உங்கள் பைபிள் மாணாக்கருடைய இருதயத்தைச் சென்றெட்டுங்கள்
1 உங்களுடைய பைபிள் மாணாக்கர் கற்றுக்கொள்கிறவற்றின் பேரில் நடவடிக்கையெடுக்க நீங்கள் விரும்புகிறீர்களா? தான் பெற்றுக்கொண்டுவருகிற அறிவிலிருந்து பயனடைய வேண்டுமானால், அவர் அவ்விதமாகச் செய்யவேண்டும். உங்களுடைய பைபிள் மாணாக்கர் நடவடிக்கையெடுக்க உந்துவிப்பதற்காக, நீங்கள் அவருடைய இருதயத்தைச் சென்றெட்ட வேண்டும். பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளில், அப்போஸ்தலன் பேதுருவுடைய கிளர்ச்சியூட்டும் பேச்சு ஏறக்குறைய 3,000 ஆட்களுடைய ‘இருதயத்தைக் குத்தியது.’ இவர்கள் ‘வார்த்தையை சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டு’ அந்த நாளில் முழுக்காட்டப்பட்டார்கள். (அப். 2:37, 41) நீங்கள் உங்களுடைய பைபிள் மாணாக்கருடைய இருதயத்தை எவ்வாறு சென்றெட்ட முடியும்?
2 முற்றுமுழுக்க தயார்செய்யுங்கள்: அநேக விஷயங்களை சிந்திக்க முயற்சிசெய்யாதேயுங்கள். அவ்வாறு செய்தால் தகவலின்பேரில் மாணாக்கருடன் நியாயங்காட்டிப் பேசுவதற்கு குறைந்த நேரமே இருக்கும். நீங்கள் சிறப்பித்துக் காட்டுகிற குறிப்புகளை முன்கூட்டியே தீர்மானியுங்கள், மேலும் நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்பதையும் வேதவசனங்களைப் பலன்தரத்தக்க விதமாகப் பொருத்திக் காண்பிக்க முடியும் என்பதைக்குறித்தும் நிச்சயமாயிருங்கள். மாணாக்கருடைய பின்னணியின் காரணமாக அவருடைய மனதில் எழும்பக்கூடிய கேள்விகளை முன்கூட்டியே சிந்தியுங்கள். நீங்கள் உங்களுடைய மாணாக்கரோடு நன்கு பழக்கப்பட்டவர்களாக இருந்தால், குறிப்பாக அவருக்குப் பொருந்துகிற தகவலுடன் ஆயத்தமானவராக இருப்பதற்கு இந்த அறிவு உங்களுக்கு உதவிசெய்யும்.
3 இயேசுவின் கற்பிக்கும் முறையைப் பின்பற்றுங்கள்: இயேசு கடினமான குறிப்புகளை எளிதாக்கவும் தம்முடைய மாணாக்கர்கள் கருத்தைப் புரிந்துகொண்டு ஒரு சூழ்நிலைமையின் உணர்ச்சியை உணர்வதற்கும் உவமைகளைப் பயன்படுத்தினார். (லூக். 10:29-37) அதைப்போலவே, உங்களுடைய உதாரணங்களை எளிமையாக வைத்துக்கொள்ளுதல், அவற்றை வாழ்க்கையின் பொதுவான காரியங்களிலிருந்து எடுத்தல், அவற்றை மாணாக்கருடைய சூழ்நிலைமைகளுக்குக் குறிப்பாகப் பொருத்திப் பிரயோகித்தல் ஆகியவற்றின் மூலம் நீங்கள் உங்களுடைய பைபிள் மாணாக்கரின் இருதயத்தில் நற்போதனைகளைப் பதியச்செய்யலாம்.
