பட்சபாதமற்ற தன்மையைநம்முடைய ஊழியத்தில் காண்பித்தல்
1 “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல,” ஆனால் “அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்” என்று பேதுரு குறிப்பிட்டார். (அப். 10:34, 35) இன்று நம்முடைய ஊழியம் தெளிவாகக் குறிப்பிடப்பட்ட அந்தச் சத்தியத்தை முழுவதுமாக அங்கீகரிக்கும் விதமாகச் செய்யப்படுகிறது. ஆகவே, நற்செய்தியுடன் அனைவரையும் நாம் சென்றெட்டுவதைத் தடைசெய்கிற எந்தத் தடையையும் சமாளிப்பதற்கு எல்லா முயற்சியையும் செய்வது முக்கியமானது.
2 சில பகுதிகளில் நாம் வீட்டுக்கு வீடு பிரசங்கிக்கையில், நம்முடைய சபையில் பயன்படுத்தப்படுகிற மொழியைப் பேசாத அல்லது புரிந்துகொள்ளாத மக்களைச் சந்திப்பது அசாதாரணமானதல்ல. மொழித் தடையானது, நாம் பிரசங்கிக்கிற ராஜ்ய செய்தியிலிருந்து சில மக்கள் முழுமையாகப் பயனடைவதைத் தடைசெய்கிறது. அவர்களுள் சிலர் சங்கேத மொழிமூலம் பேச்சுத் தொடர்புகொள்கிற செவிடர் இருக்கிறார்கள். இத்தகைய மக்களை நற்செய்தியுடன் பலன்தரத்தக்க விதமாக சென்றெட்டுவதிலிருந்து நம்மைத் தடுக்கிற மொழித் தடையைச் சமாளிப்பதற்கு உதவிசெய்யும்படி என்ன செய்யப்படலாம்?
3 சங்கமானது 1991-ல் ஐக்கிய மாகாணங்களிலுள்ள அனைத்து சபைகளுக்கும் அந்நிய மொழியினரை மீண்டும் சந்திப்பதற்கான படிவம், (Foreign Language Follow-up Slip) S-70a நமூனாவை அனுப்பியது. இந்தப் படிவத்தின் நோக்கமானது, தாங்கள் வசிக்கிற பிராந்தியத்திலுள்ள சபையின் மொழியைப் பேசாத மக்கள், சங்கேத மொழியைப் பயன்படுத்துகிற மக்கள் உட்பட, தங்களுடைய சொந்த மொழியில் ராஜ்ய செய்தியைப் பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறார்கள் என்பதை நிச்சயப்படுத்துவதற்காகும்.
4 நீங்கள் செவிடரை அல்லது சபையினால் பயன்படுத்தப்படுகிற மொழியைப் புரிந்துகொள்ளாத ஒருவரை பிராந்தியத்தில் காண்கையில், நீங்கள் தெளிவாக இந்தப் படிவங்களில் ஒன்றைப் பூர்த்திசெய்ய வேண்டும். அந்த நபர் சத்தியத்தில் அக்கறையைக் காண்பிக்காதபோதிலும் இதைப் பூர்த்தி செய்யவேண்டும். அந்த நபரின் பெயரை நீங்கள் எல்லா சமயத்திலும் பெற முடியாதவர்களாக இருக்கலாம், ஆனால் நீங்கள் விலாசத்தையும் அவர் பேசுகிற மொழியையும் குறிப்பிடவேண்டும். இராஜ்ய மன்றத்திலுள்ள வெளி ஊழிய அறிக்கைகளுக்கான பெட்டியில் இந்தப் படிவத்தை போடலாம். காரியதரிசி படிவங்களை ஒன்றுதிரட்டி, திருத்தமான மற்றும் தெளிவானத் தன்மைக்காக அவற்றை சரிபார்த்து, குறிப்பிடப்பட்ட மொழியைப் பேசுகிற மக்களைக் கவனிக்கிற மிக அருகாமையிலுள்ள சபைக்கு அல்லது தொகுதிக்கு அவற்றை அனுப்புவார்.
5 சிலருடைய விஷயங்களில் இது அவசியமில்லாமல் இருக்கலாம். உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களிலுள்ள பெரும்பாலான ஸ்பானிய-மொழி சபைகள், ஒருவேளை ஸ்பானியமொழி பேசுகிற மக்கள் அந்தப் பிராந்தியத்தில் எங்கு வசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கக்கூடும். மறுபட்சத்தில், ஒரு குறிப்பிட்ட மொழி பேசுகிற மக்கள் பரவலாக சிதறுண்டிருக்கலாம். இத்தகைய மொழியைப் பயன்படுத்துகிற சபை அல்லது தொகுதி, ஒருவேளை பரந்த பிராந்தியங்களைச் செய்துமுடிப்பதற்குத் தேவைப்படுத்தப்படலாம்; மேலும் அவர்கள் உதவிசெய்யக்கூடிய மக்களைக் கண்டுபிடிப்பதில் உதவியைப் போற்றுவார்கள்.
6 தேவையான மொழியில் சாட்சிகொடுக்கக்கூடிய எந்தச் சபையோ தொகுதியோ அந்தப் பொதுவான பகுதியில் இல்லையாகில், உள்ளூர் சபைகள் ஒன்றில் அந்த மொழி தெரிந்திருந்து அந்தச் சந்திப்பைக் கையாளக்கூடிய ஒரு பிரஸ்தாபி அங்கு இருக்கக்கூடும். நகரக் கண்காணியோடு கலந்துபேசிய பிறகும்கூட அந்த மொழி பேசுகிறவர் ஒருவரும் காணப்படவில்லையாகில், சாட்சிகொடுக்கப்படுவதைக் கவனிக்க உள்ளூர் சகோதரர்களே தங்களால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்யவேண்டும். பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! சிற்றேடு இத்தகைய சந்தர்ப்பங்களில் மிகவும் பயனுள்ளதாய் நிரூபித்திருக்கிறது.
7 மீண்டும் சந்திப்பதற்கான படிவங்களைப் பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு பிரஸ்தாபியும் விழிப்புடனிருக்க வேண்டும். S-70a நமூனாவை சபை கையிருப்பில் வைத்திருக்கவில்லையாகில், தேவையான தகவலை ஒரு சிறிய தாளில் எழுதி, மேலே விவரித்திருக்கிறபடி சமர்ப்பிக்கலாம். அவர்களுடைய மொழி எதுவாக இருந்தாலுஞ்சரி எல்லா மக்களையும் நற்செய்தியோடு சென்றெட்டுவதற்கு ஊக்கமான முயற்சிசெய்வதன் மூலம், ‘எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், சித்தமுள்ளவராயிருக்கிற’ நம்முடைய தேவனாகிய யெகோவாவின் அன்பை நாம் பிரதிபலித்துக்கொண்டிருப்போம்.—1 தீ. 2:4.