டிசம்பர் மாத ஊழியக் கூட்டங்கள்
டிசம்பர் 9-ல் துவங்கும் வாரம்
பாட்டு 180 (100)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். இந்தச் சனிக்கிழமை பத்திரிகை ஊழியத்தில் உபயோகிப்பதற்குத் தற்போதைய பத்திரிகைகளிலிருந்து கட்டுரைகளைச் சிறப்பித்துக் காட்டுங்கள்.
20 நிமி: “சத்திய வார்த்தையைத் திறமையாகக் கையாளுங்கள்.” கேள்வி-பதில் மூலம் கட்டுரையைச் சிந்தியுங்கள். வீடுகளில் பைபிளை உபபோகிக்க வேண்டிய தேவைகளைச் சிறப்பித்துக் காட்டுங்கள். பாரா 5-ஐ கலந்தாலோசித்தப் பிறகு, கொடுக்கப்பட்டுள்ள அளிப்பை நடித்துக் காட்டுங்கள். சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளோடு பைபிளை எவ்வாறு அளிப்பது என்பதையும் சுருக்கமாக நடித்துக் காட்டுங்கள். மற்றொரு பைபிள் வேண்டாம் என்று எண்ணும் நபர்களுக்கு கடவுளுடைய வார்த்தை புத்தகத்தை மட்டுமே சில சமயங்களில் பிரஸ்தாபிகள் அளிக்க விரும்பலாம் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள்.
15 நிமி: “புதிய உலக மொழிபெயர்ப்பு—புலமை வாய்ந்ததும் நேர்மையானதும்.” ஆங்கில காவற்கோபுரம் மார்ச் 1, 1991-ல் வெளிவந்த கட்டுரையைக் கலந்தாலோசித்தல். ஊழியத்தில் பைபிளை அளிப்பதற்கு உதவியாக இருக்கும் குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டுங்கள். (இந்திய மொழிகளில்: “யெகோவா கொடுத்திருக்கும் உட்பார்வை.” ஆகஸ்ட் 1, 1990 காவற்கோபுரம்.)
பாட்டு 23 (40), முடிவு ஜெபம்.
டிசம்பர் 16-ல் துவங்கும் வாரம்
பாட்டு 161 (70)
8 நிமி: சபை அறிவிப்புகள். ஜனவரி மாதத்தின் போது துணைப்பயனியர் ஊழியம் செய்யுமாறு உற்சாகப்படுத்துங்கள்.
22 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—வீட்டு பைபிள் படிப்புகளை அறிமுகப்படுத்துதல்.” கேள்வி-பதில் சிந்திப்பு. அளிக்கப்பட்ட பைபிளின் பேரில் அக்கறை தெரிவித்திருக்கும் ஒரு நபரோடு பைபிள் படிப்பை எவ்வாறு ஆரம்பிக்கலாம் என்பதை ஓர் அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபி நடித்துக் காட்டுமாறு செய்யுங்கள். பிரசுரங்கள் அளிக்கப்பட்டிருந்தாலும், அளிக்கப்படாவிட்டாலும், காண்பிக்கப்பட்ட அக்கறையைப் பின்தொடரும்படி சகோதரர்களை உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: சபை தேவைகள் அல்லது “ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை.” பேச்சு. ஜனங்களின் வாழ்க்கையில் பைபிள் கொண்டிருக்கும் வல்லமையான பாதிப்பைக் காண்பிக்கும் காவற்கோபுரம் பத்திரிகையின் இந்த அம்சத்திலிருந்து அனுபவங்களைப் பயன்படுத்தலாம். ஏப்ரல் 1, 1991 மற்றும் ஆகஸ்ட் 1, 1991 இதழ்களில் இருக்கும் அறிக்கைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
பாட்டு 167 (107), முடிவு ஜெபம்.
டிசம்பர் 23-ல் துவங்கும் வாரம்
பாட்டு 96 (13)
10 நிமி: சபை அறிவிப்புகள், கணக்கு அறிக்கை, மற்றும் நன்கொடை பெற்றுக்கொண்டதாக சங்கம் தெரிவிக்கும் கடிதங்கள். கொடுப்பதில் தங்கள் பங்கைச் செய்ததற்காக சகோதரர்களைப் பாராட்டுங்கள். டிசம்பர் 25-ம் தேதிக்கு ஊழிய ஏற்பாடுகளை அறிவியுங்கள்.
