தேவராஜ்ய செய்திகள்
பொலிவியா: அக்டோபரில் 9,588 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையை அந்தக் கிளைக்காரியாலயம் அறிக்கைசெய்தது. பைபிள் படிப்புகள், மறுசந்திப்புகள், சபை பிரஸ்தாபிகள், ஒழுங்கான பயனியர்கள் ஆகியவற்றிலும் புதிய உச்சநிலையை அவர்கள் சென்றெட்டினார்கள். சபை பிரஸ்தாபிகள் வெளி ஊழியத்தில் சராசரியாக 14 மணிநேரங்களைச் செலவிட்டனர்.
எஸ்டோனியா: செப்டம்பரில் 1,753 பிரஸ்தாபிகள் ஊழிய அறிக்கைசெய்தனர். இது, கடந்த வருடத்தின் மாதாந்தர சராசரியைவிட 24 சதவீத அதிகரிப்பாக இருந்தது.
இந்தியா: டிசம்பர் 1993-ன் முடிவில், அந்தத் தேசத்தில் நடந்த மாவட்ட மாநாடுகளிலேயே மிகப் பெரிய மாநாடு கோட்டயத்தில் நடத்தப்பட்டது, ஆஜரானவர்களின் உச்சநிலை எண்ணிக்கை 6,967, மேலும் 314 பேர் முழுக்காட்டுதல் பெற்றனர். இந்த முழுக்காட்டுதல் எண்ணிக்கை, இந்தியாவில் முந்திய ஒரு மாநாட்டில் எடுத்த மிகப் பெரிய முழுக்காட்டுதல் எண்ணிக்கையைவிட 66% அதிகமாகும்.
1993-ல் நடந்த 16 “தெய்வீக போதனை” மாவட்ட மாநாடுகளில் மொத்தமாக 21,320 பேர் ஆஜராயிருந்தனர், இவற்றில் 825 பேர் முழுக்காட்டப்பட்டனர். ஆஜராயிருந்தோரின் இந்த எண்ணிக்கை, இந்தியாவில் 1992-ல் நடந்த “ஒளி கொண்டுசெல்வோர்” மாவட்ட மாநாடுகளுக்கு ஆஜராயிருந்தவர்களின் எண்ணிக்கையைவிட மூன்று சதவிகித அதிகரிப்பைக் குறிக்கிறது, ஆனால் முழுக்காட்டுதல் எண்ணிக்கையானது, கடந்த வருடத்தில் நடந்த மாநாடுகளில் முழுக்காட்டப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையைவிட 15% அதிகம் என்ற மிகவும் உற்சாகமூட்டும் ஓர் அதிகரிப்பைக் காண்பிக்கிறது.
லிதுவேனியா: 871 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையை அக்டோபர் மாத அறிக்கை காட்டுகிறது, இது, அக்டோபர் 1992-ஐ விட 39 சதவிகித அதிகரிப்பாகும்.
துருக்கி: “தெய்வீக போதனை” மாவட்ட மாநாட்டிற்கு 1,510 பேர் ஆஜராயிருந்தனர், 44 பேர் தங்களுடைய ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்திக் காட்டினர். அந்த மாநாட்டைப் பற்றி உள்ளூர் தொலைக்காட்சி நல்ல முறையில் அறிக்கை செய்தது.