செம்மறியாடுபோன்ற மக்கள் உறுதியான அஸ்திபாரத்தின்மீது கட்டுவதற்கு உதவுங்கள்
1 ஒரு வீட்டை கட்டுதல் கவனமாகத் திட்டமிடுவதையும் ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சியையும் தேவைப்படுத்துகிறது. வீட்டின் மாதிரிப்படம் வரைந்த பிறகு, கட்டடங்கட்டும் இடம் ஆயத்தப்படுத்தப்பட்டு ஓர் உறுதியான அஸ்திபாரம் போடப்படவேண்டும். திட்டம் கடைசியாக முடிக்கப்படும் வரையாக படிப்படியாய் வளர்ச்சியடைகிறது. அதேபோல, செம்மறியாடுபோன்ற மக்கள் சத்தியத்தைப் படிப்படியாய் கற்றுக்கொள்வதற்கு நாம் உதவிசெய்ய வேண்டும். முதல் சந்திப்பில் நாம் அக்கறையைத் தூண்டுவதற்கு முயற்சிசெய்கிறோம். அதன் பிறகு, நாம் மறு சந்திப்புகள் செய்து, கடவுளையும் மனிதவர்க்கத்திற்கான அவருடைய நோக்கத்தையும்பற்றிய அடிப்படை சத்தியங்களைப் போதிப்பதன்மூலம் அஸ்திபாரத்தைப் போடுகிறோம்.—லூக். 6:48.
2 என்றபோதிலும், அஸ்திபாரத்தைப் போடுவதற்கு முன்பாக, கட்டடங்கட்டும் இடத்தை நாம் ஆயத்தப்படுத்தவேண்டும், வேறு வார்த்தையில் சொல்லப்போனால், வீட்டுக்காரரின் சூழ்நிலைமைகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். கடந்தமுறை என்ன பொருள் சிந்திக்கப்பட்டது? என்ன வேதவசனங்கள் பயன்படுத்தப்பட்டன? பிரதிபலிப்பு என்ன? எந்தப் பிரசுரத்தை விட்டுவந்தோம்? திரும்பிச்செல்லும்போது, மனதில் திட்டவட்டமான குறிப்புகளை வைத்துக்கொண்டு, அஸ்திபாரத்தைப் படிப்படியாகக் கட்டுங்கள். ஒவ்வொரு சந்திப்பிலும் வீட்டுக்காரரின் அறிவு வளருகிறது, கடவுளில் அவருடைய விசுவாசமும் அதிகரிக்கிறது.
3 “என்றும் வாழலாம்” புத்தகம் ஒன்று அளிக்கப்பட்டிருந்தால், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “நான் உங்களை வீட்டில் காண்பதில் அதிக சந்தோஷப்படுகிறேன். நம்முடைய கடந்த கலந்தாலோசிப்பின்போது, நம்முடைய பகுதியில் உள்ளவர்களிடம் கடவுளில் அக்கறை குறைந்துகொண்டுவருவதைப் பற்றி நாம் சிந்தித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். கடவுள் மனிதவர்க்கத்தில் அக்கறையுள்ளவராய் இருக்கிறார், மேலும் அவருடைய ராஜ்யத்தின் மூலமாக நீதிமான்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்பதைப் பைபிள் தெளிவாகக் கூறுகிறது. [மத்தேயு 6:9, 10-ஐ வாசியுங்கள்.] இந்த ராஜ்யத்தின் மூலம், நீதியும் நியாயமும் மேலோங்கியிருக்கும்.” ஏசாயா 11:3-5-ஐ வாசியுங்கள், பிறகு என்றும் வாழலாம் புத்தகத்தில் அதிகாரம் 1-லுள்ள முதல் இரண்டு பத்திகளுக்கு வீட்டுக்காரரின் கவனத்தை வரவழையுங்கள். இந்தப் பொருளை எவ்வாறு படிக்கலாம் என்பதைக் காட்டுங்கள்.
