விடுமுறைக்கால நினைப்பூட்டுதல்கள்
1 நம்மில் அநேகர் விடுமுறைக்கால மாதங்களின்போது, சில காலத்திற்கு நம்முடைய தாய் சபையைவிட்டு இருந்திருக்கிறோம் அல்லது இருப்போம்; மேலும் நாம் அனைவரும் இந்த வருடத்தின் பிற்பகுதியில் மாவட்ட மாநாடுகளுக்கு ஆஜராவோம், ஒருவேளை இதை விடுமுறைக்காலப் பகுதியோடு சேர்த்து எடுப்போம். ஒரு மாதக் கடைசியில் நாம் வேறொரு இடத்தில் இருக்கப்போகிறோமென்றால், நம்முடைய வெளி ஊழிய அறிக்கைகளைச் சபைக் காரியதரிசியிடம் அனுப்புவதை நாம் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். சபையின் மாதாந்திர அறிக்கையோடு சேர்க்கப்படுவதற்கு கொஞ்சம் முன்பாகவே இது செய்யப்படவேண்டும், இதைக் காரியதரிசி தொகுத்து, மாதத்தின் ஆறாம் தேதிக்குள் சங்கத்திற்கு அனுப்புவார்.
2 நாம் சந்தர்ப்பச் சாட்சிகொடுப்பதற்கான வாய்ப்புகளுக்காகவும் விழிப்புள்ளவர்களாய் இருக்கவேண்டும். இப்படிப்பட்ட வாய்ப்புகள் பயணம்செய்யும்போது, உறவினர்களைச் சந்திக்கும்போது, அல்லது நாம் சந்திக்கிற மற்றவர்களுடன் பேசும்போது எழும்பலாம். இயேசு செய்ததுபோல ஒரு சாட்சிகொடுப்பதற்கு அச்சமயங்களை நாம் கருதுகிறோமா? சந்தர்ப்பச் சாட்சிகொடுப்பதிலிருந்து அவர் தன்னை நிறுத்தவில்லை. (யோவா. 4:5-30) அப்போஸ்தலன் பவுல் இதுபோன்று ‘வாய்ப்பான காலத்தை வாங்கவும்,’ நல்ல பலன்களை மகிழ்ந்து அனுபவிக்கவும் செய்தார். (எபே. 5:16; அப். 17:17; 28:30, 31; கொலோ. 4:5) சந்தர்ப்பச் சாட்சிகொடுத்தலில் ஈடுபடுவதற்குத் திட்டவட்டமான ஏற்பாடுகளைச்செய்யுங்கள். காலத்திற்கேற்ற சில பேச்சுக்குறிப்புகளை, அக்கறையைத் தூண்டுவதற்கு ஒரு பத்திரிகையை அல்லது ஒரு துண்டுப்பிரதியைக் கையில் வைத்திருக்க நன்கு ஆயத்தமானவர்களாய் இருங்கள்.
3 இந்த நினைப்பூட்டுதல்களைக் கவனமாகப் பின்பற்றுவதன்மூலம், நம்முடைய விடுமுறைக்காலத்தையும் பயணநேரத்தையும் ஞானமாகப் பயன்படுத்த நாம் நிச்சயமுள்ளவர்களாய் இருப்போம், யெகோவாவுக்கு நம்முடைய ‘முதற்பலனைச்’ செலுத்திக்கொண்டும் இருப்போம்.—நீதி. 3:9.