ஒழுங்கான நடைமுறையொழுங்கில் முன்னேறுகிறவர்களாய் தொடர்ந்து நடங்கள்
1 பிலிப்பி சபை உருவாக காரணமாயிருந்த அப்போஸ்தலன் பவுல் அதனிடமாக விசேஷித்த அன்பைக் கொண்டிருந்தார். அவர்களுடைய அன்பான பொருள் சம்பந்தமான காரியங்களுக்காக அவர் நன்றியுடையவராய் இருந்தார், நல்ல முன்மாதிரியானவர்கள் எனவும் அவர்களைக் குறித்து பேசினார்.—2 கொ. 8:1-6.
2 பிலிப்பியருக்கான பவுலின் கடிதம் ஆழமான அன்பால் செயல் தூண்டுதலளிப்பதாய் இருந்தது. உட்பார்வை (Insight) புத்தகம், தொகுதி 2, பக்கம் 631 இவ்வாறு அறிக்கைசெய்கிறது: “கடிதம் முழுவதும் அவர் பிலிப்பிய சபையை அவர்களுடைய சிறந்த போக்கில்—அதிகமான பகுத்தறிதலை நாடுதல், ஜீவவசனத்தை உறுதியாக பிடித்துக்கொண்டிருத்தல், பலமான விசுவாசம், மற்றும் எதிர்கால பரிசுக்கான அவர்களுடைய நம்பிக்கையில்—தொடர்வதற்கு உற்சாகப்படுத்துகிறார்.” அவர்கள் தங்களுக்கும் அந்த அப்போஸ்தலனுக்கும் இடையிலான அன்பின் கட்டில் இணைக்கப்பட்டவர்களாக அதற்கு அனலான முறையில் பிரதிபலித்தனர். பவுலினுடைய அறிவுரைகளை, குறிப்பாக பிலிப்பியர் 3:15-17-ல் உள்ளவற்றை கவனமாக சிந்திக்க நமக்கு நல்ல காரணத்தை அளித்து, அவருடைய வார்த்தைகள் இன்று நமக்கு விசேஷித்த அர்த்தத்தைக் கொடுக்கின்றன.
3 ஒரு முதிர்ச்சியான சிந்தை முக்கியம்: பல வருடகால அனுபவமுள்ள மனிதராக பவுல் பிலிப்பியர் 3:15-ல் எழுதினார். அவர்களுடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தை அவர் ஒப்புக்கொண்ட போதிலும் சரியான சிந்தையுடைய முதிர்ந்த கிறிஸ்தவர்களாக அவர்கள் ஆக வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். இயேசு செயல்படுத்திக் காட்டிய மனத்தாழ்மையையும் போற்றுதலையும் அவர்களுடைய சிந்தை பிரதிபலித்தவரை அவர்கள் “ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, . . . குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைக”ளுமாய் தொடர்ந்து நடப்பார்கள். (பிலி. 2:14, 15) அந்த வார்த்தைகளை நாம் வாசிக்கையில் பவுல் நம்மிடம் பேசுவதைப்போல நாம் உணரவேண்டும். இவ்வாறு நம்முடைய சிலாக்கியங்களுக்காக தாழ்மையான போற்றுதலை காட்டி, இயேசு கொண்டிருந்த அதே சிந்தையை நாமும் கொண்டிருக்கவும் ஆர்வத்துடன் நாம் விரும்புகிறோம். இதிலும் மற்ற காரியங்களிலும் உதவி கேட்டு தொடர்ந்து ஜெபத்தில் யெகோவாவிடம் விண்ணப்பிப்போம்.—பிலி. 4:6, 7.