4 இயேசு அடிக்கடி மெய்ப்பித்துக் காட்டியபடி, பைபிள் மாணாக்கர்களுடைய இருதயங்களைச் சென்றெட்டுவதில் கேள்விகள் விசேஷமாக உதவியாய் இருக்கின்றன. (லூக். 10:36) ஆனால் புத்தகத்திலிருந்து மாணாக்கர் வெறுமனே பதிலை வாசிப்பாராகில் திருப்தியடைந்துவிடாதீர்கள். முன்பு அவர் சிந்தித்திராத முடிவுக்கு அவருடைய மனதைத் திருப்பும்படி வழிநடத்தும் கேள்விகளைப் பயன்படுத்துங்கள். இந்தச் செயல்முறை சிந்திக்கும் திறமையை முன்னேற்றுவிக்கவும் மாணாக்கருக்கு உதவிசெய்யும். ஒரு காரியத்தின்பேரில் அவர் தனிப்பட்ட விதமாக என்ன நினைக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு நோக்குநிலை கேள்விகளைக் கேளுங்கள். அப்பொழுது நீங்கள் உதவி தேவைப்படக்கூடிய பகுதிகளைப் பகுத்துணர்ந்து, அதிகத் திட்டவட்டமான உதவியுடன் ஒரு முடிவுக்கு வரமுடியும்.
5 பைபிள் மாணாக்கர் ஒருவர் முன்னேற்றம் செய்துவரவில்லையென்றால், நீங்கள் அவரிடமிருந்து காரணங்களை வருவிக்கவேண்டும். இது ஒழுங்கானப் படிப்பு சமயத்தைத் தவிர வேறொரு சமயத்தில் சந்திப்பதை உட்படுத்தக்கூடும். நடவடிக்கையெடுப்பதற்கு ஏன் அவர் தயங்குகிறார்? அவர் புரிந்துகொள்ளாத வேதப்பூர்வமான குறிப்பு ஏதாவது இருக்கிறதா? அவருடைய வாழ்க்கை முறையில் ஏதோ சில சரிப்படுத்துதல்களைச் செய்ய விருப்பமற்றிருக்கிறாரா? பைபிள் மாணாக்கர் ஒருவர் ‘இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடக்க’ முயன்றுகொண்டிருப்பாராகில், அவ்விதமாகச் செய்வதில் இருக்கிற ஆபத்தை அவர் உணரும்படி உதவிசெய்யுங்கள்.—1 இரா. 18:21.
6 அக்கறையுள்ள ஆட்களுக்குப் பைபிள் சத்தியங்களைப் போதிப்பது ஜீவனைக்காக்கும் வேலை என்பதை அப்போஸ்தலன் பவுல் உணர்ந்திருந்தார். ஆகவே கிறிஸ்தவர்கள் அனைவரும், ‘தங்களுடைய போதனைக்குத் தொடர்ந்து கவனஞ்செலுத்தும்படி’ அறிவுரை கொடுத்தார். (1 தீ. 4:16, NW) நீங்கள் யாருக்குப் பைபிள் படிப்புகள் நடத்துகிறீர்களோ அவர்கள், பைபிளையும் உலக சம்பவங்களையும் பற்றிய வெறும் உண்மைகளைக்காட்டிலும் அதிகத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் யெகோவாவையும் இயேசுவையும் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்ளவும் அவர்களோடு ஓர் அனலான தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ளவும் உதவிசெய்யப்படவேண்டும். அவ்விதமாகச் செய்வதன்மூலம் மட்டுமே, அவர்கள் தங்கள் கிரியைகளின் மூலம் விசுவாசத்தை மெய்ப்பித்துக் காட்ட உந்துவிக்கப்படுவார்கள். (யாக். 2:17, 21, 22) மாணாக்கரின் இருதயத்தைச் சென்றெட்டும்போது, யெகோவாவைக் கனப்படுத்துகிற போக்கைப் பின்பற்றவும் தன்னுடைய சொந்த ஜீவனைப் பாதுகாத்துக்கொள்ளவும் அவர் உந்துவிக்கப்படுவார்.—நீதி. 2:20-22.