உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 9/94 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1994
நம் ராஜ்ய ஊழியம்—1994
km 9/94 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் செப்டம்பர்: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகம் 20.00 ரூபாய் நன்கொடைக்கு. (பெரிய அளவு 40.00 ரூபாய்க்கு.) அக்டோபர்: விழித்தெழு! அல்லது காவற்கோபுரம் பத்திரிகைக்கான சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தா 60.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கான சந்தாக்களும் மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கான ஆறு மாத சந்தாக்களும் 30.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தாக்கள் கிடையாது. நவம்பர்: பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் (New World Translation of the Holy Scriptures), அதோடு பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? (The Bible—God’s Word or Man’s?) புத்தகம். ஆங்கிலத்தைத் தவிர மற்ற மொழிகளில், பள்ளி சிற்றேடில்லாமல் வேறு எந்தச் சிற்றேட்டையாகிலும் அல்லது ஏதாவது 192-பக்க புத்தகத்தையாகிலும் அளிக்கலாம். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகம் 40.00 ரூபாய் நன்கொடைக்கு. இந்தப் பிரசுரம் உங்களுடைய கையிருப்பில் இல்லாமல் இருக்குமானால், அல்லது வித்தியாசமான அளிப்புக்கே சூழ்நிலைமை பொருத்தமாக இருக்குமானால், என்னுடைய பைபிள் கதை புத்தகம் அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை நீங்கள் அதே நன்கொடைக்கு பயன்படுத்தலாம் (சிறிய அளவு என்றும் வாழலாம் புத்தகம் 20.00 ரூபாய்).

◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் செப்டம்பர் 1 அல்லது அதற்குப்பிறகு கூடுமானவரை சீக்கிரத்திலேயே சபையின் கணக்குகளைத் தணிக்கை செய்யவேண்டும். இது செய்யப்பட்டதும் சபைக்கு அறிவிப்பு செய்யுங்கள்.

◼ அக்டோபரில் துணைப் பயனியர்களாக சேவிப்பதற்கு திட்டமிடுகிற பிரஸ்தாபிகள் தங்களுடைய விண்ணப்பத்தை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். மூப்பர்கள் பிரசுரங்களுக்காகவும் பிராந்தியத்திற்காகவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு இது அனுமதிக்கும்.

◼ மீண்டும் நிலைநாட்டப்படுவதற்கு மனச்சாய்வுள்ள சபைநீக்கம் செய்யப்பட்ட அல்லது கூட்டுறவை நிறுத்திக்கொண்ட எந்தவொரு நபரின் சம்பந்தமாக, ஏப்ரல் 15, 1991, ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 21-3-ல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றும்படி மூப்பர்கள் நினைப்பூட்டப்படுகிறார்கள்.

◼ இதுமுதற்கொண்டு ‘சபைநீக்கம் செய்யப்பட்டவர்களின் அல்லது கூட்டுறவை நிறுத்திக்கொண்டவர்களின் பதிவு’ என்ற S-79b அட்டையானது, கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட பச்சை நிறத்திற்கு பதிலாக மங்கிய ப்ரெளன் கலரில் இருக்கும். S-79a அட்டை தொடர்ந்து ஆரஞ்சு நிறத்திலேயே இருக்கும். இந்த இரண்டு அட்டைகளையும் பூர்த்திசெய்வதற்கான வழிமுறையில் மாற்றமில்லை.

