1996-க்குரிய தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை
அறிவுரைகள்
1996-ல் தேவராஜ்ய ஊழியப் பள்ளி நடத்துகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் பின்பற்றப்படும்.
பாடப்புத்தகங்கள்: பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) [bi12], ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல் [uw-TL], “வேதவாக்கியம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது, பயனுள்ளது” (1990-ம் வருட பதிப்பு) (ஆங்கிலம்) [si], நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு [kl-TL], வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் [rs-TL], புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் காணப்படுகிற “கலந்து பேசுவதற்கான பைபிள் பேச்சுப் பொருள்கள்” [*td] ஆகியவை நியமிக்கப்படும் பேச்சுக்களுக்கு அடிப்படையாக இருக்கும்.
பாட்டு, ஜெபம் மற்றும் வரவேற்புக் குறிப்புகளுடன் பள்ளி சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, பின்வருமாறு நடத்தப்படும்:
பேச்சு நியமிப்பு எண் 1: 15 நிமிடங்கள். மூப்பர் அல்லது உதவி ஊழியர் ஒருவரால் இது கையாளப்பட வேண்டும்; ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல் அல்லது “வேதவாக்கியம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது, பயனுள்ளது” என்பதன்பேரில் சார்ந்திருக்கும். இந்தப் பேச்சு நியமிப்பு 10 முதல் 12 நிமிட போதகப் பேச்சாகவும், அதைத் தொடர்ந்து இந்தப் பிரசுரத்திலுள்ள அச்சிடப்பட்ட கேள்விகளைப் பயன்படுத்தி 3 முதல் 5 நிமிட வாய்முறை மறுபார்வையுடனும் செய்யப்பட வேண்டும். இதன் குறிக்கோளானது வெறுமனே விஷயங்களைச் சிந்திப்பதாக இருக்கக்கூடாது, ஆனால் சபைக்கு அதிக பயனுள்ளதாக இருப்பதை சிறப்பித்துக் காண்பித்து, சிந்திக்கப்படும் விஷயங்களின் நடைமுறையான பயனின் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதாக இருக்க வேண்டும். காட்டப்பட்டுள்ள தலைப்புப் பொருள் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த விஷயத்திலிருந்து முழுமையாகப் பயன்பெறுவதற்காக கவனமாக முன்தயாரிப்பு செய்யும்படி எல்லாரும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இந்தப் பேச்சு கொடுக்க நியமிக்கப்பட்டிருக்கும் சகோதரர்கள், கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்க கவனமாயிருக்க வேண்டும். தேவைப்பட்டால் அல்லது பேச்சாளர் முன்னதாகக் கேட்டுக்கொண்டால், தனிப்பட்ட ஆலோசனை கொடுக்கலாம்.
பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள்: 6 நிமிடங்கள். உள்ளூர் தேவைகளுக்கு அந்த விஷயத்தைப் பலன்தரத்தக்க முறையில் பொருத்திக்கூறக்கூடிய மூப்பர் அல்லது உதவி ஊழியரால் கையாளப்பட வேண்டும். இது, நியமிக்கப்பட்ட வாசிப்புப் பகுதியின் வெறும் ஒரு சுருக்கமாக இருக்கக்கூடாது. 30 முதல் 60 விநாடிகளுக்கு, நியமிக்கப்பட்ட அதிகாரங்களின்பேரில் மொத்த மறுபார்வையையும் உட்படுத்திக்கொள்ளலாம். என்றாலும், முக்கிய குறிக்கோளானது, அந்தத் தகவல் ஏன் மற்றும் எவ்வாறு நமக்குப் பயனுள்ளது என்பதைச் சபையார் மதித்துணர உதவி செய்வதேயாகும். பின்பு மாணாக்கர்கள் பல்வேறு வகுப்பறைகளுக்குச் செல்லும்படி பள்ளி கண்காணியால் சொல்லப்படுவர்.
பேச்சு நியமிப்பு எண் 2: 5 நிமிடங்கள். இது ஒரு சகோதரரால் கொடுக்கப்படவேண்டிய நியமிக்கப்பட்ட பகுதியினுடைய பைபிள் வாசிப்பாகும். மன்றத்திலுள்ள பள்ளிக்கும் மற்ற துணைத் தொகுதிகளுக்கும் இது பொருந்தும். மாணாக்கர் முகவுரையிலும் முடிவுரையிலும் சுருக்கமான விளக்கக் குறிப்பைக் கொடுக்க அனுமதிக்கும்வண்ணம் வாசிப்பு நியமிப்புகள் பொதுவாய் ஓரளவு சிறியவையாக இருக்கின்றன. சரித்திரப் பின்னணி, தீர்க்கதரிசன அல்லது கோட்பாட்டுக்குரிய முக்கியத்துவம், நியமங்களின் பொருத்தம் ஆகியவை சேர்க்கப்படலாம். கொடுக்கப்பட்ட எல்லா வசனங்களும் இடைநிறுத்தம் இன்றி வாசிக்கப்பட வேண்டும். நிச்சயமாகவே, வாசிக்கப்படவேண்டிய வசனங்கள் தொடர்ச்சியாக இல்லாத சந்தர்ப்பத்தில் வாசிப்பு தொடரவிருக்கும் வசனத்தை மாணாக்கர் குறிப்பிடலாம்.
