அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள்
செப்டம்பர்: உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் புத்தகத்தை 20.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். மாற்றீடான அளிப்பாக, நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் அல்லது உயிர்—அது எப்படி இங்கு வந்தது? படைப்பினாலா பரிணாமத்தினாலா? என்ற புத்தகத்தை 25.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம் (பெரிய அளவு புத்தகம் 45.00 ரூபாய்). பஞ்சாபி மொழியில் படிக்க விரும்பும் நபர்களுக்கு, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தை 20.00 ரூபாய் நன்கொடைக்கு கொடுக்கலாம்.
அக்டோபர்: காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகைக்கான சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் பத்திரிகைகளுக்கு ஆண்டு சந்தா 90.00 ரூபாய். மாதம் ஒருமுறை வரும் பத்திரிகைகளுக்கான ஆண்டு சந்தாவும், மாதம் இருமுறை வரும் பத்திரிகைகளுக்கான ஆறுமாத சந்தாவும் 45.00 ரூபாய். மாதம் ஒருமுறை வரும் பத்திரிகைகளுக்கு ஆறுமாத சந்தா கிடையாது. ஒருவேளை சந்தா மறுக்கப்பட்டால், பத்திரிகைகளின் தனிப்பிரதிகள் ஒவ்வொன்றும் 4.00 ரூபாய்க்கு அளிக்கப்பட வேண்டும்.
நவம்பர்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகம், நன்கொடை 20.00 ரூபாய். அளிப்பைப் பெற்றுக்கொண்ட அனைவரையும் வீட்டு பைபிள் படிப்புகள் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு சந்திக்க விசேஷ முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
டிசம்பர்: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகம் ரூபாய் 25.00 (பெரிய அளவு ரூபாய் 45.00) நன்கொடைக்கு கொடுக்கலாம். இதற்குப் பதிலாக, பொருத்தமாக இருக்கிற சமயங்களில், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தையோ என்னுடைய பைபிள் கதை புத்தகத்தையோ ரூபாய் 45.00 நன்கொடைக்கு கொடுக்கலாம். பஞ்சாபி மொழியில் படிக்க விரும்பும் நபர்களுக்கு, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தை 20.00 ரூபாய் நன்கொடைக்கு கொடுக்கலாம்.
கவனிக்கவும்: மேற்குறிப்பிடப்பட்ட அளிப்புத் திட்டப் பிரசுரங்களை இதுவரை தருவித்திராத சபைகள் தங்களுடைய அடுத்த பிரசுர ஆர்டர் நமூனாவில் (S-AB-14) ஆர்டர் செய்யவேண்டும்.
◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் செப்டம்பர் 1 அல்லது அதற்குப் பிறகு கூடுமானவரை சீக்கிரத்திலேயே சபையின் கணக்கைத் தணிக்கை செய்ய வேண்டும். இது செய்யப்பட்டதும் சபைக்கு அறிவிப்பு செய்யுங்கள்.
◼ அக்டோபர் மாதத்தில் துணைப் பயனியர்களாக சேவிக்க திட்டமிடும் பிரஸ்தாபிகள், ஒரு விண்ணப்பத்தை முன்னதாகவே சமர்ப்பிக்க வேண்டும். இது, பத்திரிகைகள், பிரசுரங்கள் மற்றும் பிராந்தியத்திற்காக தேவையான ஏற்பாடுகளை மூப்பர்கள் செய்வதற்கு அனுமதிக்கும்.
◼ திரும்ப நிலைநாட்டப்பட மனச்சாய்வுள்ள சபைநீக்கம் செய்யப்பட்ட அல்லது தொடர்பறுத்துக்கொண்ட எந்தவொரு நபரின் சம்பந்தமாகவும், ஏப்ரல் 15, 1991, ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 21-3-ல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றும்படி மூப்பர்களுக்கு நினைப்பூட்டப்படுகிறது.
◼ கல்கத்தாவில் நடைபெறும் மாவட்ட மாநாடு டிசம்பர் 27-29, 1996, என்ற தேதிகளுக்குத் தேதி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
◼ ஜனவரி 1997-லிருந்து, விழித்தெழு! பத்திரிகையின் மராத்தி பதிப்பு ஒரு மாதாந்திர வெளியீடாக இருக்கும்.
◼ ஆகஸ்ட் 29, வியாழக்கிழமை அன்றோ அல்லது இறுதியாக செப்டம்பர் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையாவது தங்களுடைய வெளி ஊழிய அறிக்கைகளைத் தங்கள் சபையிடம் கொடுக்கும்படி எல்லா பிரஸ்தாபிகளையும் உற்சாகப்படுத்துகிறோம். அதற்குப் பின்பு, ஊழிய ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையைத் தயாரிப்பதற்குச் சரியான சமயத்தில் எங்களிடம் வந்துசேரும்படி, சபை அறிக்கையை (S-1) செவ்வாய், செப்டம்பர் 3-க்குள் சங்கத்திற்கு அனுப்ப சபை செயலர் அனைத்து முயற்சியையும் எடுக்க வேண்டும்.