கேள்விப் பெட்டி
◼ ஒருவர் தன்னை முழுக்காட்டுதலுக்காக அளிக்கும்போது எது தகுந்த உடையாகக் கருதப்படும்?
உலகத்தின் வித்தியாசப்பட்ட பகுதிகளில் உடையின் தராதரங்கள் வேறுபடுகையில், “அடக்கத்தோடும் தெளிந்த புத்தியோடும்” உடுத்துவதற்கான பைபிளின் அறிவுரை எல்லா கிறிஸ்தவர்களுக்கும், அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் சரி, அதேதான். (1 தீ. 2:9, NW) முழுக்காட்டுதலுக்கான தகுந்த உடை எது என்பதைச் சிந்திக்கும்போது இந்த நியமம் பொருத்தப்படவேண்டும்.
ஜூன் 1, 1985, காவற்கோபுரம் (ஆங்கிலம்), பக்கம் 30-ல் முழுக்காட்டுதல் எடுக்கப்போகிற ஒரு நபருக்குப் பின்வரும் இந்த ஆலோசனையைக் கொடுக்கிறது: “நிச்சயமாகவே உபயோகிக்கிற குளியல் உடை மாதிரியில் அடக்கம் இருக்கவேண்டும். நவநாகரீக மாதிரி உடையமைப்பவர்கள் பால் தன்மையை பகட்டான விதத்தில் வெளியரங்கமாகக் காட்ட, ஏறக்குறைய முழு உடையற்ற உருவை முயன்றடையப்பார்க்கிற இன்றைய நாட்களில் இது முக்கியமாய் இருக்கிறது. கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய மற்றொரு அம்சம், உலர்ந்திருக்கும்போது அடக்கமாய்த் தோன்றுகிற சில உடைகள், ஈரமாகும்போது அடக்கமாய்த் தோன்றுவதில்லை. முழுக்காட்டுதல் பெறுகிற எவரும், முழுக்காட்டுதல்போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில் கவனத்தைச் சிதறவைப்பதற்கோ இடறுவதற்கோ ஒரு காரணமாக இருக்கும்படி விரும்பமாட்டார்.—பிலிப்பியர் 1:10.”
இந்த ஆலோசனைக்கு இசைவாக, முழுக்காட்டப்படுகிறவர்கள் அந்தச் சமயத்தின் முக்கியத்துவத்தை மனதில்கொண்டு, அடக்கமான உடையை அணிய விரும்புவர். இவ்விதமாக மிக சிக்கனமான நீச்சல் உடை அல்லது ஈரமாகும்போது அடக்கமற்றவிதமாக உடலோடு ஒட்டிக்கொள்கிற ஒன்று, ஒரு கிறிஸ்தவனுக்கு பொருத்தமற்ற ஆடையாக இருக்கும், இதைத் தவிர்க்கவேண்டும். இதுபோலவே, ஒருவர் தலைமுடியைச் சீவாமல் பரட்டையாக அல்லது ஒழுங்கீனமானத் தோற்றத்தில் இருப்பது பொருத்தமற்றதாக இருக்கும். மேலும், உலகப்பிரகாரமான பழமொழிகளோ விளம்பரப்படுத்தும் சுலோகங்களுடன்கூடிய T-சர்ட்டுகளோ அணிவது பொருத்தமானதாக இருக்காது.
முழுக்காட்டுதல் பெறுகிற மாணாக்கரோடு நியமிக்கப்பட்ட மூப்பர்கள் முழுக்காட்டுதலுக்கான கேள்விகளை விமர்சனம் செய்கிறபோது, தகுதியான ஆடையை அணிவதற்கான முக்கியத்துவத்தைக் கலந்துபேசுவது நல்ல சமயமாக இருக்கும். இந்த முறையில் அந்த நிகழ்ச்சியின் பெருந்தன்மை காத்துக்கொள்ளப்படும், மேலும் நாம் தொடர்ந்து உலகத்தாரிலிருந்து வித்தியாசமானவர்களாகத் தனிப்பட்டுக் காணப்படுவோம்.—யோவான் 15:19-ஐ ஒத்துப்பாருங்கள்.