உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 9/94 பக். 7
  • பள்ளியில்ஆயத்தமாயிருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பள்ளியில்ஆயத்தமாயிருங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1994
  • இதே தகவல்
  • உங்கள் பிள்ளைகள் பள்ளியில்உறுதியாக நிற்கின்றனரா?
    நம் ராஜ்ய ஊழியம்—1990
  • இளைஞரே—உங்கள் பள்ளி நாட்களை நல்ல விதமாக பயன்படுத்துங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1998
  • விடுதி வசதியுள்ளஒரு பள்ளிக்கு உங்கள் பிள்ளை செல்ல வேண்டுமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • கிறிஸ்தவ இளைஞர்களே விசுவாசத்தில் உறுதியாய் இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1994
km 9/94 பக். 7

பள்ளியில்ஆயத்தமாயிருங்கள்

1 நம்மில் அநேகர் அனுதின வாழ்க்கையில் அடிக்கடி சம்பவிக்கிற நடவடிக்கைகளில் மூழ்கியிருக்கிறபோதிலும், நமது இளைஞர் வித்தியாசமான சூழ்நிலைமைகளைப் பள்ளியில் எதிர்ப்படுகிறார்கள். பள்ளிகளில் அனுபவித்துக்களிக்கத்தக்க நடவடிக்கைகள் இருக்கின்றன, ஆனால் பயத்தை உண்டுபண்ணக்கூடிய சில விஷயங்களும்கூட இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இளைஞர் வித்தியாசமான ஆசிரியர்களிடமும், புதிய பாடங்களை எடுத்துப்படிக்கவும், அந்நியர்களாக இருக்கிற மாணவர்களோடு நெருங்கிய சகவாசம் வைப்பதையும் எதிர்ப்பட வேண்டியவர்களாயிருக்கலாம். நமது இளைஞர் பள்ளி அதிகாரிகளுடன் ஒத்துழைக்கிறவர்களாகவும் சக மாணவர்களுடன் இணங்கிப்போகிறவர்களாகவும் இருக்க விரும்புகிறார்கள். ஆனால் ஆவிக்குரிய விதமாக தீங்குவிளைவிக்கக்கூடிய எந்தவொரு காரியத்திற்கும் எதிராக காத்துக்கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் மனதில் வைத்திருக்க வேண்டும்.—1 கொ. 15:33, NW.

2 சாட்சிகளுடைய பிள்ளைகளுக்காகவும் இளைஞருக்காகவும் அதிகளவு அக்கறை காட்டுவதானது, இன்றுள்ள அநேக தேசங்களில் கல்வித் திட்டங்களை ஊடுருவியிருக்கிற இந்த உலகத்தின் மாசுபடுத்துகிற செல்வாக்கைத் தவிர்ப்பதற்கேயாகும். கிறிஸ்தவ இளைஞரும் முதியோரும் ஒழுக்கநெறி பிரச்சினைகளைக் குறித்ததில் இப்பொழுது ஆதரிக்கப்பட்டு வருகிற உலகியல் சார்ந்த தராதரங்களையும் சிந்தனையையும் விட்டொழிப்பதில் தைரியமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். மேலும் யெகோவாவின் வார்த்தையை கலந்தாராய்வதன் மூலமும் அதால் வழிநடத்தப்படுவதன் மூலமும் அவர்கள் “தொடர்ந்து காத்துக்கொள்ள” வேண்டும். (சங். 119:9, NW) அக்கறையுள்ள பெற்றோர், தங்களுடைய பிள்ளைகளுக்கு தகுதியான வழிநடத்துதலைக் கொடுப்பதற்காகப் பள்ளி பாடத்திட்டத்தில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதைக் குறித்து அறிந்தவர்களாக இருப்பது அவசியம். பள்ளியிலோ மற்ற இடங்களிலோ கற்பிக்கப்படுவது யெகோவாவின் ஊழியர்களுக்குத் தேவைப்படுகிற பரிசுத்தத்துடனும் கற்புடனும் முரண்படுவதாக இருந்தால், அதைக் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.—1 பே. 1:15, 16.

3 தேசிய விழாக்கள், விடுமுறைநாள் கொண்டாட்டங்கள், போட்டி விளையாட்டுகள், அல்லது சமூக கூட்டுறவுகள் ஆகியவற்றை உட்படுத்துகிற விவாதங்களை எதிர்ப்படுவதும்கூட சர்வ சாதாரணமாக இருக்கிறது. இந்த விஷயங்கள் சம்பந்தமாக, பள்ளியும் யெகோவாவின் சாட்சிகளும் (School and Jehovah’s Witnesses) என்ற சிற்றேடு கிறிஸ்தவ இளைஞருக்கு உதவியாய் இருக்கிறது. இந்தப் பிரசுரத்தின் பிரதி ஒன்றைக்கொண்டு ஆசிரியர்களை அணுகுவதில் இளம் பிள்ளைகளுடைய பெற்றோர் முதற்படியெடுக்கையில், அதிக கடினமான பிரச்சினைகள் சமாளிக்கப்படலாம் அல்லது குறைக்கப்படலாம். யெகோவாவின் சாட்சிகள் சில நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாமலிருப்பதை ஏன் தெரிவுசெய்கிறார்கள் என்பதை ஆசிரியர் புரிந்துகொள்ள இது உதவிசெய்யும் என்று அவர்கள் விளக்கலாம். இந்தத் தகவல் ஆசிரியருக்கு கிடைக்கும்படி செய்வது ஒத்துழைக்கும் மனப்பான்மையை உருவாக்குவதில் அதிகத்தைச் செய்யக்கூடும்.

4 அதோடுகூட, கிறிஸ்தவ மாணவர்கள் தங்களுடைய பள்ளிக்கூட புத்தகங்களோடு பள்ளி சிற்றேட்டின் தனிப்பட்ட பிரதி ஒன்றை எப்பொழுதும் கொண்டுசெல்வது நல்லது. நம்முடைய நம்பிக்கைகளின்பேரில் கவனம் செலுத்தப்படுகையில், கேள்விகள் கேட்கிற வேறுசில மாணவர்களுக்கு சாட்சிகொடுப்பதற்கான வாய்ப்புகள் அடிக்கடி எழும்புகின்றன. அதோடு, சாட்சிகளுடைய பிள்ளைகள் எல்லா சமயங்களிலும் தங்களுடைய சொந்த பையில், பூர்த்திசெய்யப்பட்டு, சரியாக சாட்சி கையொப்பமிடப்பட்டு, கையெழுத்திடப்பட்ட தங்களுடைய மருத்துவ முன் கோரிக்கை/விடுப்பு (Advance Medical Directive/Release) அல்லது அடையாள அட்டையை (Identity Card) கொண்டுசெல்ல வேண்டும். இந்த அறிவுரையை பொருத்திப் பிரயோகிப்பவர்கள், நிச்சயமாகவே ‘ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்கிற விவேகியை’ போல இருப்பார்கள்.—நீதி. 22:3.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்