தேவராஜ்ய செய்திகள்
அர்ஜன்டினா: பிப்ரவரியில் பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலை 98,601-ஐ சென்றெட்டியது. அதே மாதத்தின்போது, 507 புதிய சீஷர்கள் முழுக்காட்டப்பட்டனர்.
பெனின்: ஒரு புதிய உச்சநிலையாக 2,967 பிரஸ்தாபிகள் பிப்ரவரியில் அறிக்கைசெய்தனர். ஓர் ஆண்டுக்கு முன்பு இருந்த நடவடிக்கையோடு ஒப்பிடுகையில், பிரஸ்தாபிகள் 13.8 சதவீதமும், மணிநேரங்கள் 6.1 சதவீதமும், பத்திரிகை அளிப்புகள் 40.6 சதவீதமும், பைபிள் படிப்புகள் 25.1 சதவீதமும் உயர்ந்திருக்கின்றன.
ஈக்வடார்: பிப்ரவரியில் 23,176 பிரஸ்தாபிகள் வெளி ஊழிய அறிக்கைசெய்தனர், 42,219 வீட்டுப் பைபிள் படிப்புகள் நடத்தினர். இது கடந்த வருட பிப்ரவரியைவிட 2,180 பிரஸ்தாபிகள் மற்றும் 3,183 பைபிள் படிப்புகளின் அதிகரிப்பாக இருந்தது.
அயர்லாந்து: பிப்ரவரியில் 4,093 பேர் அறிக்கைசெய்ததுடன் 59-வது தொடர்ச்சியான பிரஸ்தாபி உச்சநிலையைச் சென்றெட்டியது. ஒரு புதிய உச்சநிலையாக 2,682 வீட்டுப் பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டுவருவதுடன் எதிர்கால வளர்ச்சி நம்பிக்கையளிப்பதாய் தோன்றுகிறது.
பெரு: பிப்ரவரியில் பெரு 43,366 பிரஸ்தாபிகளையும் 3,69,437 மறு சந்திப்புகளையும் 68,090 வீட்டுப் பைபிள் படிப்புகளையும் அறிக்கைசெய்தது. லிமாவில் புதிதாகக் கட்டப்பட்ட ஓர் அசெம்பிளி மன்றம் பிரதிஷ்டை செய்யப்பட்டது, 21,240 பேர் ஆஜராயிருந்தனர்.
டஹிடி: பிப்ரவரியில் 1,604 பிரஸ்தாபிகள் அறிக்கையுடன் 13 சதவீத அதிகரிப்பைச் சென்றெட்டியது. இது டஹிடி பிரஸ்தாபிகளின் 64-வது தொடர்ச்சியான உச்சநிலையாகும்.
ஜயர்: இந்த நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் கலகங்கள் இருந்தபோதிலும், பிப்ரவரியில் சகோதரர்கள் ஒரு புதிய உச்சநிலையாக 71,098 பிரஸ்தாபிகளை அறிக்கைசெய்தனர். அது கடந்த வருட சராசரியைவிட 9 சதவீத அதிகரிப்பாகும். சபை பிரஸ்தாபிகள் சராசரியாக 16.8 மணிநேரங்களை வெளி ஊழியத்தில் செலவழிக்கிறார்கள். இப்பொழுது ஜயர் 6,000-க்கும் மேற்பட்ட ஒழுங்கான பயனியர்களைக் கொண்டிருக்கிறது.
அருபா, குவாடெலூப், மார்டினிக், செயின்ட் கிட்ஸ், மற்றும் ஐ.மா. வர்ஜின்தீவுகள், கரிபியன் பகுதியிலுள்ள அனைத்தும், பிப்ரவரியில் பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலைகளை அறிக்கைசெய்கின்றன.