4 பிலிப்பியர் 3:16 குறிப்பிடுவதுபோல, நாம் அனைவரும் முன்னேறுவதற்கு பெருமுயற்சி செய்யவேண்டும். “முன்னேறுவது” என்ற வார்த்தை “முன்னோக்கி செல்லுவதை, முன்னேற்றம் செய்வதை” அர்த்தப்படுத்துகிறது. முன்னேறுகிறவர்கள் “புதிய கருத்துக்களுக்கு, கண்டுபிடிப்புகளுக்கு, அல்லது வாய்ப்புகளுக்கு ஆவலுள்ளவர்களாய்” இருக்கின்றனர். பவுல், கிறிஸ்தவம் ஒருபோதும் செயலற்ற மந்தநிலையில் இருக்கவில்லை என்பதையும் அதைப் பின்பற்றுவதாக சொல்பவர்கள் தொடர்ந்து முன்னோக்கி செல்பவர்களாக இருக்கவேண்டும் என்பதையும் பிலிப்பியர் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினார். அவர்கள் தங்களைத் தாங்களே சோதித்தறியவும், தங்கள் பலவீனங்களை ஒத்துக்கொள்ளவும், அதிகத்தைச் செய்வதற்கான வாய்ப்புகளை நாட அல்லது தாங்கள் இப்போது செய்துகொண்டிருப்பவற்றின் தரத்தை உயர்த்தவும் மனமுள்ளவர்களாய் இருப்பதன்மூலம் முன்னேற்றம் செய்கிற பண்பு வெளிக்காட்டப்படும். இன்று யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பு முன்னேறுவதில் தொடந்து முன்னோக்கி செல்லுவதாயும், செயல் நோக்கெல்லையில் விரிவடைவதிலும் கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்வதிலும் அது அதிகரித்துக்கொண்டேயும் இருக்கிறது. அதன் எல்லா ஏற்பாடுகளிலிருந்து முழு பலனையும் பெற்று, அதன் வேலையில் முழு பங்கை கொண்டிருப்பதன்மூலம் நாம் ஒவ்வொருவரும் தொடர்ந்து அதனுடன் செல்பவர்களாக இருக்கவேண்டும்.
5 முன்னேறுதல் ஒழுங்கான நடைமுறையொழுங்கை தேவைப்படுத்துகிறது: பவுல் ‘அதே நடைமுறையொழுங்கில் தொடர்ந்து ஒழுங்காய் நடக்கும்படி’ தன் சகோதரர்களைத் தூண்டுவதன்மூலம் தொடர்ந்து கூறினார். (பிலி. 3:16, NW) ஒழுங்கு என்பது ஒருவரோடொருவர் கொண்டுள்ள உறவில், ஆட்களையோ பொருட்களையோ நோக்கும் விதத்தில் நன்நடத்தையையும் தேவைப்படுத்துகிறது. பிலிப்பியில் இருந்த கிறிஸ்தவர்கள் யெகோவாவின் அமைப்புடனும் ஒருவருக்கொருவரும் நெருங்கி இருப்பதன்மூலம் சரியான நோக்குநிலையைக் காத்துக்கொண்டார்கள். அவர்களுடைய வாழ்க்கை அன்பின் சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. (யோவா. 15:17; பிலி. 2:1, 2) பவுல், ‘சுவிசேஷத்திற்குப் பாத்திரராக நடந்துகொள்ளும்படி’ அவர்களைத் தூண்டினார். (பிலி. 1:27) இன்றுள்ள எல்லா கிறிஸ்தவர்களுக்கும் ஒழுங்கிற்கான, நன்நடத்தைக்கான தேவை அதே போல முக்கியமானதாக இருக்கிறது.
6 நடைமுறையொழுங்கு என்பது ஏற்படுத்தப்பட்டுள்ள செயற்படு முறையை வழக்கமாக செய்வதை குறிக்கிறது. இவ்வாறு, இது காரியங்களைப் பழக்கமாய் செய்வதுடன் நெருங்க தொடர்புடையதாய் இருக்கிறது. நடைமுறையொழுங்கைக் கொண்டிருப்பது நம்முடைய நன்மைக்காக செயல்படலாம், ஏனெனில் தீர்மானங்கள் செய்வதில் பின்பற்றவேண்டிய ஏற்படுத்தப்பட்ட மாதிரிச்சட்டத்தை நாம் ஏற்கெனவே பழக்கமாய் செய்ய வற்புறுத்தப்படுவதால், அடுத்து நாம் செய்யவேண்டியதைக் குறித்து நின்று நிதானிக்கவும் தொடர்ந்து சிந்திக்கவும் வேண்டாம்.
