கேள்விப் பெட்டி
◼ சாட்சி கொடுக்கும் வேலையில் நாம் பயன்படுத்தும் கருவிகளுக்கு எத்தகைய கவனத்தைச் செலுத்துவது அவசியம்?
1 பொருத்தமான வேதப்பூர்வ பிரசங்கத்தை மனதில் கொண்டிருக்கிறபோதிலும், நற்செய்தியைப் பிரஸ்தாபிப்பவர் தான் பயன்படுத்துகிற கருவிகளைக் குறித்ததில் தயாரற்றவராக இருக்கக்கூடும். ஊழியத்தின்போது, அவர் தற்போதைய பிரசுரம் இல்லாமல் இருக்கலாம். சாட்சிகொடுக்க கொண்டுசெல்லும் பையில் உள்ள பத்திரிகைகள், சிற்றேடுகள், துண்டுப்பிரதிகள் ஆகியவை மடங்கியிருக்கலாம் அல்லது கிழிந்திருக்கலாம். அவருடைய பை சரியாக ஒழுங்கமைக்கப்படாமலிருப்பதால், ஒரு பேனாவையோ அல்லது வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டையோ கண்டுபிடிக்க முடியாமல் இருக்கலாம். வெளி ஊழியத்தில் பங்குகொள்வதற்கு முன்பாக உங்களுடைய கருவிகளுக்குக் கூர்ந்த கவனம் செலுத்துவது முக்கியமாகும்.
2 நன்கு ஆயத்தப்படுத்தப்பட்ட சாட்சிகொடுக்க கொண்டுசெல்லும் பையில் என்ன பொருட்கள் அடங்கியிருக்க வேண்டும்? ஒரு பைபிள் இன்றியமையாதது. அநேக பிராந்தியங்களில் நீங்கள் பெரும்பாலும் எதிர்ப்பட வேண்டிய இரண்டோ அதற்கு அதிகமான மொழிகளிலோ பைபிளைக் கொண்டுசெல்வது நடைமுறையானதாக இருக்கிறது. வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டுக்களையும் அதில் சேர்த்துக்கொள்ளுங்கள். அந்த மாதத்திற்கு முக்கியப்படுத்திக் காட்டவேண்டிய பிரசுரங்களை நீங்கள் வைத்திருப்பதைக் குறித்து நிச்சயமாயிருங்கள். ஒருவேளை அநேக மொழிகளில் தற்போதைய பத்திரிகை பிரதிகள், அதோடு துண்டுப்பிரதிகள், சிற்றேடுகள் ஆகியவையும்கூட தேவைப்படுகின்றன. நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தின் பிரதி ஒன்றைக் கொண்டுசெல்லுங்கள். தற்போதைய நம் ராஜ்ய ஊழியத்தை வைத்திருப்பது வீட்டண்டையில் செல்வதற்கு முன்பாக கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கங்களை மறுபார்வை செய்ய உங்களுக்கு வாய்ப்பளிக்கும். உங்களுக்குத் தெரியாத ஒரு மொழியைப் பேசுகிற மக்களைச் சந்திக்க நேரிடும் பிராந்தியங்களில் ஊழியம் செய்யும்போது, குட் நியூஸ் ஃபார் ஆல் நேஷன்ஸ் என்ற சிறுபுத்தகத்தை வைத்திருப்பது நல்லது. இளைஞருக்காக தயார்செய்யப்பட்டிருக்கிற நம்முடைய பிரசுரங்களில் ஒரு பிரதியை வைத்திருப்பது பருவ வயதினரிடம் பேசத் தயாராயிருப்பதற்கு உங்களுக்கு உதவிசெய்யும்.
3 பயன்படுத்தப்படுகிற அனைத்தும் உங்களுடைய பையில் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு இருக்கவேண்டும். பைதானே புதியதாக இருக்கவேண்டிய அவசியமில்லை, ஆனால் அது சுத்தமாகவும் நல்ல நிலையிலும் இருக்கவேண்டும். சாட்சிகொடுக்க கொண்டுசெல்லும் உங்களுடைய பை நற்செய்தியை அறிவிப்பதில் பயன்படுத்துவதற்கான உங்களுடைய கருவிகளின் பாகமாயிருக்கிறது. அதை நல்ல நிலையில் வைத்திருங்கள்.