மார்ச் ஊழியக் கூட்டங்கள்
மார்ச் 4-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பத்திரிகைகளுக்கும் சந்தாக்களுக்கும் புதிய விலைகள் மார்ச் 1 முதற்கொண்டு அமலுக்கு வந்திருப்பதை சபையாருக்கு நினைவுபடுத்துங்கள்.
15 நிமி: புதிய அறிவு புத்தகத்தை பயன்படுத்த தயார் செய்யுங்கள். நம் ராஜ்ய ஊழியத்தின் இந்தப் பிரதியில் முதல் பக்கத்தின் மேற்புறத்தில் காணப்படும் கட்டுரையின் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. ஊழியத்தில் சிறந்த விதத்தில் பயன்படுத்த அந்தப் புத்தகத்தின் பொருளடக்கத்தைக் குறித்து முழுமையாகவே நன்கறிந்திருக்க அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “மெய்யான கடவுளைப் பற்றிய அறிவு ஜீவனுக்கு வழிநடத்துகிறது.” கொடுக்கப்பட்டிருக்கும் பிரசங்கங்களை மறுபார்வை செய்யுங்கள். ஓரிரண்டு சுருக்கமான நடிப்புகளை ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 78, முடிவு ஜெபம்.
மார்ச் 11-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
20 நிமி: “1996-க்குரிய தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து நன்மையடைவீர்—பகுதி 3.” பள்ளிக் கண்காணியினால் கொடுக்கப்படும் பேச்சு. தங்கள் பெயர்களை பதிவுசெய்து நியமிப்புகளை உண்மையோடு நிறைவேற்ற எவருக்கெல்லாம் முடியுமோ அவர்களெல்லாரையும் அவ்வாறு செய்ய உற்சாகப்படுத்துங்கள். “வேதவாக்கியம் முழுவதும்” புத்தகத்தில் பக்கங்கள் 325-6, பத்திகள் 27-8-ல் காணப்படுவதுபோல், பைபிள் பெயர்களை உச்சரிப்பதற்கான விதிமுறைகளை தெளிவாக விளக்குங்கள். ஆங்கில மொழியில், பெயர்களில் “ch” என்ற எழுத்துக்கள் சேர்ந்து வரும்போது அது “k” என்ற எழுத்தைப்போன்று அழுத்தமாக உச்சரிக்க வேண்டும் என்பதையும் விளக்குங்கள். (Rachel என்ற பெயர் ஒரு விதிவிலக்கு. இங்கே “ch” மெல்லிய குரலில் உச்சரிக்கப்படுகிறது.) சங்கத்தின் ஆடியோகேஸட்டிலிருந்து லூக்கா 3:23-38-ன் ஒரு பாகத்தை ஒலிக்கசெய்து சபையார் தங்களுடைய பைபிளில் அதைப் பின்பற்றும்படி செய்வதன்மூலமாக விதிமுறைகளை உதாரணத்துடன் விளக்குங்கள்.
15 நிமி: காரியங்களை குடும்பமாக ஒன்றுசேர்ந்து செய்யுங்கள். ஒன்றாயிருப்பதன் அவசியத்தைக் குறித்து இயல்பான விதத்தில் தன் குடும்பத்துடன் தந்தை பேசுகிறார்; அது செப்டம்பர் 1, 1993, காவற்கோபுரம், பக்கங்கள் 16-19-ன் அடிப்படையில் அமைந்தது. குடும்பப் படிப்புக்கும் பிரசங்க வேலைக்கும் கவனம் செலுத்துங்கள். நவீனநாளைய குடும்பங்கள் சிறிது நேரமே ஒன்றாயிருப்பதன் காரணமாகவும் எந்தப் பொதுவான அக்கறைகளையும் கொண்டிராததன் காரணமாகவும் எவ்வாறு ஒற்றுமையை இழந்து சிதைந்துபோகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுங்கள். ஒன்றாக சேர்ந்து கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதும் ஊழியத்தில் பங்குகொள்வதும் கிறிஸ்தவ குடும்பத்திற்கு ஒரு ஆசீர்வாதமாகும். இந்தக் காரியங்களை தந்தை நன்றாக ஒழுங்குபடுத்துவதற்கும், தாய் அதற்கு ஒத்துழைப்பைத் தருவதற்கும் இருக்கும் தேவையை வலியுறுத்துங்கள். பிள்ளைகள் ஆவிக்குரிய நடவடிக்கைகளில் அக்கறை எடுத்து, பெற்றோர்களுடன் நெருக்கமாக சேர்ந்து செயல்பட வேண்டும். குடும்பம் ஐக்கியப்படுத்தப்படும், மேலும் உலகப்பிரகாரமாக ஆவதற்கான அதிகரித்துவரும் அழுத்தங்களை சமாளிக்க அது பலப்படுத்தப்படும்.