7 ஒழுங்கான தேவராஜ்ய நடைமுறையொழுங்கு நற்பயன் விளைவிக்கிற, பயன்தரக்கூடிய, கடவுளுக்குகந்த பழக்கங்களையும் மரபு வழக்கங்களையும் கொண்டிருக்கிறது. இதன் நோக்கம் ஆவிக்குரிய விதமாக நம்மை நாமே கட்டியமைத்துக் கொள்வதும் மற்றவர்களுக்கு உதவுவதும் கூடுமானால் யெகோவாவின் சேவையில் அதிகத்தை செய்வதுமேயாகும். இந்த இலக்குகளை அடைவதில் வெற்றிபெறுவது தனிப்பட்ட படிப்பு, தவறாமல் கூட்டங்களில் ஆஜராதல், பிரசங்க வேலையில் பங்குகொள்ளுதல் ஆகியவற்றை உட்படுத்தும் நடைமுறையொழுங்கை ஏற்படுத்துவதையும் அதைக் காத்துக்கொள்ளுவதையும் தேவைப்படுத்துகிறது.
8 ஒழுங்கான நடைமுறையொழுங்கில் உட்படுத்தப்பட்டிருக்கிற முக்கியமான காரியங்கள்: ஒரு முக்கியமான காரியம் எதுவென்றால் ‘திருத்தமான அறிவும் முழு பகுத்துணர்வும்’ ஆகும். (பிலி. 1:9, NW) தனிப்பட்ட படிப்பு நம்முடைய விசுவாசத்தை ஆழமாக்குகிறது, சத்தியத்திற்கான நம்முடைய போற்றுதலைப் பலப்படுத்துகிறது, மேலும் நற்கிரியைகளிடமாக நம்மைத் தூண்டுவிக்கிறது. எனினும், தங்களுடைய படிப்புப் பழக்கங்களில் நிலையாயிருப்பதை சிலர் கடினமாகக் கண்டிருக்கின்றனர். கொடுக்கப்படுகிற பிரதான காரணங்களில் ஒன்று நேரமின்மையாகும்.
9 தினமும் பைபிளை வாசிப்பதனால் வரும் பலன்கள் மிகைப்படுத்திக்கூற முடியாதவை. அதன் போதனைகள் எல்லா வழியிலும் “பிரயோஜனமுள்ளவை.” (2 தீ. 3:16, 17) நம்முடைய தினசரி நடைமுறையொழுங்கில் பைபிள் படிப்புக்காக நேரத்தை நாம் எவ்வாறு கண்டடையலாம்? சிலர் ஒவ்வொரு நாள் காலையிலும் சில நிமிடங்கள் முன்பாக எழுந்திருப்பதன்மூலம் இதைச் செய்ய முடியும் என்பதை கண்டிருக்கின்றனர். அப்போது அவர்கள் அதிக கவனம் செலுத்த மனம் இடங்கொடுக்கிறது. படுக்கைக்குச் செல்வதற்குமுன் சில நிமிடங்கள் வாசிப்பதை சிறந்ததாக மற்றவர்கள் காண்கின்றனர். பகற்பொழுதில் வீட்டிலிருக்கும் மனைவிமார்கள் மற்றவர்கள் வேலையிலிருந்தோ பள்ளியிலிருந்தோ வீடு திரும்பும்முன் மத்தியான வேளைகளில் சிறிது நேரத்தை ஒதுக்க முடியலாம். சிலர் ஒழுங்கான பைபிள் படிப்போடுகூட அறிவிப்போர் (Proclaimers) புத்தகத்தைப் படிப்பதை தங்கள் வாராந்தர படிப்பு நடைமுறையொழுங்கில் சேர்த்திருக்கின்றனர்.
10 நாம் புதிய பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்கையில் நம்முடைய பழைய பழக்கங்களுடன் அவை முரண்படுவதற்கு உண்மையில் சாத்தியமிருக்கிறது. கடந்த காலத்தில் முக்கியமற்ற காரியங்கள் நமக்குக் கிடைக்கும் நேரத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் மனச்சாய்வை நாம் கொண்டிருந்திருக்கலாம். அந்த மாதிரிச்சட்டத்திலிருந்து வெளிவருவது எளிதான காரியமல்ல. நாம் படிப்புப் பழக்கங்களைக் கொண்டிருக்க வேண்டுமென யாரும் நமக்கு கட்டளையிடுவதில்லை; இது சம்பந்தமாக நாம் செய்பவற்றிற்கு கணக்குக்கொடுக்க வேண்டிய தேவையில்லை. நம் படிப்புப் பழக்கங்களில் நிலையாக இருப்பது “மிக முக்கியமான காரியங்க”ளுக்கான நம்முடைய போற்றுதலிலும் அவற்றிலிருந்து பயனடைய “வாய்ப்பான காலத்தை” கண்டடையவேண்டும் என்ற நம்முடைய விருப்பத்திலும் அதிகமாக சார்ந்திருக்கிறது.—பிலி. 1:10, NW; எபே. 5:16, NW.
