வெளி ஊழியத்தில் முழு ஆத்துமாவோடு இருங்கள்
பகுதி 5: முழு ஆத்துமாவோடுகூடிய சேவையின் செழுமையான பலன்கள்
1 யெகோவா முழு ஆத்துமாவோடு சேவை செய்யும் தம் ஊழியர்களுக்குச் செழுமையான பலன்களைத் தாராளமாகக் கிடைக்கும்படிச் செய்கிறார். (சங். 116:12) நம்முடைய ஊழியத்தில் யெகோவாவிடத்திலிருந்து முழு அளவான ஆசீர்வாதங்களை நாம் எவ்வாறு அனுபவிக்கலாம்? என்ன நன்மைகள் நமக்கு இனி கொடுக்கப்பட இருக்கின்றன? அவருடைய அங்கீகாரத்தையும் ஆதரவையும் நமக்கு உறுதிப்படுத்திக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?
2தனிப்பட்ட முயற்சி தேவைப்படுகிறது: கடவுள் கொடுக்கும் பலன்களை நீங்கள் அனுபவிக்கும் அளவு கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கு உங்கள் தனிப்பட்ட முயற்சிகளின்பேரில் அதிகம் சார்ந்திருக்கிறது. ஊழியத்தைக் குறித்துப் பவுல் பின்வருமாறு எழுதினார்: “அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்.” (1 கொரி. 3:8) ஆகையால் நாம் நம்மால் முடிந்தவரை ஊழியத்தில் முழு பங்கைக் கொண்டிருப்போமாக. பவுல் அநேகருக்கு உதவி செய்வதில் தனிப்பட்ட பலனை உடையவனாயிருந்தான், முழு சபைகளுங்கூட கடவுளை அறிய வருவதற்கு அவன் உதவி செய்தான். விசுவாசத்தில் அவர்களுடைய உறுதியான தன்மையைக் கவனிப்பது அவனுக்கு எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியின் உணர்வை அளித்தது! (1 தெச. 2:19, 20) பவுல் ஊழியத்தில் முழுமையாக ஈடுபட்ட அளவுக்கு ஈடுபட உங்களுடைய சூழ்நிலைமைகள் பெரும்பாலும் உங்களை அனுமதிக்காது. என்றபோதிலும், ஒரு நபரையோ, அல்லது செம்மறியாட்டைப் போன்ற நபர்களாலான ஒரு குடும்பத்தையோ ஜீவனுக்குச் செல்லும் பாதையில் உறுதியாக நிலைத்திருக்கச் செய்வதற்கு உதவி செய்வது ஒரு செழுமையான ஆசீர்வாதமாக இருக்குமல்லவா? வீட்டுக்கு வீடு ஊழியத்தில் கடினமாக உழைப்பதற்கும், அவற்றை மறு சந்திப்புகளாலும் பைபிள் படிப்புகளாலும் பின்தொடருவதற்கும் என்னே ஓர் ஊக்குவிப்பு!
3 கூடுதலான பலன்கள்: முழு ஆத்துமாவோடு செய்யும் விலைமதிப்பற்ற ஒரு நற்பலன் என்னவெனில், ஓர் உடன் வேலையாளாக ஒரு நபர் யெகோவாவிடமும் இயேசு கிறிஸ்துவிடமும் நெருக்கமாக இழுக்கப்படுகிறார். (மத். 11:29, 30; 1 கொரி. 3:9) ஊழியத்தில் உங்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கும் கடவுளுடைய ஆவியை உணர்வதில் என்னே மகிழ்ச்சி! (மத். 10:20; யோ. 14:26) மேலும் சபையிலிருக்கும் மற்றவர்களோடு ஒருவருக்கொருவர் உதவியாக ஊக்கமாய் வேலை செய்வது நம்முடைய அன்பு மற்றும் ஐக்கியத்தின் கட்டைப் பலப்படுத்துகிறது.
4 இப்படிப்பட்ட கடைசி நாட்களில் அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு அவர் உபயோகிக்கும் அமைப்பை நாம் முழுவதுமாக ஆதரிக்காவிட்டால், யெகோவாவிடமிருந்து முழுமையான நன்மையை நாம் அனுபவிக்க முடியாது. (2 இராஜாக்கள் 10:15-ஐ ஒப்பிடவும்.) கடவுளுடைய வழியின் மூலம் நாம் பெற்றுக்கொள்ளும் வழிநடத்துதலை நெருக்கமாகவும் முழு இருதயத்தோடும் பின்பற்றி, சபை வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபடும்போது, சாத்தானின் தந்திரமான சூழ்ச்சிகளிலிருந்து நாம் ஆவிக்குரிய பிரகாரமாய் பாதுகாக்கப்படுகிறோம். ஊழியத்தில் அதிக பலன் தரும் பங்கை நாம் கொண்டிருக்க முடிகிறது.
5 வெளி ஊழியத்தில் முழு ஆத்துமாவோடு இருப்பது பற்றிய இந்த ஐந்து-பாக தொடர்க் கட்டுரைகள் உட்பட்டிருக்கும் அநேக காரணங்களைச் சிறப்பித்துக் காண்பித்திருக்கிறது. ஒரு நபரை முழு ஆத்துமாவோடு ஈடுபட உந்துவிக்கச் செய்து, யெகோவாவுக்காகப் போற்றுதலை வளர்ப்பதற்கு என்ன திறவுகோல்கள் இருக்கின்றன என்பதை நீங்கள் திரும்பவும் நினைவுக்குக் கொண்டுவருவீர்களா? (ஆகஸ்ட்) வெளி ஊழியத்தில் ஆர்வத்தை வளர்ப்பதற்குத் தயாரிப்பு ஏன் இன்றியமையாததாய் இருக்கிறது? நாம் எவ்வாறு தயாரிக்கலாம்? (செப்டம்பர்) மற்றவர்கள் முழு ஆத்துமாவோடு ஈடுபடுவதற்கு அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபிகள் எவ்வாறு உதவலாம்? (அக்டோபர்) ஊழியத்தில் முழு ஆத்துமாவோடு ஈடுபட நல்ல தனிப்பட்ட ஒழுங்கமைவு நமக்கு எவ்வாறு உதவி செய்யும்? (நவம்பர்) இந்த ஆலோசனைகளை நீங்கள் பொருத்துகிறீர்களா?
6 தமக்குக் கீழ்ப்படிவதன் மூலம் நாம் நன்மை அடையும்படி யெகோவா விரும்புகிறார். (ஏசா. 48:17) மேலும், முழு ஆத்துமாவோடு சேவை செய்வதனால் வரும் நன்மைகள் உங்களுக்குச் செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பவர்களை எட்டுகிறது. (1 தீமோ. 4:15, 16) செய்யப்பட இருக்கும் வேலையில் நீங்கள் உங்களையே ஊக்கமாக ஈடுபடுத்துகையில் யெகோவா இதை கவனிப்பார் என்று நீங்கள் நிச்சயமாயிருக்கலாம். நித்திய ஜீவன் என்ற “சுதந்தரமாகிய பலனை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.”—கொலோ. 3:23, 24.