பேச்சு நியமிப்பு எண் 3: 5 நிமிடங்கள். இந்தப் பேச்சு ஒரு சகோதரிக்கு நியமிக்கப்படும். இந்தப் பேச்சுக்குரிய பொருள் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் காணப்படுகிற “கலந்து பேசுவதற்கான பைபிள் பேச்சுப் பொருள்கள்” என்பதையோ நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்பதையோ சார்ந்தவையாயிருக்கும். நியமிக்கப்பட்ட மாணாக்கர் வாசிக்கத் தெரிந்தவராய் இருக்கவேண்டும். இந்தத் தகவலை அளிக்கையில், மாணாக்கர் உட்கார்ந்துகொண்டோ நின்றுகொண்டோ இருக்கலாம். இந்தப் பாகத்திற்கு நியமிக்கப்பட்ட சகோதரி தலைப்புப் பொருளையும் சிந்திக்கப்படவிருக்கிற விஷயத்தையும் நடைமுறையான சூழலுக்கு ஏற்ப பொருத்தியமைக்க வேண்டும்; வெளி ஊழியம் அல்லது சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதாக அமைப்பது விரும்பத்தக்கது. உதவியாளர் ஒருவரை பள்ளி கண்காணி நியமிப்பார், ஆனால் கூடுதலான உதவியாளர் ஒருவரைப் பயன்படுத்தலாம். பேச்சு அமைப்புக்கு அல்ல, ஆனால் கொடுக்கப்பட்ட விஷயத்தைத் திறம்பட்ட விதத்தில் பயன்படுத்துவதற்கே முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பேச்சு நியமிப்பு எண் 4: 5 நிமிடங்கள். இது ஒரு சகோதரருக்கு அல்லது சகோதரிக்கு நியமிக்கப்படுகிறது. இது, வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் என்பதைச் சார்ந்திருக்கும். ஒரு சகோதரருக்கு நியமிக்கப்படுகையில், இது முழு சபையாருக்கும் கொடுக்கும் ஒரு பேச்சாக இருக்கவேண்டும். இந்தப் பேச்சு அதை நேரில் கேட்பவர்களுக்கு உண்மையில் அறிவூட்டுவதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்படி, அந்தச் சகோதரர் ராஜ்ய மன்றத்தில் கூடியிருக்கும் சபையாரை மனதிற்கொண்டு தனது பேச்சைத் தயாரிப்பது பொதுவாக மிக நல்லது. ஒரு சகோதரிக்கு இந்தப் பாகம் கொடுக்கப்படுகையில், பேச்சு எண் 3-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்தப் பேச்சைக் கொடுக்கவேண்டும்.
ஆலோசனை மற்றும் குறிப்புகள் கொடுத்தல்: மாணாக்கர் பேச்சு ஒவ்வொன்றுக்கும் பின்னர், பள்ளி கண்காணி குறிப்பான ஆலோசனைகளைக் கொடுப்பார்; பேச்சு ஆலோசனைத் தாளில் (Speech Counsel slip) கொடுக்கப்பட்டுள்ள படிப்படியான ஆலோசனைத் திட்டத்தை கண்டிப்பாக பின்பற்றவேண்டிய அவசியமில்லை. மாறாக, மாணாக்கர் முன்னேறவேண்டிய அம்சங்களுக்கு அவர் கவனஞ்செலுத்த வேண்டும். பேச்சு கொடுக்கும் மாணாக்கர் “G” பெற தகுதியுடையவராய் இருந்து, வேறு எந்தப் பேச்சுப் பண்பிலும் “I” அல்லது “W” என்று குறிப்பிடப்படாவிடில், அப்பொழுது ஆலோசகர் “G,” “I” அல்லது “W” என்று பொதுவாக காணப்படும் பெட்டியில் அடுத்தபடியாக உழைக்க வேண்டிய பேச்சுப் பண்பைக் காட்ட ஒரு வட்டமிட வேண்டும். இதைக் குறித்து அன்று மாலை மாணாக்கருக்கு அவர் சொல்லுவார்; அதோடுகூட அடுத்த தேவராஜ்ய ஊழியப் பள்ளி பேச்சு நியமிப்புத் தாளிலும் (Assignment slip) (S-89) இந்தப் பேச்சுப் பண்பைக் குறிப்பிடுவார். பேச்சு கொடுப்பவர்கள் மன்றத்தின் முன் இருக்கைகளில் உட்காரவேண்டும். இது நேரத்தை சேமிக்கவும் அதே சமயத்தில் பள்ளி கண்காணி ஒவ்வொரு மாணாக்கரையும் நோக்கி நேராக ஆலோசனை கூறவும் உதவியாக இருக்கும். தேவையான நேரடி ஆலோசனை கொடுத்த பின்பு நேரம் அனுமதிக்கிறபடி, மாணாக்கரால் சிந்திக்கப்படாத அறிவூட்டும் நடைமுறையான குறிப்புகளின்பேரில் ஆலோசகர் குறிப்பு சொல்லலாம். பள்ளி கண்காணி ஒவ்வொரு மாணாக்கர் பேச்சுக்குப் பிறகும், ஆலோசனை கூறுவதற்கும் வேறு ஏதாவது சுருக்கமான குறிப்புகள் சொல்வதற்கும் மொத்தம் இரண்டு நிமிடங்களுக்கு மேலாக பயன்படுத்தாதபடி கவனமாயிருக்க வேண்டும். பைபிள் சிறப்புக் குறிப்புகளை எடுத்துரைக்கும் நியமிப்பில் விரும்பப்படும் குறிப்புகள் விடப்பட்டிருந்தால், தனிப்பட்ட ஆலோசனை கொடுக்கப்படலாம்.
பேச்சுக்களைத் தயாரித்தல்: நியமிக்கப்பட்ட பாகத்தைத் தயாரிப்பதற்கு முன்பாக, மாணாக்கர் தான் உழைக்கவேண்டிய பேச்சுப் பண்பை சிந்திக்கிற பள்ளி துணைநூல் (School Guidebook) பிரசுரத்திலுள்ள பகுதியைக் கவனமாக வாசிக்கவேண்டும். இரண்டாம் பேச்சு நியமிக்கப்பட்டுள்ள மாணாக்கர்கள், வாசிக்கவேண்டிய பைபிள் பகுதிக்குப் பொருத்தமான தலைப்புப் பொருள் ஒன்றை தெரிந்துகொள்ளலாம். மற்ற பேச்சுக்கள் அச்சடிக்கப்பட்ட அட்டவணையில் காட்டியுள்ள தலைப்புப் பொருளுக்கு ஏற்ப அமைக்கப்படும்.
நேரம்: எந்தப் பேச்சும் கொடுக்கப்படும் நேரத்தை மீறக்கூடாது, ஆலோசனை கூறுபவரின் ஆலோசனையும் குறிப்புகளுங்கூட நேரத்தை மீறக்கூடாது. பேச்சு எண் 2 முதல் 4 வரையுள்ள பேச்சுக்கள் நேரத்தை மீறுகையில் சாதுரியமாக நிறுத்தப்பட வேண்டும். நிறுத்தும் சமிக்கையை கொடுக்க நியமிக்கப்பட்டவர் அதை உடனடியாகச் செய்யவேண்டும். பேச்சு நியமிப்பு எண் 1-ஐயும் பைபிள் சிறப்புக் குறிப்புகளையும் கையாளும் சகோதரர்கள் நேரத்தை மீறுகையில், அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஆலோசனை கொடுக்கப்படவேண்டும். எல்லாரும் நேரத்தைக் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும். முழு நிகழ்ச்சி நிரல்: பாட்டு, ஜெபம் சேர்க்காமல் 45 நிமிடங்கள்.