11 தேவையான போதனையையும் உற்சாகமூட்டுதலையும் அளிப்பதன்மூலம் நம்முடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தில் கிறிஸ்தவ கூட்டங்கள் இன்றியமையாத பாகத்தை வகிக்கின்றன. எனவே, கூட்டங்களில் ஆஜராதல் நம்முடைய ஒழுங்கான நடைமுறையொழுங்கின் மற்றொரு முக்கியமான பாகமாகும். இதன் முக்கியத்துவத்தை பவுல் அறிவுறுத்தினார். இது விருப்பத்தேர்வின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒரு தெரிவல்ல.—எபி. 10:24, 25.
12 நம்முடைய வாராந்தர வேலைக்கான அட்டவணையை திட்டமிடுகையில் எவ்வாறு நடைமுறையொழுங்கு காட்டப்படலாம்? சிலர் தங்களுடைய சொந்தக் காரியங்களைக் கவனிப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிவைத்து, நேரம் கிடைக்கும்போது செல்வதற்கு தங்கள் அட்டவணையில் கூட்டங்களை நுழைக்கின்றனர், ஆனால் அதற்கு எதிர்மாறானதே இருக்கவேண்டும். நம்முடைய வாராந்தரக் கூட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும், மற்ற நேரங்களில் வேறு காரியங்கள் திட்டமிடப்பட வேண்டும்.
13 ஒழுங்காக கூட்டங்களில் ஆஜராதல் நல்ல திட்டத்தையும் குடும்ப ஒத்துழைப்பையும் தேவைப்படுத்துகிறது. நம்மில் அநேகர் வாராந்தர நாட்களில் அடிக்கடி நேரம் கிடைப்பது அரிதாகுமளவிற்கு சுறுசுறுப்பான வேலை அட்டவணையைக் கொண்டிருக்கிறோம். கூடுமானால், குடும்பத்தினர், சாப்பிட்டு, தயாராகி, கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வந்துசேருவதற்கு போதுமான நேரம் இருக்கும்படி, மாலையுணவை முன்னதாகவே கொண்டிருக்க திட்டமிட வேண்டியதையும் இது அர்த்தப்படுத்துகிறது. அதற்காக பல்வேறு வழிகளில் குடும்ப அங்கத்தினர்கள் ஒத்துழைக்கலாம்.
14 ஒழுங்கான நடைமுறையொழுங்கில் முன்னேறுகிறவர்களாய் தொடர்ந்து நடக்கவேண்டுமென்றால் ஒழுங்காக வெளி ஊழியத்திற்கு செல்வதும் இன்றியமையாததாகும். இராஜ்ய செய்தியை பிரசங்கிக்க வேண்டிய நம்முடைய முக்கியமான உத்தரவாதத்தை நாமனைவரும் தெளிவாகவே உணர்ந்தவர்களாக இருக்கிறோம். அதுவே நம்மை யெகோவாவின் சாட்சிகளாக்குகிறது. (ஏசா. 43:10) இன்று செய்யப்படுகிற வேலையில் அதிக அவசரமானதும் பயனளிக்கிறதுமான வேலையாக இது இருப்பதால், நம்முடைய அன்றாட நடைமுறையொழுங்கில் இதை சரியாகவே முக்கியமற்ற பாகமாக நாம் எந்த விதத்திலும் கருதமுடியாது. பவுல் எச்சரித்த விதமாக: “ஆகையால், அவருடைய நாமத்தை வெளிப்படையாக அறிவிக்கிற உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை . . . எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.”—எபி. 13:15, NW.
