கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்
◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்: ஆங்கிலம்: போரில்லா உலகம் எப்பொழுதாவது இருக்குமா? (Will There Ever Be a World Without War?) (விசேஷமாக யூதமதப் பின்னணியையுடைய ஆட்களுக்கான 32-பக்க சிற்றேடு). மிகவும் மட்டுப்பட்ட அளவு மட்டுமே கையிருப்பிலுள்ளது, ஆகவே தனிப்பட்ட படிப்பிற்காகவும் தனிப்பட்ட நூலகங்களுக்காகவும் உங்களுடைய சபையிலுள்ள குடும்பம் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு பிரதியையே தயவுசெய்து ஆர்டர் செய்யுங்கள். இன்னும் இந்தச் சிற்றேடு பொதுமக்களுக்கு வினியோகிக்க கிடைக்கவில்லை. குஜராத்தி: தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல் (Theocratic Ministry School Guidebook) புத்தகத்தின் அதிகாரங்கள் 21-37 வரை அடங்கிய 32-பக்க சிற்றேடு. மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு சிற்றேடுகள் ஒவ்வொன்றும் பிரஸ்தாபிகளுக்கு ரூபாய் 4.00, பயனியர்களுக்கு ரூபாய் 3.00. பெங்காலி, மராத்தி மற்றும் நேப்பாளி: அடிப்படை பைபிள் போதனைகள். இது, நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தின் பிற்சேர்க்கையில் (பக்கங்கள் 171 முதல் 218 வரை) காணப்படுகிற முழுக்காட்டுதலுக்கு முன்பு சிந்திக்கப்படுகிற கேள்விகள் அடங்கிய 64-பக்க சிறுபுத்தகமாகும். பிரஸ்தாபி மற்றும் பயனியருக்கான இந்தச் சிறுபுத்தகத்தின் விலை ரூபாய் 4.00. குஜராத்தி மற்றும் தெலுங்கு: பைபிள் கலந்தாலோசிப்புகளை எவ்வாறு ஆரம்பித்து தொடர்வது. வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தின் தொடக்கத்தில் காணப்படுகிற “அறிமுகங்கள்—வெளி ஊழியத்தில் பயன்படுத்துவதற்கு” மற்றும் “உரையாடலை நிறுத்தும் பதிற்சொற்களுக்கு நீங்கள் எவ்வாறு மறுமொழியளிக்கலாம்” என்ற பிரிவுகளின் பகுதிகளடங்கிய 32-பக்க சிறுபுத்தகம். இந்தச் சிறுபுத்தகத்திற்கான பிரஸ்தாபி விலை ரூபாய் 1.00 மற்றும் பயனியர் விலை ரூபாய் 0.75.
◼ இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா (No. 19), மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல் (No. 20), குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்தனுபவியுங்கள் (No. 21), இந்த உலகத்தை ஆளுவது யார் (No. 22) ஆகிய துண்டுப்பிரதிகள், ஆங்கிலம் மட்டுமல்லாமல் பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, நேப்பாளி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்பொழுது கிடைக்கின்றன. சபைகள் தங்களுடைய உபயோகத்திற்காக மேற்கூறப்பட்டவற்றை நியாயமான அளவு ஆர்டர் செய்யலாம்.
◼ யெகோவாவின் சாட்சிகளுடைய நாட்காட்டி 1994-ன் கூடுதலான பிரதிகள் கிடைக்கும். இதைப் பெற விரும்புகிற தனிநபர்கள் தங்களுடைய ஆர்டர்களை சபையின் காரியதரிசியிடம் சமர்ப்பிக்கவேண்டும். கூடுதலான நாட்காட்டிகளுக்கான சபையின் ஆர்டரை பிரசுர ஆர்டர் (S-14) நமூனாமூலமாக உடனடியாக எங்களுக்கு அனுப்பும்படி காரியதரிசிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
◼ மார்ச் 1, 1994 வெளியீட்டிலிருந்து காவற்கோபுரம் மராத்தியில் மாதம் இருமுறை பிரசுரிக்கப்படும். மேலும் ஏப்ரல் 8, 1994 வெளியீட்டிலிருந்து மலையாளத்திலும் தமிழிலும் விழித்தெழு! மாதம் இருமுறை பிரசுரிக்கப்படும். மேற்குறிப்பிடப்பட்ட தேதிகள் வரையாக கோப்பில் உள்ள சந்தாதாரர்கள் சரிசெய்யப்பட்ட சந்தாக்களைப் பெறுவார்கள், இவ்விதமாக தங்களுடைய சந்தாக்கள் எதிர்பார்த்ததற்கு முன்பாகவே தீர்ந்துபோகையிலும்கூட, தாங்கள் செலுத்தியிருக்கிற பணத்துக்கு மொத்தத்தில் 12 இதழைப் பெறுவார்கள். குறிப்பு: பிப்ரவரி 1, 1994 முதற்கொண்டு, மராத்தியிலுள்ள காவற்கோபுரம், மலையாளம் மற்றும் தமிழில் உள்ள விழித்தெழு!-வுக்கான சந்தாக்கள் மாதம் இருமுறை பத்திரிகைகளுக்கான விலைகளில் அளிக்கப்படவேண்டும், அதாவது ஒரு வருடத்திற்கு ரூபாய் 60.00, ஆறு மாதத்திற்கு ரூபாய் 30.00. (இந்த எல்லா மூன்று பதிப்புகளுக்கும் ஆறு மாத சந்தாக்கள் கிடைக்கும்.) இந்த எல்லா மூன்று பதிப்புகளுக்கான பயனியர் விலைகளும் மாதம் இருமுறை பத்திரிகைகளுக்கான பயனியர் விலையே, அதாவது ஒரு வருடத்திற்கு ரூபாய் 30.00, ஆறு மாதத்திற்கு ரூபாய் 15.00. பிப்ரவரி 1, 1994-ல் இருந்து இந்த மூன்று பதிப்புகளுக்கான சந்தாக்களும் இந்த விலைகளில் பெறவேண்டும் என்பதைத் தயவுசெய்து கவனியுங்கள்.
◼ மீண்டும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:
ஆங்கிலம்: யெகோவாவின் சாட்சிகளும் இரத்தம்பற்றிய கேள்வியும் (Jehovah’s Witnesses and the Question of Blood), என்னுடைய பைபிள் கதைப் புத்தகம், பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் (New World Translation of the Holy Scriptures—With References) (Rbi8) (பெரிய அளவு). குஜராத்தி, ஹிந்தி மற்றும் மராத்தி: “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்.”
◼ கையிருப்பிலில்லாத பிரசுரங்கள்:
மலையாளம்: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்.