எழுத்துமுறை மறுபார்வை: ஒழுங்கான கால இடைவெளிகளில் ஓர் எழுத்துமுறை மறுபார்வை கொடுக்கப்படும். அதைத் தயார்செய்கையில், கொடுக்கப்பட்ட பகுதிகளை மறுபார்வை செய்து, அட்டவணையிலுள்ள பைபிள் வாசிப்பு பகுதியை முடியுங்கள். இந்த 25 நிமிட மறுபார்வையின்போது பைபிள் மட்டுமே பயன்படுத்தப்படலாம். மீந்திருக்கும் நேரம் கேள்விகளையும் பதில்களையும் கலந்தாலோசிப்பதற்குச் செலவிடப்படும். ஒவ்வொரு மாணாக்கரும் அவரவருடைய தாள்களைத் திருத்துவர். பள்ளி கண்காணி இந்த மறுபார்வை கேள்விகளுக்கான பதில்களைச் சபையாரோடு கலந்தாலோசிப்பார்; கடினமான கேள்விகளின்பேரில் கூடுதலான கவனம் செலுத்தி, எல்லாரும் பதில்களைத் தெளிவாக விளங்கிக்கொள்ள உதவி செய்வார். ஏதோ காரணத்தினிமித்தம், சபையின் சூழ்நிலைகள் அவசியப்படுத்தினால், எழுத்துமுறை மறுபார்வையை அட்டவணையில் காட்டப்பட்ட வாரத்திற்கு ஒரு வாரம் பிந்தி நடத்தலாம்.
பெரிய சபைகள்: 50 அல்லது அதற்கு மேற்பட்ட மாணாக்கர்கள் பள்ளியில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டதாயுள்ள சபைகள், அட்டவணையிலுள்ள பேச்சுக்களை மற்ற ஆலோசகர்களுக்கு முன்பாகக் கொடுக்கும்படி கூடுதலான மாணாக்கர்கள் தொகுதிகளை ஏற்பாடுசெய்ய விரும்பலாம். கிறிஸ்தவ நியமங்களுக்கு இசைவாக தங்கள் வாழ்க்கையை நடத்தும் முழுக்காட்டப்படாத ஆட்களும் நிச்சயமாகவே பள்ளியில் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்து பேச்சு நியமிப்புகளைப் பெறலாம்.
வரத்தவறுவோர்: வாராந்தர கூட்டம் ஒவ்வொன்றுக்கும் ஆஜராயிருக்கும்படி முயற்சி செய்வதன்மூலம், தங்கள் பேச்சு நியமிப்புகளை நன்றாய் தயாரிப்பதன்மூலம், கேள்வி நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதன்மூலம் சபையிலுள்ள அனைவரும் இந்தப் பள்ளிக்காக போற்றுதலைக் காண்பிக்கலாம். எல்லா மாணாக்கர்களும் தங்கள் பேச்சு நியமிப்புகளைப் பொறுப்புணர்ச்சியுடன் கருதுவார்களென்று நம்பப்படுகிறது. அட்டவணையில் பேச்சு நியமிக்கப்பட்டுள்ள ஒரு மாணாக்கர் வரவில்லையெனில், அந்தப் பேச்சை வாலண்டியர் ஒருவர் ஏற்று, அத்தகைய குறுகிய நேர அறிவிப்பில் செய்வதற்கு பொருத்தமான குறிப்புகள் என்று அவர் நினைப்பதை தயாரித்து எடுத்துரைக்கலாம். அல்லது பள்ளிக் கண்காணி பொருத்தமாக சபையார் பங்கெடுத்தலோடு அந்த விஷயத்தைச் சிந்திக்கலாம்.
அட்டவணை
*td—புதிய உலக மொழிபெயர்ப்பில் காணப்படுகிற “கலந்து பேசுவதற்கான பைபிள் பேச்சுப் பொருள்கள்”
ஜன. 1 பைபிள் வாசிப்பு: எரேமியா 13 முதல் 15
பாட்டு எண் 213
எண் 1: உண்மையான கிறிஸ்தவ ஒற்றுமையை அடைவது எப்படி (uw-TL பக். 5-7 பாரா. 1-7)
எண் 3: *td 23A கடவுளுடைய ராஜ்யம் மனிதவர்க்கத்துக்கு எதைச் செய்யும்
எண் 4: இயேசு மாம்ச உடலுடன் பரலோகத்துக்குச் செல்லவில்லை (rs-TL பக். 333 பாரா 3–பக். 334 பாரா 3)
ஜன. 8 பைபிள் வாசிப்பு: எரேமியா 16 முதல் 19
பாட்டு எண் 163
எண் 1: கிறிஸ்தவ ஒற்றுமைக்கு அவசியமான காரியங்கள் (uw-TL பக். 8-9 பாரா 8 முதல் 8[3])
எண் 3: *td 23B கிறிஸ்துவின் எதிரிகள் இன்னும் செயலாற்றிக் கொண்டிருக்கும்போதே ராஜ்ய ஆட்சி தொடங்குகிறது
எண் 4: இயேசு ஏன் மாம்சப்பிரகாரமான உடல்களில் தோற்றமளித்தார் (rs-TL பக். 334 பாரா 4–பக். 335 பாரா 3)
ஜன. 15 பைபிள் வாசிப்பு: எரேமியா 20 முதல் 22
பாட்டு எண் 186
எண் 1: கிறிஸ்தவர்களை ஒற்றுமைப்படுத்தும் கூடுதலான காரியங்கள் (uw-TL பக். 9 பாரா. 8[4] முதல் 9)
எண் 3: *td 23C கடவுளுடைய ராஜ்யம் மனிதனின் முயற்சிகளின் மூலமாக வருவதில்லை
எண் 4: கிறிஸ்துவுடன் ஆளுகை செய்யும்படி உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள் அவரைப்போல் இருப்பார்கள் (rs-TL பக். 335 பாரா 5–பக். 336 பாரா 3)
ஜன. 22 பைபிள் வாசிப்பு: எரேமியா 23 முதல் 25
பாட்டு எண் 89
எண் 1: பிரிவினையுண்டாக்கும் செல்வாக்குகளைத் தவிருங்கள் (uw-TL பக். 10-11 பாரா. 10-12)
எண் 3: *td 24A “உலகத்தின் முடிவு” எதை அர்த்தப்படுத்துகிறது