15 ஒவ்வொரு வாரமும் நம்முடைய வேலைகளை திட்டமிடுகையில் வெளி ஊழியத்திற்கென்று குறிப்பிட்ட நேரங்களை நாம் ஒதுக்கிவைக்க வேண்டும். ஒருவேளை ஒவ்வொரு வாரமும் பல தடவைகள் ஊழியத்திற்கான கூட்டங்களை சபை ஏற்பாடுசெய்திருக்கலாம், எதை நாம் ஆதரிக்கலாம் என்பது வெறுமனே தீர்மானிக்க வேண்டிய ஒன்றாயிருக்கிறது. பத்திரிகைகளையும் மற்ற பிரசுரங்களையும் கொண்டு வீட்டுக்கு வீடு ஊழியம், மறுசந்திப்புகள் செய்தல், பைபிள் படிப்புகள் நடத்துதல் போன்ற ஊழியத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் ஒரு பங்கைக் கொண்டிருக்க முயற்சிசெய்வது நல்லது. பிரசுரங்களைக் கொண்டுசென்று, சம்பாஷணைகளை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகளுக்காக விழிப்புடன் இருப்பதன்மூலம் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தலில் ஈடுபட முன்கூட்டியேகூட திட்டமிடலாம். பொதுவாக, நாம் மற்றவர்களுடன் ஊழியத்திற்கு செல்வதால் இருவருக்கும் ஏற்றதாக இருக்கும் விதத்தில் நாம் ஏற்பாடுகளைச் செய்ய மற்றவர்களுடைய அட்டவணையைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
16 பிராந்தியத்தில் அக்கறையின்மை இருப்பினும் நம்முடைய பிரசங்கித்தலின் நடைமுறையொழுங்கு காத்துக்கொள்ளப்பட வேண்டும். வெகு சிலரே சாதகமாக பிரதிபலிப்பார்கள் என்று நாம் முன்னதாகவே அறிந்திருக்கிறோம். (மத். 13:15; 24:9) எசேக்கியேல் ‘கலகத்தனமும், கடினமுகமும், முரட்டாட்ட இருதயமும்’ கொண்டிருந்த ஜனங்களிடம் பிரசங்கிக்கும்படி பொறுப்பளிக்கப்பட்டிருந்தார். எசேக்கியேலுடைய “நெற்றியை அவர்களுடைய நெற்றியைப் போல கெட்டியாக, வச்சிரக்கல்லைப்போல, கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்குவதன்” மூலம் யெகோவா அவருக்கு உதவுவதாக வாக்களித்திருந்தார். (எசே. 2:3, 4; 3:7-9) எனவே ஊழியத்திற்கான ஒழுங்கான நடைமுறையொழுங்கு விடாமுயற்சியை தேவைப்படுத்துகிறது.
17 பின்பற்றுவதற்கான நல்ல முன்மாதிரிகள்: முன்நின்று வழிநடத்த யாரேனும் இருந்தால் நம்மில் அநேகர் ஊழியத்தில் சிறந்து விளங்குவோம். பவுலும் அவருடைய கூட்டாளிகளும் நல்ல முன்மாதிரி வைத்தனர், தன்னைப் பின்பற்றும்படி அவர் மற்றவர்களைத் தூண்டினார். (பிலி. 3:17) அவருடைய நடைமுறையொழுங்கு அவரை ஆவிக்குரிய விதத்தில் பலமாக வைத்துக்கொள்வதற்கு இருந்த எல்லா அவசியமான அடிப்படைக் காரியங்களையும் உட்படுத்தியது.
18 இன்றும்கூட, நாம் சிறந்த முன்மாதிரிகளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். எபிரெயர் 13:7-ல் பவுல் ஊக்குவித்தார்: “உங்களை நடத்துகிறவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.” கிறிஸ்து நம்முடைய முன்மாதிரியாயிருக்கிறார் என்பது உண்மைதான், ஆனால் நாம் முன்நின்று வழிநடத்துகிறவர்களின் விசுவாசத்தைப் பின்பற்றலாம். பவுலைப்போல மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரிகளாக இருக்கவேண்டிய தேவையைக் குறித்து மூப்பர்கள் உணர்வுள்ளவர்களாக இருக்கவேண்டும். அவர்களுடைய தனிப்பட்ட சூழ்நிலைமைகள் வேறுபட்டாலும் ஒவ்வொருவரும் ராஜ்ய அக்கறைகளை முதலிடத்தில் வைப்பதன்மூலம் ஒழுங்கான நடைமுறையொழுங்கைக் காத்துக்கொள்வதைக் காட்ட முடிந்தவர்களாக இருக்கவேண்டும். மூப்பர்கள், வேலை மற்றும் குடும்பப் பொறுப்புகள் இருந்தபோதிலும், தனிப்பட்ட படிப்பு, கூட்டத்தில் ஆஜராதல், வெளி ஊழியத்தில் முன்நின்று வழிநடத்துதல் ஆகியவற்றில் நன்கு ஸ்தாபிக்கப்பட்ட பழக்கங்களைக் கொண்டிருக்கவேண்டும். மூப்பர்கள் “தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிற”தற்கு நிரூபணமளிக்கையில் சபையிலுள்ள அனைவரும் ஒழுங்கான நடைமுறையொழுங்கில் தொடர்ந்து செயல்பட உற்சாகப்படுத்தப்படுவார்கள்.—1 தீ. 3:4, 5.
