உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 11/96 பக். 2
  • நவம்பர் ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நவம்பர் ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1996
  • துணை தலைப்புகள்
  • நவம்பர் 4-ல் துவங்கும் வாரம்
  • நவம்பர் 11-ல் துவங்கும் வாரம்
  • நவம்பர் 18-ல் துவங்கும் வாரம்
  • நவம்பர் 25-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1996
km 11/96 பக். 2

நவம்பர் ஊழியக் கூட்டங்கள்

குறிப்பு: மாநாட்டு காலப்பகுதியின்போது நம் ராஜ்ய ஊழியம் ஒவ்வொரு வாரத்திற்கும் ஒரு ஊழிய கூட்டத்தை அட்டவணையிடும். “தேவ சமாதான தூதுவர்கள்” மாநாட்டுக்குச் செல்வதற்கும் பின்னர் அதற்கடுத்த வார ஊழியக் கூட்டத்தில் அந்த நிகழ்ச்சி நிரலின் சிறப்பு குறிப்புகளை 30-நிமிடம் மறுபார்வை செய்வதற்கும் ஏதுவாக சபைகள் தேவையான மாற்றங்களை செய்துகொள்ளலாம். மாவட்ட மாநாட்டினுடைய ஒவ்வொரு நாளின் நிகழ்ச்சி நிரலின் முக்கியமான குறிப்புகளிலும் கவனம் செலுத்தத்தக்க இரண்டோ மூன்றோ தகுதியுள்ள சகோதரர்கள் முன்கூட்டியே நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். நன்கு தயாரிக்கப்பட்ட இந்த மறுபார்வை, தனிப்பட்ட வாழ்க்கையிலும், வெளி ஊழியத்திலும் பயன்படுத்துவதற்கான முக்கிய குறிப்புகளை நினைவில் வைப்பதற்கு சபைக்கு உதவி செய்யும். சபையாரிடமிருந்து கேட்கப்படும் குறிப்புகளும் சொல்லப்படும் அனுபவங்களும் சுருக்கமாகவும் குறிப்பாகவும் இருக்க வேண்டும்.

நவம்பர் 4-ல் துவங்கும் வாரம்

பாட்டு 29

10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். நாட்டினுடைய மற்றும் உள்ளூர் சபையினுடைய ஜூலை வெளி ஊழிய அறிக்கையின் பேரில் குறிப்பு சொல்லுங்கள்.

15 நிமி: “கடவுளுடைய வார்த்தையை நீங்கள் சரியான விதத்தில் போதிக்கிறீர்களா?” கேள்விகளும் பதில்களும். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 59, 60-ல், “பைபிளைக் கருத்துடன் கவனிக்க வேண்டியதற்குக் காரணங்கள்,” பற்றிய குறிப்புகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

20 நிமி: ‘இதுவே நித்தியஜீவன்.’ (பாராக்கள் 1-5) பாரா 1-ன் மீதான சுருக்கமான அறிமுக குறிப்புகளுக்குப் பின், திறம்பட்ட இரு பிரஸ்தாபிகள், பாராக்கள் 2-5-ல் கொடுக்கப்பட்டுள்ள பிரசங்க அளிப்புகளை நடித்துக் காட்டும்படி செய்யுங்கள். ஒரு பைபிள் படிப்பைத் தொடங்கும் இலக்கை அழுத்திக் கூறுங்கள்.

பாட்டு 128, முடிவு ஜெபம்.

நவம்பர் 11-ல் துவங்கும் வாரம்

பாட்டு 40

10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.

20 நிமி: ஏன் யெகோவாவுக்கு கொடுக்க வேண்டும்? நவம்பர் 1, 1996 காவற்கோபுரத்தில் பக்கங்கள் 28-31-லுள்ள கட்டுரையின் முக்கிய குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டும் வண்ணம் இரு மூப்பர்களுக்கிடையே கலந்தாலோசிப்பு. அல்லது அந்தத் தகவல் ஒரு மூப்பரால் ஒரு பேச்சாகக் கொடுக்கப்படலாம்.