எண் 4: பொதுவில் மனிதவர்க்கத்துக்கு உயிர்த்தெழுதல் எதைக் குறிக்கும் (rs-TL பக். 336 பாரா 4–பக். 337 பாரா 3)
ஜன. 29 பைபிள் வாசிப்பு: எரேமியா 26 முதல் 28
பாட்டு எண் 97
எண் 1: யெகோவா எப்படிப்பட்ட இயல்புள்ளவர் (uw-TL பக். 12-13 பாரா. 1-4)
எண் 3: *td 24B கடைசி நாட்களின் அத்தாட்சிகளைக் குறித்து விழிப்புடன் இருங்கள்
எண் 4: உயர்த்தெழுப்பப்பட்டவர்கள் தங்களுடைய கடந்தகால கிரியைகளுக்காக ஏன் கண்டனம் செய்யப்படமாட்டார்கள் (rs-TL பக். 337 பாரா 5)
பிப். 5 பைபிள் வாசிப்பு: எரேமியா 29 முதல் 31
பாட்டு எண் 35
எண் 1: யெகோவாவுடைய அன்பின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள் (uw-TL பக். 14-15 பாரா. 5-7)
எண் 3: *td 25A கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு கடவுள் நித்திய ஜீவனை வாக்களிக்கிறார்
எண் 4: “மரணமடைந்த மற்றவர்கள்” எப்படி பூமியில் உயிரடைந்தார்கள் (rs-TL பக். 338 பாரா 1–பக். 339 பாரா 2)
பிப். 12 பைபிள் வாசிப்பு: எரேமியா 32 மற்றும் 33
பாட்டு எண் 166
எண் 1: கடவுளைப் பற்றிய சத்தியத்தை மக்களுக்குக் கற்றுக்கொடுங்கள் (uw-TL பக். 15-16 பாரா. 8-11[2])
எண் 3: *td 25B கிறிஸ்துவின் சரீரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பரலோகத்துக்குச் செல்கிறார்கள்
எண் 4: பூமிக்குரிய உயிர்த்தெழுதலில் உட்பட்டிருப்பவர்கள் (rs-TL பக். 339 பாரா 3–பக். 340 பாரா 3)
பிப். 19 பைபிள் வாசிப்பு: எரேமியா 34 முதல் 37
பாட்டு எண் 85
எண் 1: ஒரே ஒரு யெகோவாவே இருக்கிறார் (uw-TL பக். 17-18 பாரா. 11[3] முதல் 12)
எண் 3: *td 25C வரையறுக்கப்படாத ‘திரள் கூட்டத்தினருக்கு’ நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டிருக்கிறது
எண் 4: கிறிஸ்துவின் வந்திருத்தலோடு தொடர்புடைய சம்பவங்கள் பல ஆண்டுகளடங்கிய ஒரு காலப்பகுதியில் நடைபெறுகின்றன (rs-TL பக். 341 பாரா. 1, 2)
பிப். 26 பைபிள் வாசிப்பு: எரேமியா 38 முதல் 41
பாட்டு எண் 117
எண் 1: கடவுளுடைய பெயரில் நடத்தல் எதை அர்த்தப்படுத்துகிறது (uw-TL பக். 18-19 பாரா. 13-15)
எண் 3: *td 26A திருமண இணைப்பு கனம்பொருந்தினதாக இருக்கவேண்டும்
எண் 4: கிறிஸ்துவின் திரும்பிவருதல் காணக்கூடாததாக இருக்கிறது (rs-TL பக். 341 பாரா 3–பக். 342 பாரா 2)
மார்ச் 4 பைபிள் வாசிப்பு: எரேமியா 42 முதல் 45
பாட்டு எண் 44
எண் 1: பைபிளைக் கடவுளுடைய வார்த்தையாக ஏற்கும்படி மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் (uw-TL பக். 20-2 பாரா. 1-6)
எண் 3: *td 26B தலைமைத்துவம் என்ற நியமம் கிறிஸ்தவர்களால் மதிக்கப்படுகிறது
எண் 4: இயேசு திரும்பிவரும் விதம் மற்றும் எப்படி கண்கள் யாவும் அவரைக் காணும் (rs-TL பக். 342 பாரா 4–பக். 343 பாரா 4)
மார்ச் 11 பைபிள் வாசிப்பு: எரேமியா 46 முதல் 48
பாட்டு எண் 46
எண் 1: பைபிளை தினசரி வாசியுங்கள் (uw-TL பக். 23-5 பாரா. 7-11)
எண் 3: *td 26C பிள்ளைகளிடமாக கிறிஸ்தவ பெற்றோரின் கடமை
எண் 4: கிறிஸ்துவின் வந்திருத்தலோடு சம்பந்தப்பட்ட சம்பவங்கள் (rs-TL பக். 344 பாரா. 1-5)
மார்ச் 18 பைபிள் வாசிப்பு: ஏரேமியா 49 மற்றும் 50
பாட்டு எண் 175
எண் 1: யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்வதற்காக படியுங்கள் (uw-TL பக். 25-6 பாரா 12 முதல் 12[1])
எண் 3: *td 26D கிறிஸ்தவர்கள் உடன்கிறிஸ்தவர்களை மட்டுமே விவாகம் செய்யவேண்டும்
எண் 4: கிறிஸ்தவர்கள் ஓய்வுநாளைக் கைக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை (rs-TL பக். 345 பாரா 2–பக். 346 பாரா 3)
மார்ச் 25 பைபிள் வாசிப்பு: எரேமியா 51 மற்றும் 52
பாட்டு எண் 70
எண் 1: எரேமியா—ஏன் பயனுள்ளது (si பக். 129 பாரா. 36-39)
எண் 3: *td 26E கிறிஸ்தவர்கள் பலதார மணம் செய்கிறவர்களாய் இல்லை
எண் 4: ஆதாம் ஓய்வுநாளைக் கைக்கொண்டதாக எவ்வித பைபிள் பதிவும் இல்லை (rs-TL பக். 346 பாரா 4–பக். 347 பாரா 2)
