சாட்சிகொடுப்பதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் ஆவலுடன் பற்றிக்கொள்ளுங்கள்—பகுதி I
1 எபிரெய கிறிஸ்தவர்கள் எழுதுகையில் அப்போஸ்தலனாகிய பவுல் பின்வரும் அறிவுரையைக் கொடுத்தான்: “ஆகையால் அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தாத்திர பலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.’ (எபி. 13:15) இதைச் செய்வதற்குரிய ஒரு வழியானது நமது சபையின் வெளி ஊழிய ஏற்பாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பதன்மூலமாகும். கடவுளுக்கு ஸ்தாத்திர பலிகளைச் செலுத்துவதற்கான மற்றொரு பலன் மிகுந்த வழியானது சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதன் மூலமாகும்.
2 நம்மில் அநேகர் நம்முடைய அனுதின வேலைகளின்போது மற்றவர்களோடு தொடர்புகொள்ள வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. அந்த வாய்ப்புகளை கண்டுணர்ந்துகொள்வதில் நாம் விழிப்புள்ளவர்களாயிருந்து, பின்பு முயற்சி செய்வோமானால், இந்தச் சந்தர்ப்ப சாட்சி மூலம் நாம் அதிகமான ராஜ்ய சத்திய விதைகளை தூவக்கூடிய நிலையிலிருப்போம். சாட்சிக் கொடுப்பதற்கான வாய்ப்பைத் திறக்கக்கூடிய உரையாடலைத் துவங்குவதற்கு உலக சூழ்நிலைமைகளைப் பற்றிய அல்லது கவலைக்குரிய உள்ளூர் சம்பவங்களைப் பற்றிய ஒரு சுருக்கமான குறிப்பைச் சொல்வதைக் காட்டிலும் அதிகமான முயற்சி ஒன்றும் தேவைப்படாது. ஓர் ஆளின் சூழ்நிலைமைகள் மற்றும் பிரதிபலிப்பு ஆகியவற்றைப் பொருத்து நாம் பிரசுரத்தையும்கூட அளிக்கமுடியும்.
ஆயத்தமாயிருங்கள்
3 வெற்றிகரமான சந்தர்ப்ப சாட்சிக்கு முன்தயாரிப்பு தேவைப்படுகிறது. அந்த முயற்சியை எடுக்க நாம் மனமுள்ளவர்களாக இருக்கிறோமா? நாள் முழுவதும் நாம் என்ன செய்யப்போகிறோம்? நாம் அலசிப்பார்க்கையில் நாம் தொடர்புக்கொள்ள நேரிடும் ஆட்களைப்பற்றி எண்ணிப் பாருங்கள். உரையாடலைத் துவங்க நாம் என்ன சொல்லாம் என்பதைச் சிந்தியுங்கள். நாம் நமது மனதிலேயே முன் ஆயத்தம் செய்திருக்க வேண்டும். சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதை சுலபமானதாக காணவேண்டும். பிரதிபலிக்கக்கூடிய ஆட்களுக்கு அளிப்பதற்காக துண்டுப்பிரதிகள், பத்திரிகைகள் அல்லது மற்ற பிரசுரங்களை கையில் வைத்திருங்கள். ஒரு பைபிளை வைத்திருக்கக்கூடுமா? கையடக்கமான ஆங்கில பைபிள் உங்கள் கைப்பையிலோ அல்லது மேற்சட்டை ஜோபியிலோ சுலபமாக வைக்கப்படலாம். சந்தர்ப்பம் கிடைக்கும்போது பயன்படுத்தப்படலாம். நல்ல தயாரிப்புடனிருப்பதற்கு நாம் செய்யக்கூடிய காரியங்கள் வேறு ஏதாகிலும் இருக்கின்றனவா?
