வெளி ஊழியத்தில் முழு ஆத்துமாவோடு இருங்கள்
பகுதி 4: நம்முடைய ஊழியத்தை திறம்பட்டவிதமாக நிறைவேற்ற ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல்
1 முழு ஆத்துமாவோடு ஈடுபடும் பொது ஊழியம், நல்ல தனிப்பட்ட ஒழுங்கமைப்பைத் தேவைப்படுத்துகிறது. இன்று நம்முடைய ஊழிய வேலைக்கு இயேசு ஒரு முதன்மையான முன்மாதிரியை வைத்தார். (லூக். 10:1, 2; அப். 1:8) அவருடைய முதல்–நூற்றாண்டு சீஷர்கள் தங்களுடைய ஊழியத்தை நிறைவேற்றின விதத்திலிருந்தும் நாம் கற்றுக்கொள்ளலாம். (அப். 5:42; 2 தீமோ. 4:5) ஆனால் நீங்கள் எவ்வாறு மேம்பட்ட விதத்தில் ஒழுங்கமைக்கப்பட்டு, அதே போன்ற நல்ல விளைவுகளை இன்று அனுபவிக்கலாம்?
2 வெளி ஊழியத்துக்காக நேரத்தை அட்டவணையிடுங்கள்: நம்முடைய ஊழியம் நம்முடைய வாழ்க்கையின் தற்செயலான அல்லது முக்கியமில்லாத ஓர் அம்சம் அல்ல. நம்முடைய ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு நாம் ஒதுக்கி வைக்கும் நேரத்தின் அளவு தற்செயலாக நிகழும்படி விடப்படமுடியாது. நம்முடைய ஊழியத்தை திறம்பட்டவிதமாக ஒழுங்கமைப்பதற்கு, அதனுடைய பல்வேறு அம்சங்களுக்காக நாம் நேரத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். (எபே. 5:15, 16) அநேக பிரஸ்தாபிகள் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு மணிநேரங்கள் ஊழியத்துக்கு ஒதுக்கலாம் என்ற ஓர் இலக்கை வைப்பது உதவியிருப்பதாக கண்டிருக்கின்றனர். ஒவ்வொரு வாரமும் வெளி ஊழியத்தில் பங்கு கொள்வதற்கு அவர்களுடைய வேலைகளை ஒழுங்குபடுத்துவதை இது பொதுவாக தேவைப்படுத்துகிறது. வெளி ஊழியத்தின் பல்வேறு அம்சங்களில் ஒழுங்காக பங்கெடுப்பதற்காக நேரத்தை அட்டவணையிடுவதற்கு கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்ய வேண்டும்.—உபா. 6:7; நீதி. 22:6.
3 நோக்கமுள்ள இலக்குகளை வையுங்கள்: அடையக்கூடிய இலக்குகள் நீங்கள் நாடிச் செல்லுவதற்கு எதையாவது கொடுப்பதாய் இருக்கும். உங்களுடைய இலக்கை அடையும் போது, சாதனையின் மகிழ்ச்சியை நீங்கள் பெறுவீர்கள். (நீதி. 13:12) அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு அறிவுரை கூறினார்: “ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக.” (பிலி. 3:16) உங்களுடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தின் எல்லா அம்சங்களோடும்கூட, உங்களுடைய வெளி ஊழியம் ஓர் ஒழுங்கான நடைமுறைக்கு அத்தாட்சியை கொடுக்க வேண்டும்.
4 உதாரணமாக, உங்களிடம் போதுமான அளவு துண்டுப்பிரதிகளும் கைப்பிரதிகளும் இருக்கின்றனவா? தற்போதைய பத்திரிகைகள் போதுமான அளவு நீங்கள் வைத்திருக்கிறீர்களா, அவைகள் நல்ல நிலையில் இருக்கின்றனவா? வீட்டுக்கு–வீடு பதிவுச் சீட்டுகளை நீங்கள் நன்றாக பயன்படுத்துகிறீர்களா, அக்கறையை பதிவு செய்வதற்கு ஒன்றையும், மற்றொன்றை வீட்டில் இல்லாதவர்களுக்காகவும் உபயோகிக்கிறீர்களா?
5 ஊழியத்தில் பங்கு கொள்வதற்கு முன்பு, தற்போதைய சம்பாஷணைகளுக்குப் பேச்சுப் பொருளை விமர்சிக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். அளிக்கப்படும் பிரசுரங்களிலிருந்து பேச்சுக் குறிப்புகளை தனியே பிரித்து வையுங்கள், அக்கறையைத் தூண்டுவதற்கு இவைகளை திறம்பட்ட விதமாக உபயோகிக்க தயாராக இருங்கள். வெளி ஊழிய கைப்புத்தகமாகிய வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை உபயோகிப்பதற்கும் தயாராயிருங்கள். சந்திப்புகளுக்கு இடையேயும்கூட அதில் இருக்கும் அநேக ஆலோசனைகளில் சிலவற்றை நீங்கள் விரைவாக பார்த்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட நடைமுறையான குறிப்புகளை பொருத்துவது உங்களுடைய ஊழியத்தின் திறம்பட்டதன்மையை மேம்படுத்தும்.
6 இந்தக் கடைசி நாட்களின்போது “நற்செய்தியின் பரிசுத்த வேலையில்” ஒரு முழுமையான பங்கை கொண்டிருப்பது ஓர் ஆசீர்வாதமான சிலாக்கியமாகும். (ரோ. 15:16) முடிந்த அளவு “உதடுகளின் கனியாகிய” சிறந்த சாட்சியை கொடுப்பதன் மூலம் நாம் நம்முடைய ஊழியத்தை நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும். (எபி. 13:15; ஓசியா 14:2-ஐ ஒப்பிடுக.) இதைச் செய்வதற்கு, வெளி ஊழியத்தில் ஒழுங்காக பங்குகொள்வதற்கு நேரத்தை நாம் அட்டவணையிடுவோமாக, மேலும் யெகோவாவின் துதிக்கென நம்முடைய ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு நியாயமான இலக்குகளை நாம் வைப்போமாக.