அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள்: ஜூன்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர், 40 ரூபாய் நன்கொடைக்கு. ஜூலை: நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? சிற்றேடு 4.00 ரூபாய் நன்கொடைக்கு. இது கிடைக்கவில்லையென்றால் பின்வரும் எந்தச் சிற்றேடுகளையும் அதே நன்கொடைக்கு அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, என்றைக்கும் நிலைத்திருக்கும் தெய்வீக நாமம் (The Divine Name That Will Endure Forever), அல்லது பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம். ஆகஸ்ட், செப்டம்பர்: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம். பெரியது 40.00 ரூபாய்க்கும் சிறியது 20.00 ரூபாய் நன்கொடைக்கும். குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளிப்புத் திட்டத்திற்கான பிரசுரங்கள் எதையாவது இன்னும் ஆர்டர் செய்யாத சபைகள் தங்களுடைய அடுத்த புத்தக ஆர்டர் நமூனா (S-14)-ல் ஆர்டர் செய்யவேண்டும்.
◼ ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, கேரளாவில் “தெய்வீக போதனை” மாவட்ட மாநாடுகள் இரண்டு மட்டுமே திட்டமிடப்பட்டிருக்கின்றன—ஒன்று கோட்டயத்தில், டிசம்பர் 23-26 வரை, மற்றொன்று கோழிக்கோடு, டிசம்பர் 30 முதல் ஜனவரி 2, 1994 வரை. என்றபோதிலும், நாங்கள் கோழிக்கோடு மாநாட்டிற்கு குறிப்பிட்ட எந்த சபையையும் அல்லது வட்டாரங்களையும் நியமிக்கவில்லை என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம். பதிலாக, நாங்கள் கேரளாவிலுள்ள அனைத்து சாட்சிகளையும் அக்கறைகாட்டும் நபர்களையும் கோட்டயம் மாவட்ட மாநாட்டிற்கு ஆஜராவதற்கு உற்சாகப்படுத்துகிறோம். சிலசமயங்களில் குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் தங்களுடைய வீட்டு உத்தரவாதங்களினால், அதே மாநாட்டில் கலந்துகொள்ள முடியாத காரணத்தினால், இரண்டாவது மாநாடு கோழிக்கோட்டில் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கிறது—ஆனால் இது முக்கியமாக கோட்டயம் மாநாட்டில் ஆஜராகாத ஆட்களுக்கே. இவ்விதமாக நாங்கள் கோழிக்கோட்டில் ஒரு சிறிய மாநாட்டை மட்டுமே ஏற்பாடு செய்வோம், ஆனால் கோட்டயத்தில், இந்த நாட்டில் நடைபெற்ற மாநாடுகளிலேயே ஒருவேளை மிகப்பெரிய மாநாட்டைக் கொண்டிருக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
◼ பின்வரும் பிரசுரங்களுக்கான தற்போதைய விலையைத் தயவுசெய்து கவனியுங்கள்:
விவரம் பய. சபை
உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இண்டெக்ஸ் 1930-85 75.00 105.00
உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இண்டெக்ஸ் 1986-90 45.00 60.00
◼ திரும்பவும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:
தமிழ்: “ராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தி.”