4 பைபிள் தீர்க்கதரிசனங்கள் சம்பந்தப்பட்ட தற்கால நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்களை நாம் அறிந்தவர்களாக இருப்பது அவசியம். பின்பு சத்தியத்திற்காக பசியுள்ள ஆட்களை கவரக்கூடிய சம்பாஷணைக்குப் பைபிள் பேச்சுப் பொருள்களை அறிமுகப்படுத்த ஆயத்தமாயிருக்க வேண்டும். நம்முடைய பத்திரிகைகளில் காணப்படும் “உலகத்தை கவனித்தல்,” “செய்திகளின் பேரில் உட்பார்வை” போன்ற சிறப்பு அம்சங்கள் இவ்விஷயத்தில் நமக்கு மதிப்பு வாய்ந்த உதவிகளாக இருக்கக்கூடும். இப்படிப்பட்ட செய்தி தகவல்களை நாம் மனதில் கொண்டிருப்போமானால் அந்த தகவல்களில் ஒன்றை உள்ளத்தைத் தொடும் முறையில் அறிமுகப்படுத்தும் நம்பிக்கையை நாம் கொண்டிருக்கலாம்.
பேசுவதற்கு முந்திக்கொள்ளுங்கள்
5 மற்ற ஜனங்களோடு தொடர்புகொள்ளும் சந்தர்ப்பங்கள் எப்பொழுதெல்லாம் ஏற்படுகிறதோ சரியாக அதுதானே சாட்சிகொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கிறது. சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் இருக்கும் பிரஸ்தாபிகளும்கூட டாக்டர்களிடமும் நர்சுகளிடமும் மருத்துவ பணியாட்களிடமும் சத்தியத்தைக் குறித்துப் பேசுவதில் தங்களுடைய சூழ்நிலைகளை அனுகூலப்படுத்திக்கொண்டு திறம்பட்டவர்களாக இருந்திருக்கின்றனர். மற்ற பிரஸ்தாபிகள் வேலை செய்யுமிடங்களில் பள்ளிக்கூடங்களில் தங்களுடைய உணவு இடைவேளைகளையும், காத்து நிற்கும் சமயங்களையும் பயன்படுத்தியிருக்கின்றனர். சாட்சி கொடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் கடைக்குச் செல்லும்போது, விடுமுறை நாட்களை கழிக்கும்போது, பஸ்ஸில், விமானத்தில், ரயிலில் பிரயாணம் செய்யும்போது கிடைக்கலாம். ஒருசில பிரஸ்தாபிகள் வீட்டிலேயே வியாபாரிகளிடம் அஞ்சல்காரரிடம், அயலகத்தாரிடம், உறவினர்களிடம், மேலும் தங்களைச் சந்திக்க வரும் மற்றவர்களிடம் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதில் அதிக பலனுள்ளவர்களாக இருந்திருக்கின்றனர்.—1970 வருடாந்தர புத்தகம், பக்கங்கள் 97-8, 231-2 மற்றும் 263-4 பாருங்கள்.
6 “தேவ பக்தி” மாவட்ட மாநாடு சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்குரிய சிறந்த வாய்ப்பை அளிக்கிறது. நாம் மாநாட்டின்போது அணியும் லெப்பெல் அட்டைகளும் நாம் யார் என்றும் நாம் எங்கே போகிறோம் என்றும் ஜனங்கள் கேட்கும்படி தூண்டக்கூடும். என்றாலும் நாமே உரையாடலைத் துவங்கி, நாம் மாநாட்டு பிரதிநிதிகள் என்றும் இதற்கு ஆஜராக காரணம் என்ன என்பதையும் விளக்கலாம். பெட்ரோல் நிரப்புவதற்கு நிற்கையிலும் சிற்றுண்டி சாலையில் உணவு அருந்துகையிலும் விடுதிகளில் தங்கியிருக்கையிலும் கடைக்குச் செல்லுகையிலும் வெறுமென உல்லாசமாக நடந்து செல்லுகையிலும் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்குப் பொருத்தமான வழிமுறைகளை எதிர்நோக்கியிருக்க வேண்டும்.—பிர. 11:6.
7 சத்தியத்தின் பேரிலுள்ள இருதயப்பூர்வமான போற்றுதலும் நம்முடைய காலத்தின் அவசரத்தன்மையைப் பற்றிய விழிப்புணர்வும் நாம் கொண்டிருக்கக்கூடிய மகத்தான நம்பிக்கையின் செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள நம்மைத் தூண்ட வேண்டும். சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதன் மூலம் ராஜ்ய சத்தியத்தின் விதைகளை தூவுவதில் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நாம் தொடர்ந்து அனுகூலப்படுத்திக் கொள்வோமாக.—மத். 24:14.