மறுசந்திப்புகளில் என்றும் வாழலாம்புத்தகத்தைப் பயன்படுத்துதல்
1 சத்தியத்தினிடம் அக்கறை காட்டிய ஆட்களை கவனிப்பதில் ஊக்கமுள்ளோராய் இருப்பதன் முக்கியத்துவத்தை பவுல் அப்போஸ்தலன் அறிந்திருந்தார். அவர்களை இளஞ்செடிகளுக்கு ஒப்பிட்டுப் பேசினார், அவற்றை ஒழுங்காக நீர்ப்பாய்ச்சுதல் அவசியம், அவற்றைப் பண்படுத்த வேண்டியதும் அவசியம். (1 கொரி. 3:6-9) அதுபோலவே இன்று, அக்கறை காட்டும் ஆட்கள் ஆவிக்குரிய வளர்ச்சியில் முன்னேறுவதற்கு, மறுசந்திப்பு செய்யும்போது நாம் கொடுக்கும் கனிவான அக்கறை அவர்களுக்கு அவசியமாயிருக்கிறது.
2 முன்பு சந்தித்து பேசிய குறிப்புகளை நினைவில் வைக்க உதவிசெய்வதற்கு, நாம் சந்திக்கிற ஆட்களுக்கு நினைப்பூட்டுதல்கள் அடிக்கடி அவசியமாயிருக்கிறது என்பதை நாம் ஞாபகத்தில் வைப்பது நல்லது. ஆகையால், நாம் ஒவ்வொரு முறையும் அவர்களைச் சென்று சந்திக்கும்போது, முன்பு சந்திக்கையில் பேசிய காரியங்களைச் சுருக்கமாக விமர்சிப்பது, முக்கியமாய் வீட்டுக்காரர் அப்போது போற்றிய குறிப்புகளின் பேரில் கவனத்தை ஊன்றவைத்து அவ்வாறு செய்வது சரியானதாய் இருக்கும். கலந்தாலோசிப்பின்போது வீட்டுக்காரரையும் சம்பாஷணையில் உட்படுத்திக்கொள்ளுங்கள், அவருடைய அக்கறைகளையும் தேவைகளையும் உடனே பகுத்துணருங்கள்.
3 “என்றும் வாழலாம்” புத்தகத்தை அளித்திருந்தாலும் அளித்திராவிட்டாலும், மறுசந்திப்பு செய்யும்போது நீங்கள் இந்த நேரடியான அணுகுமுறையை ஒரு படிப்பை தொடங்குவதற்கு உபயோகிக்க விரும்புவீர்கள்:
▪ “நாங்கள் பேசிய அநேக ஆட்கள் இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி பைபிள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடைகளைக் கண்டறிந்திருக்கின்றனர்.” பிறகு என்றும் வாழலாம் புத்தகத்திலுள்ள பொருளடக்க அட்டவணைக்கு திருப்பி நீங்கள் இவ்வாறு கேட்கலாம்: “இதில் உள்ள எந்தப் பொருள் உங்களுக்கு மிகவும் அக்கறையூட்டுவதாயிருக்கிறது?” வீட்டுக்காரர் அக்கறை காட்டிய அதிகாரத்திற்கு திருப்புங்கள். ஒவ்வொரு பாராவிலிருக்கும் அதிமுக்கியமான குறிப்புகளை அவர் கிரகித்துக்கொள்வதற்கேதுவாக, ஒவ்வொரு பக்கத்திலும் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கிற கேள்விகளோடு எப்படி எண்ணிடப்பட்டிருக்கிற பாராக்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதை அவருக்கு எடுத்துக்காட்டுங்கள். ஒருசில குறிப்புகளைக் கலந்துபேசிவிட்டு, திரும்பவும் வந்து சந்திப்பதற்குத் திட்டவட்டமான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.
