தேவராஜ்ய செய்திகள்
◆ மொசாம்பிக் யெகோவாவின் சாட்சிகளின் சங்கத்துக்கு பிப்ரவரி 11, 1991 அன்று அந்தத் தேசத்தில் சட்டப்பூர்வமான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
◆ டோகோ பிப்ரவரியில் 5,582 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்ச நிலையை அறிக்கை செய்தது, இது 15 சதவீத அதிகரிப்பாகும். தடைகள் இருந்தபோதிலும், வெளி ஊழியத்தில் பிரஸ்தாபிகள் 15.7 மணிநேரங்கள் என்ற சராசரியையும், துணைப்பயனியர்கள் 64.7 மணிநேரங்கள் என்ற சராசரியையும் அடைந்தனர்.
◆ பஹாமாஸ் பிப்ரவரியில் 1,219 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தது. புதிய கிளைக்காரியாலய கட்டிட வேலையில் நல்ல முன்னேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
◆ சைப்ரஸ் பிப்ரவரியில் 1,314 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தது, பைபிள் படிப்புகளிலும் ஒரு புதிய உச்சநிலை இருந்தது.
◆ செயின்ட் லூசியா பிப்ரவரியில் 465 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையை அறிக்கை செய்தது.
◆ சாலமோன் தீவுகள் பிப்ரவரியில் 809 பிரஸ்தாபிகள் என்ற உச்சநிலையைக் கொண்டிருந்தது.
◆ டஹிட்டி பிப்ரவரியில் தங்கள் நாற்பதாவது தொடர்ச்சியான பிரஸ்தாபிகள் உச்சநிலையை கொண்டிருந்தது, 1,246 பேர் அறிக்கை செய்தனர். பைபிள் படிப்புகளின் எண்ணிக்கை 1,578 என்ற மற்றொரு உச்சநிலையை எட்டியது.