தேவராஜ்ய செய்திகள்
இந்தியா: நாம் 1992-ல், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 11,597 பேர் அறிக்கைசெய்து, ஜூலையில் ஓர் உச்சநிலையாக 12,168 பிரஸ்தாபிகள் அறிக்கைசெய்ததுடன், கடந்த வருடத்தைவிட எட்டு சதவீத அதிகரிப்பை அனுபவித்தோம். இந்த வருடத்தில் ஏறக்குறைய 27 இலட்சம் மணிநேரங்கள் ஊழியத்தில் செலவிடப்பட்டன; கிட்டத்தட்ட 11 இலட்சம் பத்திரிகைகள் விநியோகிக்கப்பட்டன; ஒவ்வொரு மாதமும் சராசரியாக 9,594 பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டன. மொத்தத்தில் இந்த ஊழிய ஆண்டில் 928 பேர் முழுக்காட்டப்பட்டனர்.
வங்காள தேசம்: இந்த நாடு ஜூலையில் 42 பிரஸ்தாபிகள் அறிக்கைசெய்யும் உச்சநிலையோடு, கடந்த ஊழிய ஆண்டைவிட 16 சதவீத அதிகரிப்பை அறிக்கைசெய்தது.
நேப்பாளம்: ஜூனில் உச்சநிலையாக 98 பிரஸ்தாபிகள் அறிக்கைசெய்தனர்; அதே நேரத்தில் அந்த நாடு மொத்தமாக சராசரி பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் 24 சதவீத அதிகரிப்பை அனுபவித்தது.
எத்தியோப்பியா: ஜூனில் புதிய உச்சநிலையாக 3,585 பிரஸ்தாபிகள் அறிக்கைசெய்தனர்.
துருக்கி: கடந்த வருட சராசரியைவிட 9 சதவீத அதிகரிப்புடன், ஒரு புதிய உச்சநிலையாக 1,013 பிரஸ்தாபிகள் ஜூனில் வெளி ஊழிய அறிக்கை செய்தனர்.