4 மற்றொரு அணுகுமுறை பின்வருமாறு இருக்கலாம்:
▪ “சென்ற வாரம் உங்களோடு சம்பாஷித்த காரியங்களை நான் உண்மையிலேயே மிகவும் அனுபவித்தேன். அநேகர் நாங்கள் ஏன் அவர்களுடைய வீடுகளைத் தொடர்ந்து சந்திக்கிறோம் என்பதைப் பற்றி கவலை தெரிவித்திருக்கின்றனர். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற இந்தப் புத்தகத்தில் பக்கம் 29-ல் உள்ள குறிப்பு உங்களுக்கு அக்கறையூட்டுவதாயிருக்கும் என்று நான் யோசித்தேன். [பாரா 11-ஐ வாசித்துக் காட்டுங்கள்.] நாம் இங்கு வாசிப்பதை அடிப்படையாகக்கொண்டு, நம்முடைய வணக்கம் கடவுளுக்கு ஏற்கத்தக்கதாய் இருப்பதற்குத் தேவையாயிருப்பதைக் குறித்து நீங்கள் என்ன சொல்வீர்கள்? [பதிலளிக்க நேரம் அனுமதித்து, பிறகு வீட்டுக்காரரைப் பாராட்டுங்கள்.] இயேசுவின் நாட்களில், தங்களுடைய மதம் கடவுளுடைய அங்கீகாரத்தை உடையதாயிருந்ததென்று நம்பியவர்கள் இருந்தனர். அவர்களைப் பற்றி இந்த அதிகாரத்தின் 2-ம் பாராவில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.” வாசித்து அந்தக் கூற்றுகளின் பேரில் குறிப்பு சொல்லுங்கள்.
5 முந்தின சந்திப்பில் “என்றும் வாழலாம்” புத்தகத்தை ஏற்றுக்கொண்டவரைத் திரும்பவும் சென்று சந்திக்கும்போது, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
▪ “சென்ற முறை நான் வந்திருந்தபோது, மாற்றம் தேவைப்படும் உலக நிலைமைகளைக் குறித்து சிந்தித்தோம். கடவுள் ஏன் அக்கிரமத்தை அனுமதித்திருக்கிறார் என்பதைக் குறித்து நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?” பதில் கொடுக்க நேரம் அனுமதித்தப் பிறகு பக்கம் 99-ற்குத் திருப்பி பாரா 2-ற்கான படிப்பு கேள்விகளைக் கவனியுங்கள். இந்தப் பாராவை வாசித்து அதைக் கலந்தாலோசியுங்கள். அதிலுள்ள வேதவசனங்களை எடுத்துப்பாருங்கள். அந்தப் புத்தகத்தில், உதாரணமாக, பக்கங்கள் 78, 84-5, 119, 147, 149-53, மற்றும் 156-8-ல் உள்ள தெரிந்தெடுத்த விளக்கப்படங்களுக்குத் திருப்பி, நீங்கள் மேலுமாக கலந்துபேசலாம்.
6 துண்டுப்பிரதி விட்டுவந்த இடத்தில்: சிலசமயங்களில் ஒரு துண்டுப்பிரதியை முதல் சந்திப்பில் விட்டுவந்திருக்கலாம். மறுசந்திப்புகள் செய்கையில், அந்தத் துண்டுப்பிரதியிலிருந்து ஓரிரண்டு பாராக்களை, இடக்குறிப்புக் கொடுக்கப்பட்டிருக்கிற வேதவசனங்களோடுகூட நீங்கள் சிந்திக்கலாம். பிறகு அந்தத் துண்டுப்பிரதியில் இடக்குறிப்புக் கொடுக்கப்பட்டிருக்கும் வேதவசனங்களில் ஒன்று எவ்வாறு என்றும் வாழலாம் புத்தகத்தில் தீர விளக்கமாய் ஆராயப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் எடுத்துக்காட்டலாம். அந்த நபர் அக்கறை காட்டுவாரேயானால், நீங்கள் என்றும் வாழலாம் புத்தகத்தை அளிக்க விரும்பலாம். அடுத்த முறை சென்று சந்திக்கையில் சம்பாஷணையைத் தொடருவதற்காக ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.
7 நம்முடைய பராமரிப்பிலிருக்கும் கிறிஸ்தவ விசுவாசத்துக்குரிய இளஞ்செடிகளுக்கு நீர்ப்பாய்ச்சுவதை உண்மையுடன் கவனித்து வருவோமேயானால், கடவுள் தமக்கு துதியையும் மகிமையையும் கொண்டுவருவதற்கு அவைகளை வளரச் செய்வார்.—1 கொரி. 3:7.