வெளி ஊழியத்தில் முழு ஆத்துமாவோடு இருங்கள்
பகுதி 1: யெகோவாவுக்கான போற்றுதலின் மதிப்பு
1 ஊழியத்தில் முழு ஆத்துமாவோடு இருப்பது, யெகோவாவுக்கும் அவர் நமக்காகச் செய்திருக்கும் எல்லாக் காரியங்களுக்குமான ஆழ்ந்த போற்றுதலிலிருந்து வருகிறது. (2 சாமு. 22:2, 3) கடவுளிடமிருந்து பிரிந்திருக்கும் எல்லா மனிதவர்க்கத்தின் நிலைமையைப் பற்றிய பரிவான எண்ணம், ஊழியத்தில் நாம் ஊக்கமாக ஈடுபட நம்மை உந்துவிக்க வேண்டும். (மத். 9:36; 2 கொரி. 5:14, 15) யெகோவாவுக்கு நாம் அதிக பக்தியுள்ளவர்களாக இருந்து, ஜனங்களிடம் அதிக அக்கறையுள்ளவர்களாக இருந்தால், வெளி ஊழியத்தில் ஆர்வத்தோடு பங்குகொள்ள நாம் அதிகமாக உந்துவிக்கப்படுவோம். (மத். 22:37–39) அப்பொழுது நம்முடைய ஊழியம் உயர்வாக மதிக்கப்படும் ஒரு பொக்கிஷமாக ஆகிறது. (2 கொரி. 4:7) ஆனால் ஊழியத்துக்கான அப்பேர்ப்பட்ட போற்றுதல் எவ்வாறு வளர்க்கப்படலாம்?
போற்றுதலை வளர்ப்பதற்கான திறவுகோல்கள்
2 தனிப்பட்ட மற்றும் சபை பைபிள் படிப்போடு கூடிய ஜெபசிந்தையான தியானம், யெகோவாவோடு ஒரு தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொள்ள நமக்கு உதவுகிறது. அவருடைய குணாதிசயங்கள் மற்றும் ஆள்தன்மையின் அழகை நாம் பகுத்துணர ஆரம்பிக்கிறோம். வாராந்தர பைபிள் வாசிப்புக்கான அட்டவணையை நீங்கள் பின்பற்றுகிறீர்களா? சங்கத்தின் பிரசுரங்களைப் படிப்பதற்கு நீங்கள் ஒழுங்காக நேரத்தை ஒதுக்கி வைக்கிறீர்களா? நீங்கள் எல்லா சபை கூட்டங்களுக்கும் தயார் செய்து, ஆஜராகி, பங்கு பெறுகிறீர்களா? (எபி. 10:24, 25) ஒவ்வொரு தனிப்பட்ட படிப்பின் போதும், அதற்குப் பிறகும் நோக்கமுள்ள தியானம், நம்முடைய அனலான இருதயமுள்ள கடவுளின் இனிமைக்கும், மெய் வணக்கத்துக்கான அவருடைய ஏற்பாடுகளுக்கும் இருதயப் பூர்வமான போற்றுதலை வளர்க்கும்.—சங். 27:4.
3 முழு ஆத்துமாவோடு சேவை செய்யும் மற்ற கடவுளுடைய ஊழியர்களின் முன்மாதிரியை நெருக்கமாக சிந்திப்பது நம்முடைய போற்றுதலின் அளவை அதிகரிப்பதற்கு மற்றொரு வழியாகும். அவரிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைக்காக எரேமியா தீர்க்கதரிசி அதிக ஆர்வம் காட்டி நிறைவேற்றினார். (எரே. 20:9) இயேசு போற்றுதலான ஆவியையும் வைராக்கியத்தையும் வெளிக்காட்டி, ஒரு மாதிரியை விட்டுச் சென்றார். (யோவான் 4:34) தன்னிடமாக காண்பிக்கப்பட்ட தெய்வீக இரக்கத்துக்காக தன் நன்றியை ஊழியத்தில் தன்னுடைய உழைப்பின் மூலம் அப்போஸ்தலனாகிய பவுல் வெளிக்காட்டினான். (1 தீமோ. 1:12, 13, 17) அப்பேர்ப்பட்ட முன்மாதிரிகளையும், நவீன காலங்களில் உள்ள முன்மாதிரிகளையும் நாம் ஆழந்து சிந்திக்கையில் நாம் போற்றுதலை வளர்க்கலாம். அது நம்மை ஊழியத்தில் முழு ஆத்துமாவோடிருக்க செய்விக்கும்.
4 யெகோவாவின் கண்ணியத்தின் மகத்தான சிறப்பைப் பற்றி நாம் கற்றறியும் போதும், அவருடைய அதிசயமான கிரியைகளோடு நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் போதும் அவருடைய மகத்துவத்தைப் பற்றி அறிவிக்க நாம் உந்தப்பட்டு, அவருடைய துதியை கெம்பீரித்துப் பாடுவோம். (சங். 145:5–7) ராஜ்ய செய்தியைப் பரப்புவதற்கான வழிகளை சுறுசுறுப்பாகத் தேடுவதன் மூலம், தெய்வீக நாமத்துக்குச் சாட்சி கொடுக்க நம்முடைய சந்தர்ப்பங்களை நாம் பொக்கிஷமாக கருதுகிறோம் என்பதை நாம் காண்பிக்கிறோம்.—லூக்கா 6:45.
5 ஆனால் ஊழியத்தில் நம்மை முழு ஆத்துமாவோடு பங்கு கொள்ளச் செய்வதற்கு நம்மை உந்துவிக்கக்கூடிய மற்ற காரியங்கள் ஏதாவது இருக்கின்றனவா? அப்படியிருந்ததென்றால், அவை யாவை? மூப்பர்கள், உதவி ஊழியர்கள், பயனியர்கள், மேலும் மற்ற அனுபவமிக்க ராஜ்ய அறிவிப்பாளர்கள் எவ்வாறு உதவலாம்? ஆர்வத்தை வளர்ப்பதில் இலக்குகள் என்ன பாகத்தை வகிக்கின்றன? என்ன நன்மைகள் எதிர்பார்க்கப்படலாம்? இந்தக் கேள்விகளும் மற்றவைகளும் இந்த ஐந்து–பாக தொடர் கட்டுரைகளில் பதிலளிக்கப்படும். இது நம் ராஜ்ய ஊழியத்தில் அடுத்து வரும் இதழ்களில் தொடர்ந்து வரும்.