அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஜனவரி: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? சிற்றேடு 4.00 ரூபாய் நன்கொடைக்கு. இது கிடைக்காத இடங்களில், விசேஷ அளிப்பாகிய 192-பக்க பழைய புத்தகங்கள் ஒவ்வொன்றையும் 6.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்த வகையைச் சேர்ந்த பின்வரும் புத்தகங்கள் இன்னும் எங்களிடம் கிடைக்கும்: ஆங்கிலம்: மனிதன் இங்கு வந்தது பரிணாமத்தின் மூலமா படைப்பின் மூலமா? மற்றும் இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? குஜராத்தி: நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு, “உம்முடைய ராஜ்யம் வருவதாக” மற்றும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்; ஹிந்தி: நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு மற்றும் “உம்முடைய ராஜ்யம் வருவதாக;” கன்னடம்: நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு, “உம்முடைய ராஜ்யம் வருவதாக” மற்றும் “கடவுள் பொய் சொல்லக் கூடாததாயுள்ள காரியங்கள்;” மராத்தி: “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” மற்றும் பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்; தமிழ்: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? மற்றும் “உம்முடைய ராஜ்யம் வருவதாக;” தெலுங்கு: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? மற்றும் உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல். பிப்ரவரி: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம். பெரிய அளவு புத்தகம் 40.00 ரூபாய், சிறிய அளவு புத்தகம் 20.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். மார்ச்: இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் (இது ஆங்கிலம், மலையாளம் மற்றும் தமிழில் கிடைக்கிறது) 20.00 ரூபாய் நன்கொடைக்கு. இது கிடைக்காத இடங்களில், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை 40.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். (சிறிய அளவு புத்தகம் 20.00 ரூபாய்). கூடுதலாக, 192-பக்க விசேஷ அளிப்பு புத்தகங்கள் ஒவ்வொன்றையும் 6.00 ரூபாய்க்கு அளிக்கலாம். ஏப்ரல் மற்றும் மே: காவற்கோபுரம் பத்திரிகைக்கு ஒரு வருட சந்தா ரூபாய் 60.00. ஆறு மாத சந்தாக்களும் மாதாந்தரப் பதிப்புகளுக்கான ஒரு வருட சந்தாக்களும் ரூபாய் 30.00. (மாதாந்தரப் பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தாக்கள் கிடையாது.) குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளிப்புத் திட்டத்திற்கான பிரசுரங்கள் எதையாவது இன்னும் ஆர்டர் செய்யாத சபைகள் தங்களுடைய அடுத்த புத்தக ஆர்டர் (S-14) நமூனாவில் ஆர்டர் செய்யவேண்டும்.
◼ சபைகளிலுள்ள அனைவரும் ஏப்ரல் மாதத்தில், ஒருவேளை மே மாதத்திலும், துணைப் பயனியர் செய்வதற்கு விசேஷித்த முயற்சிசெய்யும்படி நாங்கள் உற்சாகப்படுத்த விரும்புகிறோம். அல்லது ஏப்ரலில் அவ்விதமாக அவர்கள் செய்யமுடியாதிருந்தால், மே மாதத்தில் செய்யலாம். இந்தக் கூடுதலான நடவடிக்கையை எதிர்பார்த்து, ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்காக கூடுதலான பத்திரிகைகளை விரும்புகிற சபைகள், தங்களுடைய விசேஷித்த ஆர்டரை ஜனவரி 30, 1994-ற்கு முன்பு செய்யவேண்டும்.
◼ சபைகள் நினைவுநாள் ஆசரிப்புக்காக வசதியான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும், இந்த ஆண்டு மார்ச் 26, சனிக்கிழமை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இது கொண்டாடப்படும். ஒவ்வொரு சபையும் தங்களுடைய சொந்த நினைவுநாள் ஆசரிப்பை நடத்துவது விரும்பத்தக்கதாய் இருந்தபோதிலும், இது எப்பொழுதும் சாத்தியமாய் இருக்காது. பெரும்பாலான சபைகள் வழக்கமாக அதே ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்துகிற இடங்களில், ஒன்றோ இரண்டோ சபைகள் அந்த மாலைவேளைக்காக மற்றொரு வசதியான இடத்தைப் பெறுவது மிகச் சிறந்ததாக இருக்கலாம். அக்கறைகாட்டும் புதியவர்கள் ஆஜராவதை அசெளகரியமாகக் காணுகிற அளவுக்கு நினைவுநாள் ஆசரிப்பை அதிக தாமதாக ஆரம்பிக்கக்கூடாது. மேலும், அதே மன்றத்தை ஒன்றுக்கு மேற்பட்ட சபைகள் பயன்படுத்திக்கொண்டிருந்தால், ஆசரிப்புக்கு முன்பு அல்லது பின்பு வந்திருப்பவர்களை வரவேற்பதற்கு நேரமில்லாத அளவுக்கு, கூட்டங்கள் அவ்வளவு குறைந்த இடைவெளியில் இருக்கக்கூடாது. சிலருக்கு தொடர்ச்சியான ஆவிக்குரிய உதவிக்காக, அல்லது ஆஜராயிருக்கிற அனைவர் மத்தியிலும் உற்சாகத்தைப் பரிமாறிக்கொள்வதற்காக ஏற்பாடுகள் செய்யுங்கள். எல்லா அம்சங்களையும் முற்றுமுழுக்கச் சிந்தித்தப் பிறகு, நினைவுநாள் ஆசரிப்பிலிருந்து முழுமையாக நன்மையடைவதற்கு அந்த நிகழ்ச்சிக்கு ஆஜராகிற அனைவருக்கும் என்ன சாத்தியமான ஏற்பாடுகள் மிகச் சிறந்தவிதத்தில் உதவும் என்பதை மூப்பர்கள் தீர்மானிக்கவேண்டும்.
