சாட்சிகொடுப்பதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் ஆவலுடன் பற்றிக்கொள்ளுங்கள்—பகுதி II
1 சந்தர்ப்ப சாட்சி கொடுத்தல் மூலமாக ஆயிரக்கணக்கான ஆட்கள் சத்தியத்துக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள். இவ்வகையான சாட்சிகொடுத்தல் முறையை முழுமையாக பயன்படுத்திக்கொள்வோமானால், இன்னும் லட்சக்கணக்கான ஆட்களை நற்செய்தியைக் கொண்டு எட்டமுடியும். யெகோவாவின் ஊழியக்காரராக, நாம் நம்முடைய வெளிச்சத்தைத் தொடர்ந்து பிரகாசிக்கச் செய்ய வேண்டும். இதை நாம் தனிப்பட்ட விதத்தில் முழுமையாகச் செய்வது எப்படி?—மத். 5:15, 16; பிலி. 2:15.
2 சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்புகளை உண்டுபண்ணுவதற்குப் பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. மதிய உணவு இடைவேளையின்போது, ஓர் அலுவலகத்தில் காத்திருக்கும்போது, அல்லது பொது பேரூந்தில் பிரயாணம் செய்யும்போது சில சகோதரர்கள் பைபிளையோ சங்கத்தின் பத்திரிகைகளையோ அல்லது புத்தகங்களையோ வாசிப்பதை ஒரு பழக்கமாக்கிக்கொள்கின்றனர். பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரால் காட்டப்படும் பிரதிபலிப்புக்கோ அல்லது அக்கறைக்கோ விழிப்புணர்வோடு இருப்பதன் மூலம் வெறுமென நாம் வாசித்துக்கொண்டிருக்கும் பகுதியிலிருந்து ஒரு கருத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் ஓர் உரையாடல் நிகழக்கூடும்.
3 பொதுவில் உள்ளூர் மக்களுக்கு ஆர்வமுள்ள ஒரு பொதுவான விவகாரத்தின் பேரில் ஒருவரிடம் உரையாடலைத் துவங்குவது கடினமான காரியமல்ல. நாம் யெகோவா தேவனிடமாக ஜெபம் செய்து, பின்பு முயற்சி எடுப்பதன் மூலம் சிறந்த பலன்களை அனுபவித்து மகிழலாம். சுருக்கமான சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்குரிய ஓர் எளிய முறையானது நமது துண்டுப் பிரதிகளில் ஒன்றை கொடுப்பதாகும். முக்கியமாய் உரையாடலுக்கு மிகுதியான நேரம் செலவழிக்க முடியாத சூழ்நிலைமைகளில் இது நடைமுறையானது. துண்டுபிரதிகள் சிறிதாகவும் சுலபமாக எடுத்துச் செல்லக்கூடியதாகவும் ஆனால் சக்தி வாய்ந்த தகவல்கள் அடங்கியதாகவும் இருக்கின்றன. நம்மில் பெரும்பாலர் அதனை அடிக்கடி பயன்படுத்தலாம்.
நியாயங்கள் புத்தகத்தைப் பயன்படுத்துங்கள்
4 ராஜ்ய பிரசங்கிப்பு வேலையின் எல்லா அம்சங்களுக்கும் ஒரு நடைமுறையான ஏது நியாயங்கள் புத்தகமாகும். பக்கங்கள் 9-15-ல் உள்ள அநேக முன்னுரைகள் அதோடுகூட பக்கங்கள் 15-24 வரை உள்ள “உரையாடலை நிறுத்தும் கூற்றுகள்” என்ற தலைப்பின் கீழுள்ள தகவல்களை சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்வதற்கும் உரையாடலைத் துவங்குவதற்கும் பயன்படுத்தலாம். உதாரணமாக, பக்கம் 11-ல் உள்ள ஒரு முன்னுரை சொல்வதாவது: “இந்த வாரத்தில் இதை நீங்கள் செய்தித்தாளில் வாசித்தீர்களா? (கத்தரித்து வைத்திருக்கும் பொருத்தமான செய்தித்தாள் பகுதிகளைக் காண்பியுங்கள்.) நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் . . . ?” உரையாடலைத் துவங்குவதற்கு ஆ எவ்வளவு எளிய மற்றும் வலிமைவாய்ந்த ஒன்று! ஒட்டுமொத்தமான அணுசக்தி யுத்தத்தைக் குறிப்பிடுவதற்காக “அர்மகெதோன்” என்ற பதத்தை பயன்படுத்தும் பிரபலமான ஆட்களைக் குறித்து தகவல் பரப்பு மையங்கள் என்ன சுட்டிக்காட்டியிருக்கின்றன என்பதை அந்த நபர் கவனித்திருக்கிறாரா என்பதைப்பற்றி கேட்கலாம். அதன் பின்பு அர்மகெதோன் மனிதவர்க்கத்துக்கு எதைக் குறிக்கும் என்பதைக் குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்று நாம் கேட்கலாம். பக்கம் 9-ல் உள்ள அந்தத் தகவலை உரையாடலுக்கு இசைவாக மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
5 நாம் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும் வேலையில் ஈடுபடும்போதெல்லாம் மற்றவர் தன் கருத்துகளை வெளியிடுவதற்கு அனுமதிக்க வேண்டும். எல்லாச் சமயங்களிலும் நாம் அன்பாதரவான மரியாதைக்குரிய பண்புகளை வெளிக்காட்ட வேண்டும். மற்றவர் என்ன சொல்லுகிறார் என்பதற்கு நாம் கவனமாக செவிக்கொடுப்போமானால், அவருடைய ஆர்வம் என்ன என்பதை நாம் தீர்மானித்து அவருடைய ஆவிக்குரிய பசியைத் தூண்டக்கூடிய வார்த்தைகளை பேசுகிறவர்களாக இருப்போம். (நீதி. 25:11) கூடுமானால், ஆர்வம் காட்டும் ஆட்களின் பெயர்களையும் விலாசத்தையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது ஆர்வத்தைத் தூண்டுவதற்கு கூடுதலான சந்திப்புகள் செய்யலாம். சாட்சி கொடுக்கும் வேலையில் செலவிடும் நேரத்தைத் திருத்தமாக அறிக்கை செய்யவதற்கு அதன் ஒரு பதிவை வைத்துக்கொள்ளவேண்டும்.
6 சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும் வேலையில் வெற்றி காணவில்லை என்று நீங்கள் உணர்த்தால் சோர்வடையாதீர்கள். சந்தர்ப்ப சாட்சி மூலமாக சத்தியத்தின் விதையை விதைப்பதற்கு நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஒருவேளை பிற்பாடு கனிகொடுக்கலாம். பெரும்பாலும் சந்தர்ப்ப சாட்சி மூலமாக விதைக்கப்பட்ட சத்தியங்கள் திரளாக குவியும்போது தானே பலன்தருகிறது. நாம் அளிப்பதற்கு பைபிள் பிரசுரங்கள் நம்மிடம் இல்லையென்றாலும் வாய்மொழியாக சாட்சி கொடுத்தல் மிகுதியான நன்மைகளைச் சாதிக்கக்கூடும். சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்காக ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டால் நாம் அதன் மூலம் எட்டக்கூடிய லட்சக்கணக்கான ஆட்கள் இருக்கின்றனர்.