உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 11/96 பக். 1
  • ஒரு கட்டளை நமக்கு இருக்கிறது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒரு கட்டளை நமக்கு இருக்கிறது
  • நம் ராஜ்ய ஊழியம்—1996
  • இதே தகவல்
  • ‘புறப்படுங்கள் . . . சீஷர்களாக்குங்கள்’
    என்னைப் பின்பற்றி வா
  • “வார்த்தை பிரசங்கி”!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ஊழியம் செய்ய யெகோவா நமக்கு உதவுகிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • நல்ல செய்தி சொல்லப்படுகிறது
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1996
km 11/96 பக். 1

ஒரு கட்டளை நமக்கு இருக்கிறது

1 ‘சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்,’ என்று இயேசு தமது சீஷர்களுக்கு கட்டளையிட்டார். (மத். 28:19) பூமி முழுவதிலும் 232 தேசங்களிலும், தீவுக்கூட்டங்களிலும், யெகோவா தேவனைத் துதிக்கும் ஐம்பது லட்சத்திற்கும் அதிகமானோர், இயேசுவுடைய கட்டளையின் நிறைவேற்றத்திற்கு உயிருள்ள அத்தாட்சிகளாக விளங்குகின்றனர். ஆனால் தனிப்பட்ட வகையில் நம்மைப்பற்றி என்ன? பிரசங்கிப்பதற்கான கட்டளையை நாம் முக்கிய காரியமாக கருதுகிறோமா?

2 ஒரு தார்மீகக் கடமை: “குறிப்பிட்ட செயல்களை செய்வதற்கான ஒரு ஆணை”தான் ஒரு கட்டளை என்பது. பிரசங்கிப்பதற்கான கிறிஸ்துவின் கட்டளையின்கீழ் நாம் இருக்கிறோம். (அப். 10:42) இது, நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கான ஒரு அவசியத்தை, ஒரு தார்மீகக் கடமையை, தன்மீது சுமத்தியிருக்கிறது என்பதாக அப்போஸ்தலன் பவுல் கருதினார். (1 கொ. 9:16) எடுத்துக்காட்டாக: மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு கப்பலில் உள்ள பணியாளர்களில் நீங்கள் ஒருவராக இருக்கிறீர்கள் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். பயணிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும்படியும், அவர்களை உயிர்காப்புப் படகுகளுக்கு அனுப்பிவைக்கும்படியும் கேப்டன் உங்களுக்கு ஆணையிடுகிறார். இந்தக் கட்டளையை அசட்டை செய்துவிட்டு உங்களைக் காப்பாற்றுவதற்குமட்டும் கவனம் செலுத்துவீர்களா? நிச்சயமாக அப்படி செய்யமாட்டீர்கள். மற்றவர்கள் உங்களை சார்ந்து இருக்கிறார்கள். அவர்களுடைய உயிர்கள் ஆபத்தில் இருக்கின்றன. அவர்களுக்கு உதவி செய்ய உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்றுவதற்கான தார்மீகக் கடமை உங்களுக்கு இருக்கிறது.

3 ஒரு எச்சரிக்கை விடுப்பதற்கான தெய்வீகக் கட்டளை நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் துன்மார்க்க காரிய ஒழுங்குமுறை முழுவதிற்கும் யெகோவா விரைவில் ஒரு முடிவை கொண்டுவரவிருக்கிறார். லட்சக்கணக்கான ஆட்களின் முடிவு அநிச்சயமாக இருக்கிறது. மற்றவர்களுக்கு வரும் ஆபத்தை அசட்டை செய்துவிட்டு நம்மைக் காப்பாற்றிக்கொள்வதில் மட்டும் அக்கறை காட்டுவது சரியானதாக இருக்குமா? நிச்சயமாக இருக்காது. மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான தார்மீகக் கடமை நமக்கு இருக்கிறது.—1 தீ. 4:16.

4 பின்பற்றுவதற்கான உண்மைத்தன்மையுள்ள முன்மாதிரிகள்: உண்மைத்தன்மையற்ற இஸ்ரவேலர்களுக்கு ஒரு எச்சரிப்பு செய்தியை விடுப்பதற்கான பொறுப்புணர்ச்சி தீர்க்கதரிசி எசேக்கியேலுக்கு இருந்தது. அவர் தன்னுடைய வேலையை செய்யத் தவறினால் ஏற்படும் விளைவுகளைப்பற்றி யெகோவா அவரை அழுத்தம்திருத்தமாக எச்சரித்திருந்தார்: “சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்கையில், . . . நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்தத் துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையில் கேட்பேன்.” (எசே. 3:18) கடுமையான எதிர்ப்பின் மத்தியிலும் எசேக்கியேல் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த கட்டளையை உண்மைப்பற்றுறுதியோடு நிறைவேற்றினார். ஆகவே, யெகோவாவின் நியாயத்தீர்ப்புகள் நிறைவேற்றப்பட்டபோது அவரால் மகிழ்ச்சியாய் இருக்கமுடிந்தது.

5 பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, பிரசங்கிப்பதற்கான தன்னுடைய பொறுப்பைப்பற்றி அப்போஸ்தலன் பவுல் எழுதினார். அவர் அறிவித்ததாவது: ‘தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேன்.’ பவுல் வெளியரங்கமாகவும் வீடுகள்தோறும் பிரசங்கித்தார், ஏனென்றால் அவ்வாறு பிரசங்கிக்கத் தவறுவது கடவுளுக்குமுன் தன்னை ரத்தப்பழியுள்ளவராக ஆக்கிவிடக்கூடும் என்பதை அவர் அறிந்திருந்தார்.—அப். 20:20, 26, 27.

6 எசேக்கியேலின் வைராக்கியம் நமக்கிருக்கிறதா? பவுல் உணர்ந்ததைப் போலவே பிரசங்கிப்பதற்கான ஒரு உந்துவிப்பை நாம் உணருகிறோமா? அவர்களுக்கிருந்த கட்டளையைப் போலத்தான் நமக்கிருக்கும் கட்டளையும் இருக்கிறது. மற்றவர்கள் காண்பிக்கும் அக்கறையற்ற, அசட்டையான மனப்பான்மை அல்லது எதிர்ப்பின் மத்தியிலும், மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க நமக்கிருக்கும் பொறுப்பை நாம் தொடர்ந்து நிறைவேற்றவேண்டும். இன்னும் ஆயிரக்கணக்கானோர், “தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடே கூடப் போவோம்,” என்று சொல்லி ராஜ்ய செய்திக்கு பிரதிபலிப்பார்கள். (சக. 8:23) நாம் விட்டுவிடாதபடிக்கு கடவுளுக்கும் நம் சகமனிதர்களுக்கும் இருக்கும் நம்முடைய அன்பானது நம்மை உந்துவிப்பதாக. பிரசங்கிப்பதற்கான ஒரு கட்டளை நமக்கு இருக்கிறது!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்