ஏப். 3 பைபிள் வாசிப்பு: புலம்பல் 1 மற்றும் 2
பாட்டு எண் 170
எண் 1: புலம்பலுக்கு முன்னுரை (si பக். 130-1 பாரா. 1-7)
எண் 3: *td 27A மரியாள் “தேவமாதா” அல்ல
எண் 4: மோசேயின் நியாயப்பிரமாணத்தை “சடங்குமுறைக்குரிய” மற்றும் “ஒழுக்கமுறைக்குரிய” பகுதிகளாக இயேசு பிரிக்கவில்லை (rs-TL பக். 347 பாரா 3–பக். 348 பாரா 1)
ஏப். 8 பைபிள் வாசிப்பு: புலம்பல் 3 முதல் 5
பாட்டு எண் 140
எண் 1: புலம்பல்—ஏன் பயனுள்ளது (si பக். 132 பாரா. 13-15)
எண் 3: *td 27B மரியாள் “என்றும் கன்னி” அல்ல என்று பைபிள் காண்பிக்கிறது
எண் 4: பத்துக் கற்பனைகளும் மோசேயின் நியாயப்பிரமாணத்துடன் முடிவடைந்தன (rs பக். 348 பாரா. 2, 3)
ஏப். 15 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 1 முதல் 4
பாட்டு எண் 112
எண் 1: எசேக்கியேலுக்கு முன்னுரை (si பக். 132-3 பாரா. 1-6)
எண் 3: *td 28A நினைவு ஆசரிப்பைக் குறித்து வேதவசனங்கள் என்ன சொல்கின்றன
எண் 4: பத்துக் கற்பனைகள் முடிவடைந்தபோது ஒழுக்கக் கட்டுப்பாடு ஏன் எடுத்துப்போடப்படவில்லை (rs-TL பக். 349 பாரா. 1, 2)
ஏப். 22 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 5 முதல் 8
பாட்டு எண் 180
எண் 1: பைபிளின் மூலப்பொருளையும் வேதவசனங்களின் சூழமைவையும் கவனியுங்கள் (uw-TL பக். 26 பாரா 12[2] மற்றும் 12[3])
எண் 3: *td 28B பூசையை அனுசரிப்பது வேதப்பூர்வ ஆதாரமற்றது
எண் 4: கிறிஸ்தவர்களுக்கு ஓய்வுநாள் எதை அர்த்தப்படுத்துகிறது (rs-TL பக். 349 பாரா 3–பக். 351 பாரா 2)
ஏப். 29 எழுத்துமுறை மறுபார்வை. எரேமியா 13 முதல் எசேக்கியேல் 8 வரை வாசித்து முடிக்கவும்
பாட்டு எண் 113
மே 6 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 9 முதல் 11
பாட்டு எண் 124
எண் 1: நீங்கள் கற்றுக்கொள்பவற்றை தனிப்பட்ட விதத்தில் பொருத்திப் பிரயோகித்து, மற்றவர்களுடன் பகிர்ந்தும் கொள்ளுங்கள் (uw-TL பக். 26-8 பாரா. 12[4] முதல் 13)
எண் 3: நீங்கள் மகிழ்ச்சியான ஒரு எதிர்காலத்தைக் கொண்டிருக்கும்படி கடவுள் விரும்புகிறார் (kl-TL பக். 6-7 பாரா. 1-5)
எண் 4: பரிசுத்தவான்கள் என்று பைபிள் யாரைக் குறிப்பிடுகிறது (rs-TL பக். 352 பாரா 1–பக். 353 பாரா 1)
மே 13 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 12 முதல் 14
பாட்டு எண் 105
எண் 1: தீர்க்கதரிசிகள் இயேசுவைப் பற்றி என்ன சொன்னார்கள் (uw-TL பக். 29-31 பாரா. 1-6)
எண் 3: பரதீஸில் நித்திய ஜீவன்—ஒரு கனவல்ல (kl-TL பக். 7-9 பாரா. 6-10)
எண் 4: நாம் ஏன் ‘பரிசுத்தவான்களை’ நோக்கி ஜெபம் செய்வதில்லை (rs-TL பக். 353 பாரா 2–பக். 354 பாரா 1)
மே 20 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 15 மற்றும் 16
பாட்டு எண் 149
எண் 1: தீர்க்கதரிசன மாதிரிகளுக்குக் கவனம் செலுத்துங்கள் (uw-TL பக். 32-3 பாரா. 7 முதல் 8[2])
எண் 3: பரதீஸில் வாழ்க்கை எப்படி இருக்கும் (kl-TL பக். 9-10 பாரா. 11-16)
எண் 4: ‘பரிசுத்தவான்களின்’ நினைவூட்டுப்பொருட்களையும் சிலைகளையும் வணங்குவது பற்றிய உண்மை (rs-TL பக். 354 பாரா 2–பக். 355 பாரா 2)
மே 27 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 17 முதல் 19
பாட்டு எண் 120
எண் 1: நம்முடைய பிரதான ஆசாரியர் முன்குறித்துக் காட்டப்பட்டிருக்கிறார் (uw-TL பக். 33 பாரா 8[3] மற்றும் 8[4])
எண் 3: தேவனை அறியும் அறிவு ஏன் அத்தியாவசியமானது (kl-TL பக். 10-11 பாரா. 17-19)
எண் 4: உண்மைக் கிறிஸ்தவ பரிசுத்தவான்கள் பாவத்துக்கு விலகினவர்கள் அல்லர் (rs-TL பக். 355 பாரா 3)
ஜூன் 3 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 20 மற்றும் 21
பாட்டு எண் 144
எண் 1: கிறிஸ்துவின் பேரிலுள்ள விசுவாசத்தை நாம் எப்படிக் காட்டலாம் (uw-TL பக். 33-7 பாரா. 9-14)
எண் 3: தேவனை அறியும் அறிவை வெளிப்படுத்தும் அந்தப் புத்தகம் (kl-TL பக். 12-13 பாரா. 1-6)
