அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள்
பிப்ரவரி: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை நன்கொடை ரூ. 25.00-க்கு (பெரிய அளவு ரூ. 45.00). மாற்றுவகையாக, உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் என்ற புத்தகத்தை நன்கொடை ரூ. 15.00-க்கு அளிக்கலாம். இப்புத்தகத்தின் தெலுங்குப் பதிப்பை விசேஷ அளிப்பின் விலையான ரூ. 8.00-க்கு அளிக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தை நன்கொடை ரூ. 15.00-க்கு அளிக்கலாம். இது சபையில் இல்லையென்றால், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை நன்கொடை ரூ. 25.00-க்கு (பெரிய அளவு ரூ. 45.00) அளிக்கலாம்.
ஏப்ரல் மற்றும் மே: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சந்தாக்கள். மாதம் இருமுறைவரும் பதிப்புகளின் ஆண்டு சந்தா ரூ. 90.00-ஆக இருக்கும். மாதம் ஒருமுறைவரும் பதிப்புகளின் ஆண்டு சந்தாக்களும், மாதம் இருமுறைவரும் பதிப்புகளுக்கான ஆறு மாத சந்தாக்களும் ரூ. 45.00-ஆக இருக்கும். மாதாந்தரப் பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தா கிடையாது. ஒருவேளை சந்தா மறுக்கப்பட்டால், பத்திரிகைகளின் தனி பிரதிகள் ரூ. 4.00-க்கு அளிக்கப்படவேண்டும். எங்குப் பொருத்தமாக இருக்குமோ அங்கு குடும்ப வாழ்க்கை புத்தகத்தையும் அளிக்கலாம்.
குறிப்பு: அச்சிடும் தாளின் விலை ஏற்றத்தின் காரணமாகக் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் விலையிலும் சந்தாவிலும் விலை ஏற்றம் இருக்கும், இது மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரும். புதிய விலை:
தனி பிரதிகள்: பயனியர்களுக்கு: ரூ. 2.50; பிரஸ்தாபிகளுக்கும் பொதுமக்களுக்கும்: ரூ. 4.00.
மாதம் இருமுறை வரும் பதிப்புகளின் ஆண்டு சந்தா: பயனியர்களுக்கு: ரூ. 60.00; பிரஸ்தாபிகளுக்கும் பொதுமக்களுக்கும்: ரூ. 90.00.
மாதம் ஒருமுறைவரும் பதிப்புகளின் ஆண்டு சந்தாக்களும், மாதம் இருமுறைவரும் பதிப்புகளுக்கான ஆறு மாத சந்தாக்களும்: பயனியர்களுக்கு: ரூ. 30.00; பிரஸ்தாபிகளுக்கும் பொதுமக்களுக்கும்: ரூ. 45.00.
◼ சபையின் செயலாளரும் ஊழியக் கண்காணியும் அனைத்து ஒழுங்கான பயனியர்களின் ஊழிய நடவடிக்கையை மறுபார்வை செய்யவேண்டும். தேவைப்படும் மணிநேரங்களை அடைவதில் எவருக்காவது ஒருவேளை சிரமம் இருக்குமானால், உதவி அளிப்பதற்கான ஏற்பாட்டை மூப்பர்கள் செய்யவேண்டும். அக்டோபர் 1986, நம் ராஜ்ய ஊழியம் உட்சேர்க்கையில் பாராக்கள் 12-20-ல் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை மறுபார்வை செய்யவும்.
◼ 1996, ஏப்ரல் 2, செவ்வாய்க்கிழமை அன்று நினைவு ஆசரிப்பு நடைபெறும். பேச்சு முன்பே ஆரம்பிக்கப்பட்டாலும், நினைவு ஆசரிப்பு அப்பத்தையும் திராட்சரசத்தையும் கடத்துவதை சூரிய அஸ்தமனத்திற்கு முன் துவங்கவே கூடாது. உங்களுடைய இடத்தில் எப்போது சூரியன் அஸ்தமனமாகிறது என்பதை உள்ளூர் மூலங்களிலிருந்து கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அந்தத் தேதியில் வெளி ஊழிய கூட்டத்தை தவிர வேறெந்தக் கூட்டத்தையும் நடத்தக்கூடாது. ஒருவேளை உங்களுடைய சபை வழக்கமாகச் செவ்வாய்க்கிழமையில் கூட்டத்தைக் கொண்டிருக்குமானால், ராஜ்ய மன்றம் கிடைத்தால் அந்த வாரத்தின் வேறொரு நாளில் அதை வைத்துக்கொள்ள நீங்கள் ஒருவேளை விரும்பக்கூடும்.
