சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
ஆகஸ்ட் 5-ல் துவங்கும் வாரம்
பாட்டு 173 (45)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். இந்தச் சனிக்கிழமை பத்திரிகை ஊழியத்தில் உபயோகிப்பதற்கு தற்போதைய பத்திரிகைகளில் உள்ள கட்டுரைகளை சிறப்பித்துக் காட்டுங்கள்.
15 நிமி: “ஒரு நோயாளியை சந்திப்பது—எவ்வாறு உதவி செய்வது?” விழித்தெழு! மார்ச் 8, 1991-ல் உள்ள விஷயங்களின் பேரில் பேச்சு. வயதானவர்கள், உடல் வலிமையற்றவர்கள் அல்லது வீட்டிலே அடைப்பட்டு இருப்பவர்களுக்கு உதவி செய்ய சபையின் ஏற்பாடுகளை குறிப்பிடுங்கள். சரியாக உடை உடுத்தியிருப்பதனால் வரும் நன்மையைப் பற்றி பக்கம் 11, பாரா 4-ல் உள்ள குறிப்பை அழுத்திக் காட்டுங்கள். (இந்திய மொழிகளில்: நம் ராஜ்ய ஊழியம் 12/88 பக்கம் 1)
20 நிமி: “ஊழியத்தில் பொறுமையாயும் முழுமையாய் செய்கிறவர்களாயும் இருங்கள்.” கட்டுரையின் பேரில் கேள்வி–பதில் சிந்திப்பு. விசேஷமாக அடிக்கடி செய்து முடிக்கப்பட்ட பிராந்தியங்களில் பொறுமையுடன் இருப்பதற்கான தேவையை அழுத்திக் காட்டுங்கள். பாரா 6-ஐ கலந்தாலோசித்த பிறகு, “இதோ!” புரோஷுரை அளிக்கையில் சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளை எவ்வாறு உபயோகிப்பது என்பதை பிரஸ்தாபி நடித்துக் காட்டுமாறு செய்யுங்கள்.
பாட்டு 156 (10), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 12-ல் துவங்கும் வாரம்
பாட்டு 162 (89)
10 நிமி: சபை அறிவிப்புகள், கணக்கு அறிக்கை. தேவராஜ்ய செய்திகள். வார இறுதி நாட்களில் வெளி ஊழியத்துக்கான ஏற்பாடுகளை சபைக்கு ஞாபகப்படுத்துங்கள்.
15 நிமி: “வெளி ஊழியத்தில் முழு ஆத்துமாவோடு இருங்கள்—பகுதி 1.” ஊழியக் கண்காணியால் கேள்வி–பதில் கலந்தாலோசிப்பு. தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய வசனங்களை வாசிக்க முன்னமே நியமனம் செய்யுங்கள், சபைக்கு நடைமுறையான பொருத்தம் செய்யுங்கள். ஐந்து–பாக தொடர் கட்டுரைகளில் அக்கறையை உருவாக்குங்கள்.
20 நிமி: முழுநேர ஊழியம்—கடவுளோடு நடப்பதற்கு ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு. (மீகா 6:8) தகுதி வாய்ந்த மூப்பரோ அல்லது உதவி ஊழியரோ, கூடுமானால் முழு நேர ஊழியத்தில் இருக்கும் ஒருவர் அனலான உற்சாகமூட்டும் பேச்சை கொடுக்கிறார். (மே 15, 1989 காவற்கோபுரம் பக்கங்கள் 21–3-ஐ பார்க்கவும்.) (இந்திய மொழிகளில்: நம் ராஜ்ய ஊழியம் 8/89 பக்கங்கள் 1–2; 11/89 பக்கங்கள் 1–2) சபை பிரஸ்தாபிகள் தங்களுடைய சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி முழு நேர வேலையை எடுத்துக் கொள்வதைப் பற்றி அக்கறையோடு சிந்திப்பதற்கு உதவ நடைமுறையான ஆலோசனைகளை குறிப்பிடுங்கள். இரண்டு அல்லது மூன்று பயனியர்களை பேட்டி காணுங்கள். முழுநேர ஊழியத்தின் அநேக நன்மைகளை குறிப்பிடுங்கள். புதிய ஊழிய ஆண்டு பயனியர் சேவை செய்ய ஆரம்பிப்பதற்கு ஒரு சிறந்த நேரமாயிருக்கிறது. செப்டம்பர் 1, 1991-க்குள் ஆரம்பிப்பவர்கள் அடுத்த பயனியர் சேவை பள்ளிக்குச் செல்ல ஒருவேளை தகுதி பெறலாம்.
பாட்டு 204 (109), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 19-ல் துவங்கும் வாரம்
பாட்டு 32 (81)
10 நிமி: சபை அறிவிப்புகள். சபையின் சமீபத்திய வெளி ஊழிய அறிக்கைகளிலிருந்து சிறப்பு அம்சங்களை விமர்சியுங்கள். வெளி ஊழியத்தில் நிறைவேற்றிய செயல்களுக்காக பிரஸ்தாபிகளை பாராட்டுங்கள்.
