செய்வதற்கு எப்போதும் அதிகமுள்ளது
1 யெகோவாவின் ஜனங்கள் சுறுசுறுப்பான ஜனங்கள். நம்முடைய குடும்பம், வேலை, பள்ளி ஆகியவற்றின் சம்பந்தமாக நமக்கு அநேக கடமைகள் இருக்கின்றன. இவையெல்லாவற்றிற்கும் மேலாக, ‘கர்த்தருடைய வேலையில் செய்வதற்கு எப்போதும் அதிகமுள்ளது.’ (1 கொ. 15:58, NW) வாராந்தர சபை கூட்டங்களுக்காகத் தயார்செய்யவும் ஆஜராகவும் வேண்டும். வெளி ஊழியத்தில் சிறிதளவுகூட பங்குகொள்ளாமல் ஒரு வாரத்தையும் கடத்தாதபடிக்கு நாம் உற்சாகப்படுத்தப்படுகிறோம். தனிப்பட்ட மற்றும் குடும்ப பைபிள் படிப்புக்காக போதுமான நேரத்தைத் தவறாமல் ஒதுக்கி வைக்கவேண்டும். மூப்பர்களுக்கும் உதவி ஊழியர்களுக்கும் நிறைய சபை பொறுப்புகள் இருக்கின்றன. சில சமயங்களில் தேவையிலிருக்கிற தகுதிவாய்ந்தவர்களுக்கு உதவிசெய்யும்படி நாம் கேட்டுக்கொள்ளப்படுகிறோம்.
2 நாம் செய்யவேண்டிய எல்லா காரியங்களாலும் திணறடிக்கப்படுவதாக எப்பொழுதாகிலும் நம்மில் சிலர் உணரலாம். என்றாலும், சமநிலையான மற்றும் சரியான நோக்குநிலையைக் காத்துக்கொண்டால், மிக அதிக வேலையாக இருக்கிற மக்கள் மிக அதிக மகிழ்ச்சியாக இருப்பவர்கள் மத்தியில் இருக்கக்கூடும்.—பிர. 3:12, 13.
3 செய்வதற்கு அதிகத்தைக் கொண்டிருந்தவர்களில் அப்போஸ்தலன் பவுலும் ஒருவர். கூடாரம்பண்ணுகிறவராக உலகப்பிரகாரமான வேலைசெய்வதன்மூலம் தன்னுடைய தனிப்பட்ட தேவைகளைக் கவனித்துக்கொண்டபோதிலும், மற்ற அப்போஸ்தலரைவிட இவர் அதிகமாக உழைத்தார். அவர் ஒரு சுவிசேஷகராக வெளியரங்கமாகவும் வீடு வீடாகவும் பிரசங்கித்து சோர்வுறாமல் வேலைசெய்தார்; அதே சமயத்தில், மந்தையின் மேய்ப்பராக தன்னுடைய உத்தரவாதங்களை அசட்டை செய்யவில்லை. (அப். 20:20, 21, 31, 34, 35) பவுல் தன்னுடைய அதிக வேலையின் மத்தியிலும், யெகோவாவின் சேவையில் அதிகத்தைச் செய்வதற்கு எப்போதும் ஆர்வமுள்ளவராக இருந்தார்.—ரோமர் 1:13-15-ஐ ஒப்பிடுங்கள்.
4 பெலத்திற்காக யெகோவாவின்மீது சார்ந்திருப்பதன் மூலம் பவுல் தன்னுடைய சமநிலையையும் மகிழ்ச்சியான இருதயத்தையும் காத்துக்கொண்டார். தன்னுடைய ஊழியம் பலனளிப்பதாகவும் திருப்தியளிப்பதாகவும் இருப்பதை கண்டார். (பிலி. 4:13) தன்னுடைய பிரயாசத்தைக் கடவுள் மறந்துவிடமாட்டார் என்பதை அறிந்திருந்தார். (எபி. 6:10) யெகோவாவைத் தெரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவிசெய்வதினால் வரும் சந்தோஷம் அவருக்குத் தெம்பளித்தது. (1 தெ. 2:19, 20) பைபிள் அடிப்படையிலான தன்னுடைய நம்பிக்கை நிறைவேறுமென்ற நிச்சயம் சுறுசுறுப்புள்ளவராய் தொடர்ந்திருக்கும்படி அவரை உந்துவித்தது.—எபி. 6:11, NW.
5 நம்முடைய உழைப்புகளினால் வருகிற நற்காரியங்களையும் சிந்திக்க வேண்டும். வாராந்தர கூட்டங்களில் நாம் ஆஜராகி பங்கெடுப்பதானது, மற்றவர்களைக் கட்டியெழுப்பவும் உற்சாகப்படுத்தவும் உதவுகிறது. (எபி. 10:24, 25) அக்கறை வளர்க்கப்பட்டு புதியவர்கள் நம்முடன் கூட்டுறவுகொள்கையில், நற்செய்தியைக் கொண்டு அனைவரையும் சென்றெட்ட எடுக்கும் நம்முடைய ஊக்கமான முயற்சிகள் சபையின் முன்னேற்றத்திற்கு உதவுகின்றன. (யோவா. 15:8) தேவையிலிருக்கிற மற்றவர்களுக்கு உதவிசெய்வது நெருக்கமாக பின்னப்பட்ட குடும்பம் போன்ற மனப்பான்மையை சபையில் முன்னேற்றுவிக்கிறது. (யாக். 1:27) மேலுமாக, பவுலைப்போன்று பயனுள்ள வேலைகளில் சுறுசுறுப்பாயிருப்பது யெகோவா தேவனுக்குப் பிரியமாயிருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அவரை சேவிப்பதை மகத்தான சிலாக்கியமாக நாம் கருதுகிறோம். நமக்கு மேம்பட்ட வாழ்க்கைமுறை வேறெதுவும் இல்லை!
6 செய்வதற்கு அதிகத்தைக் கொண்டிருப்பதில் கூடுதலான ஒரு நன்மை இருக்கிறது. வழக்கமாக செய்கிற ஆரோக்கியமான ஆவிக்குரிய வேலையை நாடித்தொடருவதில் நாம் சுறுசுறுப்பாக இருக்கும்போது, காலம் அதிக வேகமாக கடந்துசெல்வதுபோல் தோன்றுகிறது. கடந்துசெல்கிற ஒவ்வொரு நாளும் நம்மை புதிய உலகிற்கு அருகாமையில் கொண்டுசெல்கிறது என்பதை உணர்ந்தவர்களாய், நாம் இப்பொழுது அனுபவித்து மகிழ்கிற இந்த முழுமையான வாழ்க்கையை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்கிறோம். பலனற்ற உலக நாட்டங்களில் ஈடுபடுவதற்கு நமக்குக் குறைந்த நேரமே இருக்கிற காரணத்தால், சுறுசுறுப்பாக இருப்பதன் ஞானத்தையும்கூட நாம் உணர்ந்துகொள்கிறோம்.—எபே. 5:15, 16.
7 நிச்சயமாகவே, கர்த்தருடைய வேலையில் செய்வதற்கு அதிகமுள்ளது. ஆனால் நம்முடைய சேவையை புத்துணர்ச்சியளிப்பதாகவும் பலனளிப்பதாகவும் ஆக்குகிற யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் தொடர்ந்து சார்ந்திருப்போமானால், நாம் மகிழ்ச்சியாக இருக்கமுடியும்.—மத். 11:28-30; 1 யோ. 5:3.