20 நிமி: “சபை புத்தகப்படிப்பு ஏற்பாடு—பகுதி 5.” ஊழிய கண்காணியால் நடத்தப்படும் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. இந்த ஏற்பாட்டிலிருந்து சிலர் எவ்வாறு பயனடைந்திருக்கின்றனர் என்பதன் பேரில் குறிப்புகளைக் கேளுங்கள், அல்லது ஊழிய கண்காணியின் சந்திப்பால் உதவி பெற்றிருக்கும் ஒன்று அல்லது இரண்டு பேரைப் பேட்டி காணுங்கள்.
15 நிமி: “வீட்டு பைபிள் படிப்புகளுக்காகத் தயாரிப்பதும் நடத்துவதும்.” கட்டுரையின் பேரில் மூப்பரால் கையாளப்படும் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
பாட்டு 75 (58), முடிவு ஜெபம்.
டிசம்பர் 30-ல் துவங்கும் வாரம்
பாட்டு 105 (46)
10 நிமி: சபை அறிவிப்புகள். தேவ ராஜ்ய செய்திகள். வார இறுதி நாட்களில் அனைவரும் வெளி ஊழியத்தில் பங்குகொள்ளுமாறு உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “வெளி ஊழியத்தில் முழு ஆத்துமாவோடு இருங்கள்—பகுதி 5.” தொடர்ச்சியாக வெளிவந்த கட்டுரைகளில் கடைசி கட்டுரையின் பேரில் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. கொடுக்கப்பட்ட ஆலோசனைகளைக் கடைப்பிடிக்குமாறு அனைவரையும் அனலுடன் உற்சாகப்படுத்துங்கள். வைராக்கியமுள்ள பிரஸ்தாபியோ அல்லது பயனியரோ ஊழியத்தில் முழு பங்கைக் கொண்டிருந்ததனால் அனுபவித்த தனிப்பட்ட நன்மைகளைக் கூறும் பேட்டியைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
15 நிமி: என்றும் வாழலாம் புத்தகத்தை அளித்தல்: என்றும் வாழலாம் புத்தகத்தை நாம் அளிப்பதில் வீட்டுக்கு வீடு வேலை சந்தேகமின்றி முக்கியமான வழியாக இருக்கும். ஜனவரி மாதத்தின்போது இந்த வேலையில் பங்குகொள்வதற்கு நீங்கள் கூடுதல் நேரத்தை அட்டவணையிட முடியுமா? என்றும் வாழலாம் புத்தகத்தை அளிப்பதில் நம்முடைய வெற்றி, திறம்பட்ட வகையில் தற்போதைய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளோடு இப்புத்தகத்தை இணைத்து உபயோகிப்பதில் அதிகம் சார்ந்திருக்கிறது. இந்த விஷயத்தில் முன்னேற்றம் செய்வதற்கு நீங்கள் செய்ய வேண்டிய காரியம் ஏதேனும் உண்டா? குடும்பமாக பயிற்சி நேர பகுதிகளை சிலர் கொண்டிருக்க முடியும். வெளி ஊழியத்திற்கான கூட்டங்களை நடத்துபவர்கள் உதவி செய்வதற்கு என்ன செய்யலாம்? அப்படிப்பட்டவர்கள் “மெய் ஆர்வத்தோடு” தலைமைத்தாங்குமாறு ரோமர் 12:8 ஊக்குவிக்கிறது. உங்கள் பிராந்தியத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் பெரும்பான்மையான மக்கள் ஒருவேளை இந்துக்களாக இருக்கலாம். “என்றும் வாழ்வது ஒரு கனவல்ல” என்ற முதல் அதிகாரத்தை உபயோகிப்பது பற்றியதென்ன? கடவுள் வாக்களித்திருக்கும் சமாதானமான புதிய உலகில் வாழ்வதற்கு அக்கறையை தூண்டுவதற்கு முதல் மூன்று பாராக்கள் பொருத்தமான தகவலை அளிக்கிறது. பக்கங்கள் 8, 9-ல் இருக்கும் படங்கள் பக்கம் 11 அல்லது 12, 13-லிருக்கும் படங்களோடு வேறுபடுத்திக் காட்டப்பட்டிருப்பது கண்களைக் கவரும் மிகச் சிறந்த காட்சியாக அமைகிறது. அவைகளைச் சிறந்த கற்பிக்கும் கருவிகளாக உபயோகிக்கலாம். 110 மொழிகளுக்கும் மேலான மொழிகளில் கிடைக்கக்கூடிய உலகின் மிகச் சிறந்த பைபிள் படிப்பு ஏதுக்களில் ஒன்றை நாம் பெற்றிருப்பதால் ஜனவரி மாதத்தின் போது அதை ஊழியத்தில் வைராக்கியத்தோடு அளிப்போமாக.
பாட்டு 205 (118), முடிவு ஜெபம்.