிறது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள அளிப்பிற்குரிய பிரசுரங்களை இதுவரை ஆர்டர் செய்யாத சபைகள், அடுத்த பிரசுர ஆர்டர் பாரத்தில் (S-14) செய்யவேண்டும்.
◼ அடுத்த வெளியீட்டிலிருந்து, அதாவது ஜனவரி 1993-லிருந்து, ‘இந்தியாவுக்கு’ வெளிவரும் நம் ராஜ்ய ஊழியம் ‘அமெரிக்க ஐக்கிய மாகாணங்களுக்கு’ வெளிவரும் பதிப்புடன் ஒத்ததாயிருக்கும். இதுவரையிலுமாக, நீங்கள் ஒரு குறிப்பை சங்கத்தின் அட்டவணையில் எடுத்துப் பார்க்கும்போது, ‘இந்தியாவுக்கு’ வெளிவரும் நம் ராஜ்ய ஊழியத்தில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள மாதத்திற்கு ஒரு மாதத்திற்குப் பின்னான வெளியீட்டில்தான் உங்களுக்கு வேண்டிய கட்டுரையைக் கண்டுபிடித்தீர்கள். ஜனவரி 1993-ற்குப் பின்னான குறிப்புகளுக்கு, அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அதே வெளியீட்டில் உங்களுக்கு வேண்டிய குறிப்பைக் காண்பீர்கள். இவ்வாறாக, உலகிலுள்ள பெரும்பான்மையான சகோதரர்களுக்குக் கிடைக்கும் அதே சமயத்தில் நீங்கள் தகவல்களையும் போதனைகளையும் பெறுவீர்கள். இதில் உட்பட்டுள்ள அநேக துறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இது கூடிய காரியமாகியிருக்கிறது. ஆங்கிலத்திலும் இந்தக் கிளை அலுவலகம் கையாளக்கூடிய பல்வேறு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஆவிக்குரிய உணவைக் கொடுப்பதில் முன்னேற்றத்திற்கான இந்தப் பெரிய படியை எடுக்கமுடிந்ததற்காக யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்.—பிலிப். 2:2.
◼ எல்லாச் சபைகளும், அந்த வருடத்திற்குத் தேவையான பாரம்களை டிசம்பர் மாதத்தில் பெற்றுக்கொள்வார்கள்; அவற்றோடு அதற்கான விலை உங்கள் டிசம்பர் அறிக்கையில் சேர்க்கப்படும். எல்லா செயலாளர்களுக்கும் உதவும்படி ஒரு சரிபார்க்கும் பட்டியல், பொருத்தமான பாரம்களைச் சம்பந்தப்பட்ட சகோதரர்களிடம் பகிர்ந்தளிக்கும்படியாக அனுப்பப்படுகின்றன. அந்தச் சரிபார்க்கும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளைவிட பழையதாயிருக்கும் கையிருப்பிலுள்ள எல்லா பாரம்களும் அழிக்கப்படவேண்டும். நினைவுநாள் ஆசரிப்பு அழைப்புத்தாள்களும் உள்ளடக்கப்படும்.
◼ வருடாந்தரபுத்தகங்கள் புரூக்லினிலிருந்து நேரடியாக அனுப்பப்படுவதால், நீங்கள் வருடாந்தரபுத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்த சமயத்தில் இருந்த, உரிய சபை முகவரிகளுக்கு அவை அனுப்பிவைக்கப்படும். அந்தச் சமயத்திற்குப்பின் உங்கள் முகவரி மாறியிருந்தால், உங்கள் ஆர்டரைப் பெறவேண்டுமானால், பழைய தபால் நிலையத்தில் புதிய முகவரியை விட்டுச்செல்வதற்கு நிச்சயமாயிருங்கள்.
◼ டிசம்பர் 7-ல் துவங்கும் வாரத்திலிருந்து, முதலில் விடுதலைக்கு வழிநடத்தும் தெய்வீக சத்திய பாதை என்னும் சிறு புத்தகத்தையும் பின்னர் குருசேத்திரத்திலிருந்து அர்மகெதோனுக்கும்—நீங்கள் தப்பிப்பிழைத்திருப்பதற்கும் என்ற சிறு புத்தகத்தையும் படிப்பதற்கான அட்டவணையை பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, நேப்பாளி மற்றும் தெலுங்கு பதிப்புகளின் நம் ராஜ்ய ஊழியம் கொண்டிருக்கும்படி திட்டமிடுகிறோம். அவை திட்டமிடப்பட்டதும் இந்த மொழிகளிலுள்ள புத்தகப்படிப்புத் தொகுதிகள் இந்தச் சிறு புத்தகங்களைப் படிக்கவேண்டும். மற்ற தொகுதிகள் வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தைத் தொடர்ந்துப் படிக்கலாம்.
◼ டிசம்பர் 1-ல் அல்லது அதற்குப்பின் கூடிய சீக்கிரத்தில் நடத்தும் கண்காணியோ அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ சபையின் கணக்கைத் தணிக்கை செய்யவேண்டும். இது செய்துமுடிக்கப்பட்டதும் சபைக்கு ஓர் அறிவிப்பைச் செய்யுங்கள்.
◼ ஆண்டு 1993-ன் வருடாந்தர வசனம், “கர்த்தாவே, [யெகோவாவே, NW] உமது வழியை எனக்குப் போதியும் . . . உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.”—சங்கீதம் 86:11. ஜனவரி 1, 1993 அல்லது அதற்குப்பின் கூடிய சீக்கிரத்தில் காட்சியில் வைக்கப்படுவதற்கு, சபைகள் தங்களுடைய பலகைகளைப் புதிய வருடாந்தர வசனத்துடன் தயாரித்தால் நன்றாயிருக்கும்.
◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரம்: சிந்தி: “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” (புரொஷூர்).