இளைஞரே—உங்கள் பள்ளி நாட்களை நல்ல விதமாக பயன்படுத்துங்கள்
1 லீவு நாட்கள் முடிந்து, ஸ்கூலுக்கு செல்லவேண்டும் என்று நினைத்தபோது உங்களுக்கு எப்படி இருந்தது? இன்னொரு வருடம் ஸ்கூலில் படிப்பது உங்களுக்கு பயன்தானே? ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் சத்தியத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை பள்ளி உங்களுக்கு அளிக்கிறது. அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்வீர்களா? பள்ளியில் சிறப்பாக செயல்படுவீர்கள் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
2 சிறந்த மாணவராக இருங்கள்: பாடங்களை முன்னரே நன்றாக தயாரித்து, கூர்ந்து கவனிப்பீர்களென்றால் நிரந்தர பலனைப் பெறுவீர்கள். உங்கள் ஹோம்வொர்க்குகளை தவறாமல் செய்வதற்கு கவனமாக இருங்கள். ஆனால் பள்ளி வேலைகள் தேவராஜ்ய நடவடிக்கைகளுக்கு இடைஞ்சலாக இருக்க அனுமதிக்காதீர்கள்.—பிலி. 1:10, NW.
3 இந்த வருடம் ஸ்கூல் துவங்கியவுடனேயே யெகோவாவின் சாட்சிகளும் கல்வியும் என்ற சிற்றேட்டைப் படித்துவிடுங்கள். அதன்பின், நீங்களோ, உங்கள் பெற்றோரோ உங்கள் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் அதன் பிரதியை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு என்ன சந்தேகம் இருந்தாலும்சரி நீங்கள் பதிலளிப்பீர்கள் என்பதைத் தெரிவியுங்கள். உங்களுடைய நியமங்களையும் நம்பிக்கைகளையும் அவர்கள் நன்றாக புரிந்துகொள்ள இது உதவும். அதோடு நீங்கள் எவற்றைக் கற்றுக்கொண்டீர்களோ அவற்றை பொருத்தும்போது அவர்களும் உங்களுடன் ஒத்துழைக்கவும் இது உதவும். மதிப்புவாய்ந்த கல்வியை நீங்கள் பெறுவதற்கு ஆசிரியர்கள் உங்களுக்கு உதவுகிறார்கள். அதற்கு, நீங்களும் உங்களுடைய பெற்றோரும் அவர்களுடன் ஒத்துழைக்க விரும்புகிறீர்கள் என்று இது அவர்களுக்கு உறுதியளிக்கும்.
4 சிறந்த சாட்சியாக இருங்கள்: பள்ளியை சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கான உங்களுடைய பிராந்தியமாக ஏன் கருதக்கூடாது? ஸ்கூலில் படிக்கும் இந்த வருடத்தில் சாட்சி கொடுப்பதற்கு உங்களுக்கு ஒப்பற்ற வாய்ப்புகள் இருக்கும். உங்களிடம் அருமையான ஆவிக்குரிய அறிவு இருக்கிறது. அதை நீங்கள் பகிர்ந்து கொண்டால், ‘உங்களையும் உங்கள் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ள’ முடியும். (1 தீ. 4:16) முன்மாதிரியுள்ள கிறிஸ்தவ நடத்தையின் மூலமும் எப்போதெல்லாம் பொருத்தமோ அப்போதெல்லாம் சாட்சி கொடுப்பதன் மூலமும் நீங்களும் மற்றவர்களும் பலன் பெறுவீர்கள்.
5 ஒரு இளம் சகோதரர் தன்னுடன் படித்த மாணவர்களுக்கு சந்தர்ப்ப சாட்சி கொடுத்தார். அநேகர் நல்லவிதமாகக் கேட்டு சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர்; அவர்களில், கடவுள் நம்பிக்கையுள்ளவர்களை கேலி செய்த ஒரு நாத்திகர், ஒரு கத்தோலிக்கர், செயின்-ஸ்மோக்கராகவும் குடிகாரராகவும் இருந்த ஒருவர் ஆகியோர் அடங்குவர். மொத்தத்தில், இந்த இளம் சகோதரர் தன்னுடைய நண்பர்களில் 15 பேர் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறுவதற்கு உதவினார்!
6 எனவே, இளைஞரே, கவனமாக படியுங்கள். உங்களுடைய இணையற்ற பிராந்தியத்தில் சாட்சி கொடுங்கள். அப்போதுதான் பள்ளிக்கு செல்வதால் மிக அதிக நன்மையைப் பெறுவீர்கள்.