எண் 4: மனிதகுலம் முழுவதும் இரட்சிக்கப்படுவது பைபிள்பூர்வமானதல்ல (rs-TL பக். 357 பாரா 1)
ஜூன் 10 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 22 மற்றும் 23
பாட்டு எண் 222
எண் 1: கடவுளுக்குக் கீழ்ப்படிதல் உண்மையான சுயாதீனத்தைக் கொண்டுவருகிறது (uw-TL பக். 38-40 பாரா. 1-5)
எண் 3: கடவுளைப் பற்றி பைபிள் எதை வெளிப்படுத்துகிறது (kl-TL பக். 13-15 பாரா. 7-9)
எண் 4: எல்லா மனிதரும் முடிவில் இரட்சிக்கப்படுவார்களா? (rs-TL பக். 357 பாரா 2)
ஜூன் 17 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 24 முதல் 26
பாட்டு எண் 160
எண் 1: இன்று உண்மையான சுயாதீனத்தை எங்கே கண்டடையலாம் (uw-TL பக். 40-1 பாரா 6-9)
எண் 3: நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம் (kl-TL பக். 15-16 பாரா. 10-13)
எண் 4: ‘எல்லா வகையான மனிதரும்’ இரட்சிக்கப்படுவார்கள் (rs-TL பக். 357 பாரா 3)
ஜூன் 24 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 27 முதல் 29
பாட்டு எண் 159
எண் 1: உலகப்பிரகாரமான சுயாதீனம் உண்மையில் அடிமைத்தனமாக இருக்கிறது (uw-TL பக். 42-3 பாரா. 10-12)
எண் 3: பைபிள் திருத்தமானதும் நம்பகமானதுமாக இருக்கிறது (kl-TL பக். 17 பாரா. 14, 15)
எண் 4: சிலர் ஒருபோதும் இரட்சிக்கப்படுவதில்லை என்று பைபிள் சொல்லுகிறது (rs-TL பக். 358 பாரா. 1-3)
ஜூலை 1 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 30 முதல் 32
பாட்டு எண் 132
எண் 1: கெட்ட கூட்டாளிகளை அடையாளங்கண்டுகொள்வது எப்படி (uw-TL பக். 44-5 பாரா. 13, 14)
எண் 3: பைபிள் ஒரு தீர்க்கதரிசன புத்தகம் (kl-TL பக். 17-18 பாரா. 16-18)
எண் 4: ஒருமுறை இரட்சிக்கப்பட்டால் எப்போதும் இரட்சிக்கப்பட்டதாக அர்த்தப்படுத்துவதில்லை (rs-TL பக். 358 பாரா 4–பக். 359 பாரா 1)
ஜூலை 8 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 33 மற்றும் 34
பாட்டு எண் 84
எண் 1: ஒவ்வொருவரும் எதிர்ப்படவேண்டிய பெரிய விவாதம் (uw-TL பக். 46-7 பாரா. 1-3)
எண் 3: இயேசுவைப் பற்றிய பைபிள் தீர்க்கதரிசனங்கள் (kl-TL பக். 19-21 பாரா. 19, 20)
எண் 4: விசுவாசம் ஏன் கிரியைகளுள்ளதாய் இருக்கவேண்டும் (rs-TL பக். 359 பாரா. 2-5)
ஜூலை 15 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 35 முதல் 37
பாட்டு எண் 38
எண் 1: உண்மைதவறாமல் இருந்தவர்களின் விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் (uw-TL பக். 47-52 பாரா. 4-11)
எண் 3: தேவனை அறியும் அறிவுக்காக வாஞ்சையாயிருங்கள் (kl-TL பக். 21-2 பாரா. 21-3)
எண் 4: பிசாசு என்று ஒருவன் உண்மையிலேயே இருப்பது நமக்கு எப்படித் தெரியும் (rs-TL பக். 361 பாரா 3–பக். 362 பாரா 2)
ஜூலை 22 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 38 மற்றும் 39
பாட்டு எண் 26
எண் 1: நம் நடத்தையின்மூலமாக யெகோவாவைக் கனம்பண்ணுதல் (uw-TL பக். 52-4 பாரா 12-15)
எண் 2: எசேக்கியேல் 38:1-4, 10-12, 18-23
எண் 3: உண்மையான கடவுளும் அவருடைய பெயரும் (kl-TL பக். 23-4 பாரா. 1-5)
எண் 4: சாத்தான் ஆட்களுக்குள்ளிருக்கும் வெறும் தீமை அல்ல (rs-TL பக். 362 பாரா 4–பக். 363 பாரா 1)
ஜூலை 29 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 40 முதல் 44
பாட்டு எண் 67
எண் 1: கடவுள் தீமையை அனுமதிப்பது நமக்கு எதை கற்பிக்கிறது (uw-TL பக். 55-7 பாரா. 1-7)
எண் 3: நீங்கள் ஏன் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்த வேண்டும் (kl-TL பக். 24-5 பாரா. 6-8)
எண் 4: பிசாசைக் கடவுள் படைக்கவில்லை (rs-TL பக். 363 பாரா 2)
ஆகஸ்ட் 5 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 45 முதல் 48
பாட்டு எண் 63
எண் 1: எசேக்கியேல்—ஏன் பயனுள்ளது (si பக். 137 பாரா. 29-33)
எண் 3: யெகோவா எப்படி தமக்கு ஒரு பெரிய பெயரை உண்டுபண்ணிக்கொண்டார் (kl-TL பக். 25-7 பாரா. 9-13)