◼ ஜூன் 1993 நம் ராஜ்ய ஊழியத்தில் குறிப்பிட்டபடி, இந்த வருடத்திலும்கூட கேரளாவில் நடைபெறும் மாநாடுகள் இரண்டிற்கும் செல்ல குறிப்பிட்ட வட்டாரங்களை நாங்கள் நியமிக்கவில்லை. மாறாக, கேரளாவிலுள்ள எல்லா சாட்சிகளும் அக்கறைகாட்டுகிற ஆட்களும் டிசம்பர் 30, 1994 முதல் ஜனவரி 1, 1995 வரை நடைபெறவிருக்கிற கோட்டயம் மாநாட்டிற்கு ஆஜராகும்படி நாங்கள் மீண்டும் உற்சாகப்படுத்துகிறோம். நாடு முழுவதிலுமுள்ள சகோதரர்களும், அவர்கள் விரும்பினால், இந்த மாநாட்டிற்கு ஆஜராகும்படி நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம். இதனால் அவர்களும் இந்தப் பெரிய கூடிவருதலில் பங்குபெறக்கூடும். ஆனால் தங்கும் இடத்திற்காக முன்னதாகவே கோட்டயத்திலுள்ள மாநாட்டு தலையகத்திற்கு எழுதும்படி கேட்டுக்கொள்கிறோம். கேரளாவிலுள்ள இரண்டாவது மாநாடு—ஜனவரி 6-8, 1995-ல் கோழிக்கோட்டில் நடைபெறும் மாநாடு—மிகவும் சிறியதாக இருக்கும், ஏனென்றால் சுகவீனம் அல்லது வீட்டு பொறுப்புகளினிமித்தமாக கோட்டயம் மாநாட்டை தவறவிடுகிறவர்களுக்காக இது திட்டமிடப்பட்டிருக்கிறது.

◼ பெங்காலி மொழிக்காக அதிகமான மொழிபெயர்ப்பாளர்களை நாங்கள் விரும்புகிறோம். முழுநேர மொழிபெயர்ப்பு வேலைக்காக பயிற்றுவிக்கப்பட விருப்பமுள்ள சகோதர சகோதரிகள் பரிட்சைக்கான மொழிபெயர்ப்பு பொருளை (trial translation material) கேட்டு எங்களுக்கு எழுதும்படி அழைக்கப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள், 19 முதல் 35 வயதிற்குட்பட்ட, விவாகமாகாத அல்லது விவாகமாகி குழந்தைகள் இல்லாத, பெத்தேலில் சேவைசெய்வதற்கு தகுதியான, மேலும் பெங்காலியிலும் ஆங்கிலத்திலும் நல்ல அறிவுடையவர்களாய் இருக்கவேண்டும். பயனியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

◼ சங்கம் பிரசுரங்களுக்கான தனிப்பட்ட பிரஸ்தாபிகளின் ஆர்டர்களை அனுப்புவதில்லை. குறிப்பிட்ட பிரசுரத்தை விரும்புகிறவர்கள் புத்தக ஊழியரிடம் தெரிவிக்கலாம். அவர் சபையினுடைய அடுத்த புத்தக ஆர்டரில் உடனடியாக அதை சேர்த்துக்கொள்ளுவார். சங்கத்துக்கு புத்தக ஆர்டரை சபை அனுப்புவதற்கு முன்பாக, ஒவ்வொரு தடவையும் நடத்தும் கண்காணி அறிவிப்புக்காக ஏற்பாடு செய்யவேண்டும். இதனால் தனிப்பட்ட பிரசுரங்களைப் பெறுவதில் அக்கறையுள்ளவர்கள் அனைவரும் புத்தகத்தைக் கவனிக்கிற சகோதரரிடம் தெரிவிக்கலாம்.

◼ நாங்கள் விழித்தெழு! பத்திரிகையை பெங்காலி, ஹிந்தி, மராத்தி மற்றும் நேப்பாளியில் தலைப்பு மற்றும் தேதியுடன் காலாண்டு பத்திரிகையாக இப்பொழுது பிரசுரித்துவருகிறோம். விழித்தெழு! சிற்றேடுகளுக்காக நிரந்தர ஆர்டரை கொண்டுள்ள (standing order) சபைகளுக்கு நாங்கள் இவற்றை அனுப்புவோம். சபைகள் இதுமுதற்கொண்டு பத்திரிகை வினியோகிப்பு ஆர்டர் நமூனாவைப் (M-AB-202) பயன்படுத்தி, இந்தப் பதிப்புகளுக்காக தங்களுடைய எந்தவொரு ஆர்டர் மாற்றங்களை, அல்லது புதிய ஆர்டர்களை அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தக் காலாண்டு விழித்தெழு! பத்திரிகைகள் சந்தாக்கள் மூலம் கிடைக்காது. ஆனால் இந்த மொழிகளில் காவற்கோபுரம், விழித்தெழு!-வின் தனிப் பிரதிகளை, மற்ற மொழிகளில் செய்யும் விதமாகவே, சேர்த்து அளிக்கும்படி நீங்கள் உற்சாகப்படுத்தப்படுகிறீர்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்