அர்த்தமுள்ள மறுசந்திப்புகள்மூலம் வளர்ச்சியைத் தூண்டுங்கள்
1 அக்கறை காண்பித்திருக்கிறவர்களுக்கு உதவிசெய்வதற்காக, ஒழுங்கான மறுசந்திப்புகள் மூலம் தொடர்ந்து ஆவிக்குரிய உணவு கிடைக்கும்படி செய்வது இன்றியமையாததாய் இருக்கிறது. நம்முடைய சந்திப்பு, அவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தூண்டுவிப்பதற்குப் படிப்படியாக உதவிசெய்யும். (1 கொ. 3:6-9) என்றபோதிலும், நம்முடைய சந்திப்புகள் அர்த்தமுள்ளவையாய் இருப்பதற்காக, நாம் அந்த நபரை மனதிற்கொண்டு முன்கூட்டியே தயார்செய்வது அவசியம்.
2 நாம் யாரிடம் ஒரு துண்டுப்பிரதியை விட்டுவந்தோமோ அவர்களை மீண்டும் சந்தித்தல்: ஆரம்ப சந்திப்பில், அதிக வேலையாய் இருக்கிற வீட்டுக்காரரிடம் புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதி மட்டுமே ஒருவேளை அளிக்கப்பட்டிருக்கலாம்.
சிந்திக்கப்பட்டதைச் சுருக்கமாக மறுபரிசீலனை செய்தபிறகு, நாம் இதுபோன்ற ஒன்றைச் சொல்லலாம்:
◼ “இந்த மாற்றங்களை எந்த அரசாங்கம் கொண்டுவர முடியும்? [குறிப்புச்சொல்ல அனுமதியுங்கள்.] நீங்களும்கூட இதுபோன்ற நிலைமைகளில் வாழ்க்கையை அனுபவித்து மகிழ விரும்புவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. தனிப்பட்ட விதமாக இப்படிப்பட்ட நிலைமைகளை நாம் எவ்வாறு அனுபவித்து மகிழலாம்?” பின்பாக, “உங்களுக்கு இது எப்படிக் கூடியதாயிருக்கும்” என்ற உபதலைப்பின் கீழுள்ள கட்டுரையை கலந்தாலோசிக்கலாம். இந்தச் சந்திப்பில், என்றும் வாழலாம் புத்தகத்திலுள்ள அதிகாரம் 30, “என்றும் வாழ்வதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும்?” என்பதற்கு நீங்கள் கவனத்தைத் திருப்பலாம். முதல் இரண்டு பாராக்களைச் சிந்தித்து, பிறகு நாம் இந்தக் கேள்வியைக் கேட்கலாம்: “கடவுளைப் பற்றி கற்றுக்கொள்வது நம்மை எவ்வாறு பாதிக்கவேண்டும்?” அந்தப் புத்தகத்தை அளிக்கலாம்; அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதையும் அந்தப் பேச்சுப் பொருளை மேலுமாக கலந்துபேசுவதையும் மறுமுறை சந்திக்கையில் செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்யலாம்.
3 நாம் யாரிடம் “என்றும் வாழலாம்” புத்தகத்தை விட்டுவந்தோமோ அவர்களை மீண்டும் சந்திக்கையில், நாம் இவ்வாறு சொல்லலாம்:
◼ “கடந்தமுறை நான் சந்தித்தபோது, மனிதவர்க்கம் எதிர்ப்படுகிற அநேக பிரச்னைகளையும் அவற்றைக் குறித்து கடவுள் என்ன செய்யப்போவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார் என்பதையும் நாம் கலந்தாலோசித்தோம். கடவுள் ஏன் அக்கிரமத்தை இவ்வளவு நீடித்தக்காலம் அனுமதித்திருக்கிறார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. நீங்கள் வாங்கிய அந்தப் புத்தகத்திலுள்ள 11-ம் அதிகாரத்தில் அக்கறையைத் தூண்டுகிற பதில் காணப்படுகிறது.” செளகரியமாக இருக்குமானால், வீட்டுக்காரர் அவருடைய பிரதியை எடுத்துவரும்படி கேளுங்கள். பாராக்கள் சிலவற்றைக் கலந்தாலோசித்தப் பின்பு, நாம் இவ்வாறு கேட்கலாம்: “கடவுளுடைய வாக்குறுதியிலிருந்து நன்மையடைவதற்கு நாம் என்ன செய்யவேண்டியது அவசியம்?” மறுமுறை சந்திக்கையில் அதிகாரம் 15, பக்கம் 127-ல், “கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களில் ஒருவராதல்” என்ற கட்டுரையை கலந்தாலோசிப்பதற்காகச் சிறப்பித்துக் காண்பிக்கலாம்.
4 நாம் யாரிடம் பத்திரிகைகளை விட்டுவந்தோமோ அவர்களை மீண்டும் சந்தித்தல்: வீட்டுக்காரருடைய அக்கறையைத் தூண்டிய விசேஷித்த கட்டுரை ஒன்றை தெரிந்தெடுத்திருந்தால், நீங்கள் திரும்பிச்செல்லும்போது, முக்கியமான வசனத்தின்மீதும் அதைக் கலந்தாலோசிக்கிற கட்டுரையின்மீதும் உங்களுடைய குறிப்புகளை ஒருமுகப்படுத்தி, அந்தக் கட்டுரையிலிருந்து கூடுதலான குறிப்புகளை விவரித்துக் கூறுங்கள். தொடர்ந்து அக்கறை இருக்குமானால், பத்திரிகையின் நன்மைகளைக் கலந்துபேசலாம். அதோடு, அதே பொருளைக் கலந்துபேசுகிற ஒரு கட்டுரை அதில் அடங்கியிருக்குமானால், பத்திரிகையின் அடுத்த வெளியீட்டிற்கு கவனத்தைத் திருப்பலாம். மற்றபடி, அந்தப் பேச்சுப் பொருளின்மீது என்றும் வாழலாம் புத்தகத்திலுள்ள கட்டுரைக்கு கவனத்தைத் திருப்பி, நம்முடைய அடுத்த சந்திப்பில் அதைக் கலந்துபேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யலாம்.
5 அர்த்தமுள்ள மறுசந்திப்புகளுடன் தொடர்ந்து செல்வதில் நம்முடைய தனிப்பட்ட அக்கறையைக் காண்பிப்பது, மக்களுக்கு மற்றும் யெகோவாவுக்கான நம்முடைய அன்பை நிரூபித்துக் காண்பிக்கும். (யோவா. 13:34, 35) அர்த்தமுள்ள மறுசந்திப்புகளை ஒழுங்காகச் செய்வதன்மூலம் நம்முடைய பிராந்தியத்திலுள்ளவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சியை நாம் தொடர்ந்து தூண்டுவிப்போமாக.