தேவராஜ்ய செய்திகள்
◆ டாமினிக்கன் ரிப்பப்ளிக் டிசம்பர் மாதம் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் 11,205 என்ற புதிய உச்சநிலையை அறிக்கை செய்தது. கடந்த டிசம்பரிலிருந்து பைபிள் படிப்புகள் 18 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 20,067-க்கு உயர்ந்திருக்கிறது. மறுசந்திப்புகளில் 25 சதவிகித அதிகரிப்பு.
◆ கையானா கடந்த ஆண்டு சராசரிக்கும் மேலாக 8 சதவிகித அதிகரிப்பைக் கண்டது. டிசம்பரில் பிரஸ்தாபிகளின் உச்சநிலை 1,468.
◆ ஐயர்லாந்து டிசம்பரில் 2,930 பிரஸ்தாபிகளின் அறிக்கையோடு தொடர்ச்சியான ஒன்பதாவது உச்சநிலையை எட்டியது. 298 ஒழுங்கான பயனியர் உச்சநிலையையும் அது எட்டியது.
◆ இத்தாலி, டிசம்பர் மாதம் 1,63,692 பேரைக் கொண்ட பிரஸ்தாபிகளில் ஒரு புதிய உச்சநிலையை எட்டியது. கடந்த ஆண்டு சராசரியைக் காட்டிலும் 5 சதவிகித அதிகரிப்பு. சபை பிரஸ்தாபிகள் ஊழியத்தில் சராசரியாக 13.1 மணிநேரத்தை எட்டினார்கள்.
◆ மார்ட்டினிக் டிசம்பர் மாதத்தில் 2,649 பிரஸ்தாபிகளுடன் ஒரு புதிய உச்சநிலையை எட்டியது. 9 சதவிகித அதிகரிப்பு அவர்களுடைய தொடர்ச்சியான நான்காவது உச்சநிலை. அவர்களுடைய விசேஷ மாநாடு தினத்தன்று 4,941 பேர் வந்திருந்தார்கள், 77 பேர் முழுக்காட்டப்பட்டார்கள்.
◆ பெரு, தொடர்ந்து நல்ல வளர்ச்சியை காண்பதாய் டிசம்பரில் 29,187 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையை அறிக்கை செய்தது. ஓராண்டுக்கு முன்பு இதே மாதத்திலிருந்ததைக் காட்டிலும் 11 சதவிகித அதிகரிப்பு சபை பிரஸ்தாபிகள் 14.8 மணிநேரங்களை வெளி ஊழியத்தில் அறிக்கை செய்தார்கள்.
◆ ரியூனியன் டிசம்பரில் 10 சதவிகித அதிகரிப்பைக் கொண்டிருந்தது. 1,520 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலை. அவர்களுடைய விசேஷ மாநாடு தினத்தன்று 2,897 பேர் வருகை தந்தார்கள். 65 பேர் முழுக்காட்டப்பட்டார்கள்.
◆ சூரினாமினுடைய புதிய உச்சநிலை, டிசம்பரில் 1,369 பிரஸ்தாபிகள். கடந்த ஆண்டு டிசம்பரைக் காட்டிலும் 12 சதவிகித அதிகரிப்பு.