தேவராஜ்ய செய்திகள்
◼ மேற்காப்பிரிக்க நாடுகளான பெனின், காமரூன், ஐவரி கோஸ்ட், கானா, லைபீரியா மற்றும் நைஜீரியா, பிப்ரவரியில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் புதிய உச்சநிலையை அடைந்தன.
◼ லைபீரியாவுக்குள் அகதிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்; அந்நாட்டில் சத்தியத்திற்கான பசிதாகம் இருக்கிறது. பிப்ரவரியில் 2,286 பிரஸ்தாபிகள் என்ற உச்சநிலையை எட்டினது; 6,277 வீட்டு பைபிள் படிப்புகள் அறிக்கை செய்யப்பட்டன.
◼ மகாவோ, பிரஸ்தாபிகளில் கடந்த ஆண்டின் சராசரியைவிட 16 சதவீதம் அதிகரிப்பை பெற்றிருந்தது; அங்கே பிப்ரவரியில் 135 பேர் அறிக்கை செய்தனர்.
◼ தென் பசிபிக், பிஜி, சாலமோன் தீவுகள், டஹிடி ஆகியவை பிப்ரவரியில் பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையை அறிக்கை செய்தன.
◼ மடகாஸ்கர் தீவு 9,484 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையை பெற்றது; அது கடந்த ஆண்டின் சராசரியைவிட 14 சதவீத அதிகரிப்பு. பிப்ரவரியில் அவர்கள் 20,000-க்கும் அதிகமான வீட்டு பைபிள் படிப்புகளையும் அறிக்கை செய்தனர்.