19 புதிய ஊழிய ஆண்டுக்கான இலக்குகள்: நம்முடைய தனிப்பட்ட நடைமுறையொழுங்கைக் குறித்துச் சிந்திப்பதற்கு புதிய ஊழிய ஆண்டின் துவக்கம் பொருத்தமான சமயமாக இருக்கிறது. கடந்த வருடத்தின் நம்முடைய செயல்களை மறுபார்வை செய்தது எதைக் காட்டுகிறது? நம்முடைய செயலின் அளவை நாம் காத்துக்கொள்ள அல்லது கூடுமானால் முன்னேற்றுவிக்க முடிந்ததா? நம்முடைய தனிப்பட்ட படிப்பில் நாம் அதிக முழுநிறைவானவர்களாக ஆகியிருக்கலாம். ஒழுங்காக கூட்டங்களில் ஆஜராவதில் முன்னேறியிருக்கலாம் அல்லது துணைப் பயனியர்களாக சேவித்ததன்மூலம் நம்முடைய வெளி ஊழியத்தை அதிகரித்திருக்கலாம். ஒருவேளை நம்முடைய சபையிலோ குடும்பத்திலோ உள்ள மற்றவர்களுக்காக நாம் செய்திருந்த கிறிஸ்தவ இரக்கத்தின் குறிப்பிட்ட செயல்களை குறிப்பிட முடிந்தவர்களாய் இருக்கலாம். அவ்வாறிருந்தால், கடவுளுக்குப் பிரியமான வழியில் நாம் நடந்திருக்கிறோம் எனக் களிகூருவதற்கும் காரணமிருக்கிறது, மேலும் “தொடர்ந்து அதிக முழுமையாய் அதைச் செய்”வதற்கு நமக்கு நல்ல காரணம் இருக்கிறது.—1 தெ. 4:1, NW.
20 நம்முடைய நடைமுறையொழுங்கு ஒருவேளை நிலையற்றதாகவோ ஒழுங்கற்றதாகவோ இருந்திருந்தால் அப்போதென்ன. நாம் ஆவிக்குரிய விதமாக எவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தோம்? ஏதேனும் காரணத்தால் நம்முடைய முன்னேற்றம் தடைசெய்யப்பட்டிருந்ததா? யெகோவாவிடம் உதவி கேட்பதுடன் முன்னேற்றம் ஆரம்பிக்கிறது. (பிலி. 4:6, 13) உங்கள் நடைமுறையொழுங்கில் சரிப்படுத்துதல் செய்யவேண்டிய பகுதிகளுக்காக குடும்பத்திலுள்ள மற்றவர்களுடைய உதவியைக் கேட்க, உங்கள் தேவைகளைக் குறித்து அவர்களுடன் கலந்தாலோசியுங்கள். உங்களுக்குப் பிரச்சினைகள் இருந்தால், மூப்பர்களிடம் உதவி கேளுங்கள். நாம் உள்ளார்வமிக்க முயற்சியெடுத்து யெகோவாவின் வழிநடத்துதலுக்கு பிரதிபலித்தால், “வீணரும் கனியற்றவர்களுமாயி”ருப்பதை தவிர்ப்போம் என்பதில் நாம் உறுதியாயிருக்கலாம்.—2 பே. 1:5-8.
21 ஒழுங்கான நடைமுறையொழுங்கில் நடத்தல் உங்கள் முயற்சிகளை பயனுள்ளதாக்கும் ஆசீர்வாதங்களுக்கு வழிநடத்தும். நீங்கள் ஒழுங்கான நடைமுறையொழுங்கில் நடக்க தீர்மானித்திருப்பதால், “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.” (ரோ. 12:11)—இந்தப் பொருளின்பேரில் மேலுமான கலந்தாராய்ச்சிக்கு, ஆங்கில காவற்கோபுரம், மே 1, 1985, பக்கங்கள் 13-17-ஐப் பார்க்கவும்.