◼ மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் துணைப் பயனியர்களாகச் சேவிக்க விரும்பும் பிரஸ்தாபிகள், இப்போதே திட்டங்களைத் தீட்டிக்கொண்டு, தங்களுடைய விண்ணப்பங்களை முன்னதாகவே கொடுக்கவேண்டும். இது, மூப்பர்களுக்கு வெளி ஊழிய ஏற்பாடுகளைச் செய்வதற்கும், போதுமான பத்திரிகைகளையும் மற்ற பிரசுரங்களையும் கையிருப்பில் வைப்பதற்கும் உதவும்.
◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
யெகோவாவின் சாட்சிகளும் கல்வியும் —ஆங்கிலம்
“சந்தோஷமாய் துதிப்போர்” மாவட்ட மாநாட்டில் வெளியிடப்பட்ட இந்தப் புதிய சிற்றேடு பயனியர்களுக்கு ரூ. 3.00, பிரஸ்தாபிகளுக்கும் பொதுமக்களுக்கும் ரூ. 5.00. இது ஆங்கில பிரேய்லிலும் ஒரே தொகுதியாகக் கிடைக்கிறது.
நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு —ஆங்கிலம், கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, நேப்பாளி, பெங்காலி, மராத்தி, மலையாளம், ஹிந்தி
“சந்தோஷமாய் துதிப்போர்” மாவட்ட மாநாட்டில் வெளியிடப்பட்ட இந்தப் புதிய புத்தகம் பயனியர்களுக்கு ரூ. 8.00, பிரஸ்தாபிகளுக்கும் பொதுமக்களுக்கும் ரூ. 15.00. இது ஆங்கில பிரேய்லிலும் இரு தொகுதிகளாகக் கிடைக்கிறது.
தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல் —தமிழ்
யெகோவாவின் சாட்சிகள் நம்புவதென்ன? துண்டுப் பிரதி எண் 14 —உருது
சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை, துண்டுப் பிரதி எண் 15 —உருது
மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? துண்டுப்பிரதி எண் 16 —உருது
வாழ்க்கையின் நோக்கமென்ன—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? —நேப்பாளி
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
“இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” —ஆங்கிலம், கன்னடம், தமிழ், நேப்பாளி, மலையாளம், ஹிந்தி
நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் (சிறியளவு) —தமிழ்
பெரிய போதகருக்குச் செவிக்கொடுத்தல் —தமிழ், மலையாளம்
◼ கிடைக்கக்கூடிய புதிய வீடியோ கேஸட்கள்:
பைபிள்—மெய்ந்நிகழ்வின் மற்றும் தீர்க்கதரிசனத்தின் ஒரு புத்தகம் தொகுதி I: பைபிள்—திருத்தமான வரலாறு, நம்பகமான தீர்க்கதரிசனம் —ஆங்கிலம்
பைபிள்—மெய்ந்நிகழ்வின் மற்றும் தீர்க்கதரிசனத்தின் ஒரு புத்தகம் தொகுதி II: பைபிள்—மனிதவர்க்கத்தின் மிகப் பழமையான நவீன புத்தகம் —ஆங்கிலம்
தெய்வீக போதனையால் ஒன்றுபட்டிருத்தல் —ஆங்கிலம்
வழக்கமாகப் பிரசுரங்களைத் தருவிக்கும் விண்ணப்ப நமூனாவில் (S-AB-14) இந்த வீடியோ கேஸட்களைத் தருவித்துக்கொள்ளலாம். ஒவ்வொன்றின் நன்கொடை, பயனியர்களுக்கு ரூ. 150.00, பிரஸ்தாபிகளுக்கும் பொதுமக்களுக்கும் ரூ. 200.00.