பாட்டு 211, முடிவு ஜெபம்.
மார்ச் 18-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பைபிள் படிப்பில் நன்றாக முன்னேறும் புதிதானவர்களை, முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக ஆவதற்கான இலக்கை நாடும்படியாக, படிப்பை நடத்துபவர்கள் உற்சாகப்படுத்த வேண்டும். பெற்றோர்களும்கூட தங்கள் பிள்ளைகள் பிரஸ்தாபிகளாக ஆவதற்கு உதவலாம். நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் பக்கங்கள் 97-100-ல் கொடுக்கப்பட்டிருக்கும் சிபாரிசு செய்யப்படும் செயல்முறையை மறுபார்வை செய்யுங்கள். சபையிலுள்ள எல்லா முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகளையும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் துணைப் பயனியர் ஊழியம் செய்யும்படி உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: யெகோவாவின் சாட்சிகளுடைய 1996 வருடாந்தர புத்தகத்தின் (ஆங்கிலம்) சிறப்புக் குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள். பக்கங்கள் 3-5 மற்றும் 33-ல் உள்ள நம்முடைய உலகளாவிய நடவடிக்கையைக் குறித்த ஆர்வமூட்டும் அம்சங்கள் சிலவற்றை குடும்பத் தொகுதி ஒன்று கலந்தாலோசிக்கிறது. தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் புத்தகத்தில் குறிக்கப்பட்டிருக்கும் பைபிள் வசனத்தை சிந்தித்த பிறகு வருடாந்தர புத்தகத்திலிருந்து சில பக்கங்களை ஒன்றாக சேர்ந்து தினந்தோறும் வாசிக்க முயற்சி செய்யப்போவதாக அவர்கள் சம்மதம் தெரிவிக்கிறார்கள்.
20 நிமி: “ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவை அடையும்படி மற்றவர்களுக்கு உதவிசெய்யுங்கள்.” மறுசந்திப்புகளின்போது பயன்படுத்துவதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பிரசங்கங்களை மறுபார்வை செய்யுங்கள். ஒன்று அல்லது இரண்டு நடிப்புகளை சேர்த்துக்கொள்ளுங்கள். பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கான இலக்கை வலியுறுத்துங்கள்.
பாட்டு 130, முடிவு ஜெபம்.
மார்ச் 25-ல் துவங்கும் வாரம்
15 நிமி: சபை அறிவிப்புகள். “நினைவு ஆசரிப்பு நினைப்பூட்டுதல்கள்” பகுதியை மறுபார்வை செய்யுங்கள். ஆஜராயிருக்க வேண்டியது ஏன் அவசியம் என்பதை விளக்குங்கள். (பிப்ரவரி 15, 1985, ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 18-20-ஐக் காண்க.) முதிர்வயதுள்ளவர்களும், உடல்பலவீனமுள்ளவர்களும், புதிதானவர்களும் ஆஜராயிருக்க அவர்களுக்கு உதவிசெய்வதற்கான ஏற்பாடுகளை மறுபார்வை செய்யுங்கள். வரப்போகும் இந்த வாரத்தில் விரிவான வெளி ஊழிய நடவடிக்கைக்கான ஏற்பாடுகளைக் குறித்து கலந்தாலோசியுங்கள். கூடுதலாக, செப்டம்பர் 22, 1995, விழித்தெழு! பிரதியில் பக்கம் 32-ல் உள்ள “அந்நியரை உபசரிக்கும் இடம்,” என்ற கட்டுரையை மறுபார்வை செய்யுங்கள்.
15 நிமி: “புதிய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிநிரல்.” சபையாரோடு கலந்துரையாடல். அடுத்த மாநாடு நடைபெறும் தேதி தெரிந்திருந்தால் அதை அறிவியுங்கள். எல்லாரும் ஆஜராகும்படி உற்சாகப்படுத்துங்கள். முழுக்காட்டுதலுக்கு தகுதி பெறுவதை நோக்கி உழைக்கும்படி புதியவர்களை உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “தயாரிப்பு—வெற்றிக்குத் திறவுகோல்.” கேள்விகளும் பதில்களும். ஏப்ரல், மே மாதங்களில் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சந்தாக்கள் அளிப்போம் என்பதைக் குறிப்பிடுங்கள். அதிகப்படியான பிரதிகளை ஆர்டர் செய்வதன் மூலமாகவும், சந்தா தாள்களை பெற்றுக்கொள்வதன் மூலமாகவும், பத்திரிகை ஊழிய தின நடவடிக்கைக்கு சபை செய்திருக்கும் ஏற்பாடுகளை ஆதரிக்க திட்டமிடுவதன் மூலமாகவும் இப்போதே தயாரிப்புகளை செய்யுங்கள்.
பாட்டு 7, முடிவு ஜெபம்.