அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள்
மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகம், 15.00 ரூபாய் நன்கொடைக்கு. இது இன்னும் சபையிலே கிடைக்காவிட்டால் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகம், 25.00 ரூபாய் நன்கொடைக்கு (பெரிய அளவு 45.00 ரூபாய்).
ஏப்ரல், மே: காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகைக்கான சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தா 90.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கான ஒரு வருட சந்தாக்களும், மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கான ஆறு மாத சந்தாக்களும் 45.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தா இல்லை. சந்தா மறுக்கப்பட்டால், பத்திரிகைகளின் தனிப்பிரதிகள் ஒவ்வொன்றும் 4.00 ரூபாய்க்கு அளிக்கப்பட வேண்டும், அல்லது குடும்ப வாழ்க்கை புத்தகத்தை பொருத்தமான சூழ்நிலையில் அளிக்கலாம்.
ஜூன்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகம், 15.00 ரூபாய் என்ற நன்கொடைக்கு. மாற்றளிப்பாக, நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை 25.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம் (பெரிய அளவு 45.00 ரூபாய்). குடும்ப வாழ்க்கை புத்தகம் பொருத்தமான சூழ்நிலைகளில் அளிக்கப்படலாம், அல்லது மேலே சொல்லப்பட்டிருக்கும் புத்தகங்களில் ஏதோவொன்றுடன் சேர்த்து அளிக்கப்படலாம்.
◼ நம் ராஜ்ய ஊழியம், ஜனவரி 1996 பிரதியில் அறிவிக்கப்பட்டவிதமாக, இந்த வருட நினைவு ஆசரிப்புக் காலத்திற்கான விசேஷ பொதுப் பேச்சு, பெரும்பாலான சபைகளில் ஏப்ரல் 21-ம் தேதியன்று கொடுக்கப்படும். “கோணலான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களாயிருத்தல்” என்று இந்தப் பேச்சு தலைப்பிடப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 2-ம் தேதியில் நினைவு ஆசரிப்பிற்கு வரும் அனைவரையும் இதற்கும் அழைக்க விசேஷ முயற்சி எடுக்கப்பட வேண்டும்.
◼ ஏப்ரல் 29, 1996 முதற்கொண்டு, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகம் சபை புத்தகப் படிப்பிலே சிந்திக்கப்படும். இதை மனதில் கொண்டு, உள்ளூர் மொழிகளில் இந்தப் புத்தகத்தின் போதுமான பிரதிகளை சபைகள் கையிருப்பில் கொண்டிருக்க வேண்டும்.
◼ மார்ச் 1, 1996 முதற்கொண்டு அமலுக்கு வந்திருக்கும், சில ஆங்கிலப் பிரசுரங்களின் மாற்றப்பட்டிருக்கும் விலையை தயவுசெய்து கவனியுங்கள்:
பயனியர் சபை & பொது மக்கள்
டீலக்ஸ் பைபிள் எண் 12 (துணைக்குறிப்புகளுடன்) ரூ. 150.00 ரூ. 230.00
டீலக்ஸ் பைபிள் பாக்கெட் அளவு ரூ. 150.00 ரூ. 230.00
வேதாகமத்தின்பேரில் உட்பார்வை ரூ. 400.00 ரூ. 470.00
சொற்தொகுதி பட்டியல் ரூ. 75.00 ரூ. 100.00