20 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—பகுத்தறிவுடன்.” கேள்வி–பதில் சிந்திப்பு. பாரா 5-ல் உள்ள குறிப்புகளை நடித்துக் காட்டுங்கள். சாதுரியமாக கேள்விகளை கேட்டு, அந்தப் பொருளின் பேரில் பைபிள் என்ன சொல்கிறது என்பதை காண்பிப்பதன் மூலம், ஆரம்பத்தில் தர்க்கம் செய்யும் வீட்டுக்காரரை எவ்வாறு கையாளுவது என்பதை ஒரு திறம்பட்ட பிரஸ்தாபி நடித்துக் காண்பிக்கச் செய்யுங்கள். நடிப்பு நன்கு ஒத்திகை பார்த்திருக்கப்பட வேண்டும்.
15 நிமி: நான் எவ்வாறு சத்தியத்தை பெற்றேன். அனுபவங்கள். இரண்டு அல்லது மூன்று நபர்களை மூப்பர் பேட்டி காண்கிறார். கடவுளுடைய வார்த்தையும் அவருடைய அமைப்பும், ஒப்புக்கொடுத்தல் மற்றும் முழுக்காட்டுதல் என்ற நிலைக்கு எவ்வாறு அவர்களை உந்துவித்தது என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள். சத்தியத்தில் இருப்பதனால் அவர்கள் அனுபவிக்கும் நன்மைகளை அழுத்திக் காட்டுங்கள்.
பாட்டு 67 (38), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 26-ல் துவங்கும் வாரம்
பாட்டு 210 (31)
15 நிமி: மூப்பரோ அல்லது தகுதி வாய்ந்த உதவி ஊழியரோ சபை அறிவிப்புகளை கையாளுகிறார். கிடைக்கக்கூடிய புரோஷுர்களிலிருந்து பேச்சுக் குறிப்புகளை சபையாரிடம் கேளுங்கள். சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளோடு பொருந்தும் குறிப்புகளையும், புரோஷுரை வாசிப்பதற்கான வீட்டுக்காரரின் எதிர்பார்த்தலை வளர்க்கும் குறிப்புகளையும் எடுங்கள். புரோஷுருக்கு மாறிச் செல்வதையும், பொருத்தமான பேச்சுக் குறிப்பையும் சுருக்கமாக நடித்துக் காட்டுங்கள்.
18 நிமி: “சபை புத்தகப் படிப்பு ஏற்பாடு—பகுதி 1.” சபை புத்தகப் படிப்பு நடத்துபவர்களாக இருக்கும் உதவி ஊழியர்கள் அல்லது ஒன்று அல்லது இரண்டு மற்ற மூப்பர்களோடு அனுபவம் வாய்ந்த மூப்பரால் கலந்தாலோசிப்பு. சொந்த வார்த்தைகளில் குறிப்புகள் சொல்வது, சிந்திக்கப்பட்ட விஷயங்களை நடைமுறையாக பொருத்துவது போன்ற உள்ளூர் சபையில் விசேஷமாக தேவைப்படும் இரண்டு அல்லது மூன்று விஷயங்களை விசேஷமாக அழுத்திக் காட்டுங்கள்.
12 நிமி: சபை தேவைகள். சபைக்கு தேவைப்படுவதாக மூப்பர்கள் உணரும் குறிப்புகளின் பேரில் சிந்தியுங்கள். வட்டாரக் கண்காணியின் கடைசி விஜயத்தின் போது சபையின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட சில விஷயங்களை வேதாகமப் பூர்வமாக சிந்திக்கலாம்.
பாட்டு 42 (18), முடிவு ஜெபம்.
செப்டம்பர் 2-ல் துவங்கும் வாரம்
பாட்டு 56 (37)
15 நிமி: சபை அறிவிப்புகளும் கேள்விப் பெட்டி சிந்திப்பும். புரோஷுர்களை அளிப்பதிலும், பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதிலும் அனுபவங்களை கேளுங்கள்.
15 நிமி: “மறுசந்திப்புகளுக்கு கவனம் செலுத்துதல்.” மறுசந்திப்புகள் விஷயத்தில் கடந்த ஆறு மாதங்களில் சபையில் என்ன செய்யப்பட்டிருக்கிறது என்பதை ஊழிய கண்காணி பிரித்து ஆராய்கிறார். அக்கறை காண்பித்த ஆட்களை திரும்பவும் சென்று சந்திப்பதற்கு என்ன ஒழுங்கான ஏற்பாடுகள் இருக்கின்றன? இந்த முக்கியமான வேலையை வளர்க்க என்ன முன்னேற்றங்கள் செய்யப்படலாம்?
15 நிமி: “கெட்ட பழக்கங்கள் திரும்பவும் வருவதை தவிர்த்தல்.” விழித்தெழு! ஏப்ரல் 8, 1991-ல் இருக்கும் கட்டுரையின் பேரில் கலந்தாலோசிப்பு. (இந்திய மொழிகளில்: “ஒழுக்க சுத்தமே இளைஞருக்கு அழகு.” மே 1, 1990 காவற்கோபுரம்.)
பாட்டு 132 (70), முடிவு ஜெபம்.