◼ 1994 நினைவுநாள் ஆசரிப்பு காலத்திற்கான விசேஷித்தப் பொதுப் பேச்சு, ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 10-ல் உலகமுழுவதும் கொடுக்கப்படும். அந்தப் பேச்சின் தலைப்புப்பொருள் “மனித சமுதாயத்தை மதம் தோல்வியடையச் செய்கிறதா?” என்பதாகும். குறிப்புத்தாள் வழங்கப்படும். அந்த வார இறுதியில் வட்டாரக் கண்காணியின் சந்திப்பு, வட்டார அசெம்பிளி, அல்லது விசேஷ அசெம்பிளி தினத்தையுடைய சபைகள், பின்தொடர்ந்து வருகிற வாரத்தில் விசேஷித்தப் பேச்சைக் கொண்டிருப்பார்கள். எந்தச் சபையும் விசேஷித்தப் பேச்சை ஏப்ரல் 10-ற்கு முன்பாகக் கொண்டிருக்கக்கூடாது.
◼ எல்லா சபைகளுக்கும் ஓர் ஆண்டிற்கான ஊழிய நமூனாக்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. சம்பந்தப்பட்ட சகோதரர்களுக்குப் பொருத்தமான நமூனாக்களைப் பகிர்ந்தளிக்க சபை காரியதரிசிகளுக்கு உதவிசெய்வதற்காக அனுப்பப்பட்டவற்றோடு சரிபார்ப்பதற்கான பட்டியல் ஒன்று உறையிலிடப்பட்டது. சரிபார்ப்பதற்கான பட்டியலில் காண்பிக்கப்பட்டுள்ள தேதியைவிட பழையதான, கையிருப்பிலுள்ள அனைத்து நமூனாக்களும் உடனடியாக அழித்துப்போடப்படவேண்டும். தயவுசெய்து நாள்கடந்த நமூனாக்களைப் பயன்படுத்தாதிருங்கள். அந்த ஆண்டின்போது கூடுதலான நமூனாக்கள் தேவைப்பட்டால், வழக்கமான பிரசுர ஆர்டர் நமூனாவைப் (S-14) பயன்படுத்தி, இவற்றை ஆர்டர்செய்யலாம், ஆனால் தயவுசெய்து டிசம்பர் 1994 கடைசிவரை போதுமானவற்றை மட்டுமே ஆர்டர்செய்யுங்கள்.
◼ சமீபத்தில் மத்திய இந்தியாவை உலுக்கிய பூகம்பம் நம்முடைய சகோதரர்கள்மீது கொண்டிருந்த பாதிப்பைப்பற்றி உங்களில் அநேகர் அக்கறை காண்பித்திருக்கிறீர்கள். பாதிக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்த சாட்சிகளின் பாதுகாப்பைப் பற்றிய பல விசாரிப்புகளை நாங்கள் பெற்றோம். இப்படிப்பட்ட விசாரிப்புகளைச் செய்வதன்மூலமும் உதவியை அளிப்பதன்மூலமும்கூட உங்களுடைய அக்கறையையும் சகோதர சிநேகத்தையும் நீங்கள் வெளிப்படுத்திக் காண்பித்தபடியால், கிறிஸ்தவ அன்பை செயலில் பார்ப்பது திருப்தியளிப்பதாய் இருந்தது. மோசமாக பாதிக்கப்பட்ட—சரீரப்பிரகாரமான காயங்களின்மூலமோ சொத்துக்கும் உடைமைகளுக்கும் இழப்பு ஏற்பட்டதன்மூலமோ பாதிக்கப்பட்ட—சகோதரர்களின் அறிக்கைகளை நாங்கள் பெறவில்லை என்பதைச் சொல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பரந்த பகுதியில் இருக்கிற சாட்சி குடும்பத்தினர், லோனாவ்லாவில் உள்ள நாங்கள் உட்பட, பூகம்பத்தின் அதிர்ச்சியை உணர்ந்தோம், மேலும் சிறிய அளவில் சேதங்களும் இருந்திருக்கின்றன, சாட்சிகளின் வீடுகளுக்கு உண்டான பெரிய சேதம் அல்லது அவர்களைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கான எந்த அத்தாட்சியையும் எங்களால் காணமுடியவில்லை. உங்களுடைய அன்பான அக்கறைக்காக நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம், மேலும், பூகம்பங்கள் நாம் கடைசி நாட்களில் வாழ்ந்துவருகிறோம் என்பதற்கான அந்த அடையாளத்தின் பாகமாயிருக்கிற இந்தக் கடினமான காலங்களில், நியாயமான அளவு பாதுகாப்போடு நாம் தொடர்ந்து யெகோவாவைச் சேவிக்கும்படி ஜெபம்செய்கிறோம்.