தேவராஜ்ய செய்திகள்
பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள்: மே மாதத்தில் பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலை 136 ஆக இருந்தது. அவர்கள் 206 பைபிள் படிப்புகளை நடத்தினர், அதுவும் ஒரு புதிய உச்சநிலை.
ஃபிஜி: மே மாதத்தில் 1,642 பேர் அறிக்கை செய்ததோடு 77-வது தொடர்ச்சியான பிரஸ்தாபிகளின் உச்சநிலையை அடைந்தனர். அவர்கள் மணிநேரங்களில் 32-வது தொடர்ச்சியான உச்சநிலையையும், மறுசந்திப்புகளிலும் பைபிள் படிப்புகளிலும் 48-வது தொடர்ச்சியான உச்சநிலையையும் அடைந்தனர். மே மாதத்தில் அந்தக் கிளைக்காரியாலய பிராந்தியத்தில் ஐந்து புதிய சபைகள் ஏற்படுத்தப்பட்டன.
கீனியா: முதல் முறையாக பிரஸ்தாபிகளில் 6,000 என்ற எண்ணிக்கையை அவர்கள் தாண்டினர். மே மாதத்தில் 6,065 என்ற புதிய உச்சநிலை இருந்தது.
கொரியா: மே மாதத்தில் 65,260 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்தனர். கடந்த 89 மாதங்களில் இது அவர்களுடைய 84-வது உச்சநிலையாக இருந்தது.
பாப்புவா நியு கினி: பிரஸ்தாபிகளில் மற்றொரு உச்சநிலை மே மாதத்தில் 2,547 பேர் அறிக்கை செய்தலோடு எட்டப்பட்டது.
யு.எஸ். வெர்ஜின் தீவுகள்: மே மாதத்தில் 19 சதவிகித அதிகரிப்பு 560 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்ச நிலையை கொண்டு வந்தது.