எண் 4: சாத்தான் கலகஞ்செய்தப் பின் கடவுள் ஏன் அவனை உடனடியாக அழிக்கவில்லை (rs_TL பக். 363 பாரா 3–பக். 364 பாரா 1)
ஆகஸ்ட் 12 பைபிள் வாசிப்பு: தானியேல் 1 மற்றும் 2
பாட்டு எண் 102
எண் 1: தானியேலுக்கு முன்னுரை (si பக். 138-9 பாரா. 1-6)
எண் 3: உண்மையான கடவுளின் பண்புகள் (kl-TL பக். 27-8 பாரா. 14-16)
எண் 4: பிசாசின் வல்லமையைக் குறைவாக மதிப்பிட்டுவிடாதீர்கள் (rs-TL பக். 364 பாரா 2–பக். 365 பாரா 2)
ஆகஸ்ட் 19 பைபிள் வாசிப்பு: தானியேல் 3 மற்றும் 4
பாட்டு எண் 41
எண் 1: கடவுளிடம் ஒருபோதும் அநீதி இருந்ததில்லை (uw-TL பக். 58-61 பாரா. 8-16)
எண் 3: யெகோவா தேவன் இரக்கமும் கிருபையும் உள்ளவர் (kl-TL பக். 28-9 பாரா. 17-19)
எண் 4: சாத்தானின் பொல்லாத பாதிப்பிலிருந்து விடுதலை சமீபத்தில் இருக்கிறது (rs-TL பக். 365 பாரா 4–பக். 366 பாரா 3)
ஆகஸ்ட் 26 எழுத்துமுறை மறுபார்வை. எசேக்கியேல் 9 முதல் தானியேல் 4 வரை வாசித்து முடிக்கவும்
பாட்டு எண் 114
செப். 2 பைபிள் வாசிப்பு: தானியேல் 5 மற்றும் 6
பாட்டு எண் 56
எண் 1: பொல்லாத ஆவி சேனைகளை எதிர்த்தல் (uw-TL பக். 62-3 பாரா. 1-5)
எண் 2: தானியேல் 6:4-11, 16, 19-23
எண் 3: யெகோவா கோபிக்க தாமதிக்கிறவராகவும், பாரபட்சமற்றவராகவும், நீதியுள்ளவராகவும் இருக்கிறார் (kl-TL பக். 30 பாரா. 20, 21)
எண் 4: பாலுறவுகள் அனைத்தும் பாவமுள்ளவையா? (rs-TL பக். 367 பாரா 1–பக். 368 பாரா 2)
செப். 9 பைபிள் வாசிப்பு: தானியேல் 7 மற்றும் 8
பாட்டு எண் 138
எண் 1: பிசாசின் மறைமுக சூழ்ச்சிகளைக் குறித்து விழிப்புடன் இருங்கள் (uw-TL பக். 64-7 பாரா. 6-12)
எண் 3: தேவனாகிய யெகோவா ஒருவரே (kl-TL பக். 30-1 பாரா. 22, 23)
எண் 4: ஒத்தப் பாலினத்தவர் புணர்ச்சியைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது (rs-TL பக். 368 பாரா 4–பக். 369 பாரா 1)
செப். 16 பைபிள் வாசிப்பு: தானியேல் 9 மற்றும் 10
பாட்டு எண் 123
எண் 1: தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக்கொள்ளுங்கள் (uw-TL பக். 67-9 பாரா. 13-15)
எண் 3: தேவனை அறியும் அறிவின் திறவுகோலாக இயேசு கிறிஸ்து இருக்கிறார் (kl-TL பக். 32-3 பாரா. 1-3)
எண் 4: கடவுளைப் பிரியப்படுத்துவதற்காகச் செய்யவேண்டிய மாற்றங்கள் (rs-TL பக். 369 பாரா 2–பக். 370 பாரா 1)
செப். 23 பைபிள் வாசிப்பு: தானியேல் 11 மற்றும் 12
பாட்டு எண் 88
எண் 1: தானியேல்—ஏன் பயனுள்ளது (si பக். 141-2 பாரா. 19-23)
எண் 3: வாக்குப்பண்ணப்பட்ட மேசியா (kl-TL பக். 33 பாரா. 4, 5)
எண் 4: பரிபூரண மனிதன் ஒருவனால் ஏன் பாவம்செய்ய முடிந்தது (rs-TL பக். 371 பாரா 1–பக். 372 பாரா 2)
செப். 30 பைபிள் வாசிப்பு: ஓசியா 1 முதல் 5
பாட்டு எண் 50
எண் 1: ஓசியாவுக்கு முன்னுரை (si பக். 143-4 பாரா. 1-8)
எண் 3: இயேசுவின் வம்சாவளி மேசியாவாக அவரை அடையாளங்காட்டுகிறது (kl-TL பக். 34 பாரா 6)
எண் 4: பாவம் என்னவாக இருக்கிறதோ அவ்வாறே அதை நாம் ஏன் உணர்ந்துகொள்கிறோம் (rs-TL பக். 373 பாரா 1–பக். 374 பாரா 2)
அக். 7 பைபிள் வாசிப்பு: ஓசியா 6 முதல் 10
பாட்டு எண் 185
எண் 1: அறிவு, விசுவாசம், மற்றும் உயிர்த்தெழுதல் (uw-TL பக். 70-3 பாரா. 1-7)
எண் 3: நிறைவேறி முடிந்த தீர்க்கதரிசனம் இயேசுவை மேசியாவாக அடையாளங்காட்டுகிறது (kl-TL பக். 34-6 பாரா. 7, 8)
எண் 4: கடவுளுடன் நமக்கிருக்கும் உறவின்மீது பாவத்தின் பாதிப்பு (rs-TL பக். 374 பாரா 3–பக். 375 பாரா 2)
அக். 14 பைபிள் வாசிப்பு: ஓசியா 11 முதல் 14
பாட்டு எண் 146
எண் 1: ஓசியா—ஏன் பயனுள்ளது (si பக். 145 பாரா. 14-17)
எண் 3: இயேசு மேசியா என்பதற்கு மேலுமான நிரூபணம் (kl-TL பக். 36 பாரா 9)
எண் 4: ஆத்துமாவைப் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது (rs-TL பக். 375 பாரா 4–பக். 376 பாரா 4)
அக். 21 பைபிள் வாசிப்பு: யோவேல் 1 முதல் 3
பாட்டு எண் 143