4 ஆரம்பச் சந்திப்பில் சமாதானமான புதிய உலகம் துண்டுப்பிரதியை அளித்திருந்தால், மேம்பட்ட நிலைமைகள் மற்றும் பைபிளின் வாக்குறுதிகளுக்கானத் தேவையைப்பற்றி முன்பு சிந்தித்த முக்கியக் குறிப்புகளை மறுபார்வைசெய்யலாம். அந்தப் புதிய உலகில் வாழ்வதற்காக, நாம் திருத்தமான அறிவைப் பெறவேண்டும் என்பதை வலியுறுத்துங்கள். யோவான் 17:3-ஐ வாசியுங்கள். இப்படிப்பட்ட அறிவைப் பெற்றுக்கொண்ட பிறகு, நாம் கடவுளுடைய சித்தத்தைச் செய்யவேண்டும் என்பதை விளக்குங்கள். ஒன்று யோவான் 2:17-ஐ வாசியுங்கள். அந்தத் துண்டுப்பிரதியில் 5-ம் பக்கத்திலுள்ள திட்டவட்டமான குறிப்புகளுக்கு வீட்டுக்காரரின் கவனத்தைத் திருப்புங்கள்.
5 முதல் சந்திப்பில் “என்றும் வாழலாம்” புத்தகத்தை அளித்தபோது குடும்ப வாழ்க்கையைப் பற்றிய பொருளை சிறப்பித்துக்காட்டியிருந்தால், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “போன தடவை நான் சந்தித்தபோது, குடும்ப வாழ்க்கையைப் பற்றிய பொருளை நாம் கலந்தாலோசித்தோம். ஒரு மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கையை அனுபவிப்பதற்கு பைபிளில் காணப்படுகிற வழிகாட்டுக்குறிப்புகளைப் பின்பற்றவேண்டும் என்பதை நாம் ஒத்துக்கொண்டோம். திருமணத்தை வெற்றிகரமாக்குவதற்கு என்ன தேவைப்படுகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” பதிலுக்காக அனுமதியுங்கள். என்றும் வாழலாம் புத்தகத்தில் பக்கங்கள் 243-6-ல் சொல்லப்பட்டுள்ள தகவலிலிருந்து திட்டவட்டமான குறிப்புகளைச் சிறப்பித்துக்காட்டுங்கள். பொருத்தமாயிருக்கும்போது, விளக்கப்படங்களின்பேரில் வீட்டுக்காரரின் குறிப்புகளைக் கேட்டு, நீங்கள் தெரிந்தெடுத்த குறிப்புகளைக் கலந்தாலோசியுங்கள். பைபிள் நியமங்களின் நடைமுறையான மதிப்பை அழுத்திக்காட்டுங்கள்.
6 குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள் துண்டுப்பிரதியை அளித்திருந்தால், பக்கங்கள் 4 மற்றும் 5-ல் கொடுக்கப்பட்டுள்ள முக்கிய பைபிள் நியமங்களை மறுபார்வைசெய்யுங்கள். அக்கறைத் தூண்டப்பட்டிருக்குமானால், என்றும் வாழலாம் புத்தகத்தை அளியுங்கள். “குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல்,” அதிகாரம் 29-ஐ குறிப்பிட்டுக் காட்டி, வீட்டுக்காரரோடும் அவருடைய குடும்பத்தோடும் இதை எவ்வாறு கலந்தாலோசிக்கலாம் என்பதைக் காட்டுங்கள்.
7 நாம் அனைவரும் மறு சந்திப்புகளைச் செய்வதில் ஓர் ஒழுங்கானப் பங்கைக் கொண்டிருக்கவேண்டும். செப்டம்பரில் பலன்தரத்தக்க மறு சந்திப்புகளைச் செய்வதன்மூலம் அக்கறை காண்பித்த அனைவரையும் திரும்பச் சந்தியுங்கள்.