எண் 1: யோவேலுக்கு முன்னுரை மற்றும் ஏன் பயனுள்ளது (si பக். 146-8 பாரா. 1-5, 12-14)
எண் 3: யெகோவா தம்முடைய மகனைக் குறித்து சாட்சி அளிக்கிறார் (kl-TL பக். 38 பாரா. 10, 11)
எண் 4: மிருகங்கள் ஆத்துமாக்கள் என்று பைபிள் சொல்லுகிறது (rs-TL பக். 376 பாரா 5–பக். 377 பாரா 5)
அக். 28 பைபிள் வாசிப்பு: ஆமோஸ் 1 முதல் 5
பாட்டு எண் 151
எண் 1: ஆமோஸுக்கு முன்னுரை (si பக். 148-9 பாரா. 1-6)
எண் 3: மனிதனாவதற்கு முன்பாக இயேசுவின் வாழ்க்கை (kl-TL பக். 39 பாரா. 12-14)
எண் 4: மரணத்தில் ஆத்துமாவோ ஆவியோ உணர்வுள்ள வாழ்க்கையுடன் தொடர்ந்திருப்பதில்லை (rs-TL பக். 377 பாரா 6–பக். 380 பாரா 1)
நவ. 4 பைபிள் வாசிப்பு: ஆமோஸ் 6 முதல் 9
பாட்டு எண் 212
எண் 1: ஆமோஸ்—ஏன் பயனுள்ளது (si பக். 150 பாரா. 13-17)
எண் 3: பூமியில் இயேசுவின் வாழ்க்கை (kl-TL பக். 40-1 பாரா. 15-17)
எண் 4: பரிசுத்த ஆவியை பைபிள் எப்படி விவரிக்கிறது (rs-TL பக். 380 பாரா 3–பக். 381 பாரா 1)
நவ. 11 பைபிள் வாசிப்பு: ஒபதியா முதல் யோனா 4
பாட்டு எண் 215
எண் 1: ஒபதியா, யோனாவுக்கு முன்னுரை மற்றும் ஏன் பயனுள்ளது (si பக். 151-3 பாரா. 1-5, 10-14; பக். 153-5 பாரா. 1-4, 9-12)
எண் 3: இயேசு உயிருள்ளவராக இருக்கிறார், ராஜாவாக ஆட்சிசெய்கிறார் (kl-TL பக். 41-2 பாரா. 18-20)
எண் 4: ஒருவர் பரிசுத்த ஆவியை உடையவர் என்பதற்கு அத்தாட்சி (rs-TL பக். 381 பாரா 3–பக். 382 பாரா 2)
நவ. 18 பைபிள் வாசிப்பு: மீகா 1 முதல் 4
பாட்டு எண் 139
எண் 1: மீகாவுக்கு முன்னுரை (si பக். 155-6 பாரா. 1-8)
எண் 3: கடவுள் ஏற்றுக்கொள்கிற வணக்கம் (kl-TL பக். 43-5 பாரா. 1-5)
எண் 4: உடலின் மரணத்தைத் தப்பிப்பிழைக்கிற ஆவி பாகம் எதுவும் மனிதனுக்கு இல்லை (rs-TL பக். 382 பாரா 6–பக். 383 பாரா 3)
நவ. 25 பைபிள் வாசிப்பு: மீகா 5 முதல் 7
பாட்டு எண் 162
எண் 1: மீகா—ஏன் பயனுள்ளது (si பக். 157-8 பாரா. 16-19)
எண் 3: கடவுளுடைய சித்தத்தைச் செய்தல் (kl-TL பக். 46-7 பாரா. 6-10)
எண் 4: மரித்த ஆளின் “ஆவி”யுடன் பேச்சுத்தொடர்பு எதுவும் இல்லை (rs-TL பக். 384 பாரா 3–பக். 385 பாரா 4)
டிச. 2 பைபிள் வாசிப்பு: நாகூம் 1 முதல் 3
பாட்டு எண் 168
எண் 1: நாகூமுக்கு முன்னுரை மற்றும் ஏன் பயனுள்ளது (si பக். 158-60 பாரா. 1-7, 11, 12)
எண் 3: கடவுளை அவருக்கு உகந்த வழியில் வணங்குங்கள் (kl-TL பக். 48 பாரா. 11-13)
எண் 4: உண்மை கிறிஸ்தவர்கள் ஏன் எல்லா ஆவியுலகத்தொடர்பு பழக்கவழக்கங்களையும் வெறுத்து ஒதுக்குகிறார்கள் (rs-TL பக். 385 பாரா 5)
டிச. 9 பைபிள் வாசிப்பு: ஆபகூக் 1 முதல் 3
பாட்டு எண் 47
எண் 1: ஆபகூக்குக்கு முன்னுரை மற்றும் ஏன் பயனுள்ளது (si பக். 161-3 பாரா. 1-5, 12-14)
எண் 3: கடவுளைக் கோபப்படுத்துவதற்கு எதிராக எச்சரிக்கையாயிருங்கள் (kl-TL பக். 49-50 பாரா. 14-17)
எண் 4: ஆவியுலகத்தொடர்பு பழக்கவழக்கங்களைத் தவிருங்கள் (rs-TL பக். 386 பாரா 1–பக். 387 பாரா 4)
டிச. 16 பைபிள் வாசிப்பு: செப்பனியா 1 முதல் 3
பாட்டு எண் 172
எண் 1: செப்பனியாவுக்கு முன்னுரை மற்றும் ஏன் பயனுள்ளது (si பக். 163-6 பாரா 1-6, 10-12)
எண் 3: கடவுளுடைய உயர்ந்த தராதரங்களைக் காத்துக்கொள்ளுங்கள் (kl-TL பக். 50-1 பாரா. 18, 19)
எண் 4: பேய்த்தன சக்திகளைக் குறித்து அறியும் ஆவலுள்ளவர்களாய் இராதேயுங்கள் (rs-TL பக். 387 பாரா 5–பக். 388 பாரா 3)
டிச. 23 பைபிள் வாசிப்பு: ஆகாய் 1 மற்றும் 2
பாட்டு எண் 152
எண் 1: ஆகாய்க்கு முன்னுரை மற்றும் ஏன் பயனுள்ளது (si பக். 166-8 பாரா 1-7, 13-16)
எண் 3: யெகோவாவுக்கு முழு ஆத்துமாவோடுகூடிய வணக்கத்தைச் செலுத்துங்கள் (kl-TL பக். 51-2 பாரா. 20-2)
எண் 4: ஆவியுலகப் பாதிப்பிலிருந்து விடுபட்டுவருவது எப்படி (rs-TL பக். 388 பாரா 4–பக். 389 பாரா 4)
டிச. 30 எழுத்துமுறை மறுபார்வை. தானியேல் 5 முதல் ஆகாய் 2 வரை வாசித்து முடிக்கவும்
பாட்டு எண் 34