15 நிமி: ‘இதுவே நித்தியஜீவன்.’ (பாராக்கள் 6-8) படிப்புகளைத் தொடங்குவதற்கு நேரடியான அணுகுமுறையைப் பயன்படுத்துவதன் நன்மைகளைக் கலந்தாலோசியுங்கள். பாராக்கள் 6-7-லுள்ள பிரசங்க அளிப்புகளை அனுபவமுள்ள பிரஸ்தாபிகள் நடித்துக் காட்டச் செய்யுங்கள். முதல் சந்திப்பிலேயே ஒரு படிப்பு தொடங்கப்பட்டது பற்றிய சம்பவங்களைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். நேரடியாக ஒரு படிப்புக்கான வாய்ப்பு முன்வைக்கப்பட்டபோது ஒருவர் இவ்வாறு பதிலளித்தார்: “சரி. உள்ளே வாருங்கள். ஒரு படிப்பைக் கொண்டிருக்க நான் சந்தோஷப்படுவேன்.” அவருடன் படிப்பு தொடங்கப்பட்டது; அடுத்த வாரம், அவருடைய முழு குடும்பமும் சேர்ந்துகொண்டது; விரைவில் அவர்கள் எல்லாரும் கூட்டங்களுக்கு வருபவர்களாயும் சாட்சி கொடுக்கும் வேலையில் பகிர்ந்துகொள்கிறவர்களாயும் இருந்தனர். ஜூன் 1996-ன் நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையின் தங்கள் சொந்த பிரதியை அடுத்த வார ஊழியக் கூட்டத்திற்குக் கொண்டுவரும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.

பாட்டு 129, முடிவு ஜெபம்.

நவம்பர் 18-ல் துவங்கும் வாரம்

பாட்டு 140

10 நிமி: சபை அறிவிப்புகள். “புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரல்” மறுபார்வை செய்யுங்கள்.

15 நிமி: “ஒரு கட்டளை நமக்கு இருக்கிறது.” கேள்விகளும் பதில்களும். மார்ச் 1, 1988, காவற்கோபுரம், பக்கங்கள் 29-30-லுள்ள பாராக்கள் 13-16-ன்பேரில் சுருக்கமான குறிப்புகளைச் சொல்லுங்கள்.

20 நிமி: முன்னேற்றமடைந்துவரும் பைபிள் படிப்புகளை நடத்துதல். ஊழியக் கண்காணியால் கொடுக்கப்படும் பேச்சு. ஏறக்குறைய ஒரு வருடமாக அறிவு புத்தகத்தை பைபிள் படிப்பு வேலையில் நாம் பயன்படுத்தி வந்திருக்கிறோம். சில மாணாக்கர்கள் ஏற்கெனவே அதைப் படித்து முடித்திருக்கலாம், அதேநேரத்தில் மற்றவர்கள் அதில் பெரும்பகுதியை படித்து முடித்திருக்கலாம். புதியவர்கள் விரைவில் சத்தியத்தைக் கற்றுக்கொண்டு, அதைத் தங்கள் வாழ்க்கையில் பொருத்தி, சபையின் பாகமாக ஆவதற்கு உதவும் வகையில் திட்டமிடப்பட்ட படிப்புகளை நடத்துவதில் கவனத்தை ஒருமுகப்படுத்தும்படி நாம் உற்சாகமளிக்கப்பட்டோம். போதகர்களாய் திறம்பட்டவர்களாக இருக்க நமக்கு உதவும் சிறந்த ஆலோசனைகளை ஜூன் 1996 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கை அளித்தது. மாணாக்கர்களுக்கு திறம்பட்ட விதத்தில் போதிக்க நம்மால் செய்ய முடிந்த சில காரியங்களை, அந்த உட்சேர்க்கையின் 3-13 பாராக்களில் சொல்லப்பட்டவற்றை, சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள். அடுத்து, பாராக்கள் 14-22-ல் குறிப்பிடப்பட்டபடி ஓர் உடன்பாடான நிலைநிற்கை எடுப்பதற்கு அவர்களுக்கு உதவ என்ன செய்யப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள். பாராக்கள் 15, 17, 20-1 ஆகியவற்றை வாசியுங்கள். உள்ளூர் பிரஸ்தாபிகள் எவ்வளவு நல்ல பயன்களைப் பெற்றிருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கும் சில நல்ல அறிக்கைகளை மறுபார்வை செய்யுங்கள். பைபிள் படிப்பு வேலையில் அதிகம் பேர் பகிர்ந்து கொள்ளும்படி உற்சாகம் அளியுங்கள்.

பாட்டு 85, முடிவு ஜெபம்.

நவம்பர் 25-ல் துவங்கும் வாரம்

பாட்டு 46

10 நிமி: சபை அறிவிப்புகள். கேள்விப் பெட்டியை கலந்தாலோசியுங்கள். வீட்டில் இல்லாதவர்களைக் குறித்து சரியான பதிவுகளை வைத்திருப்பதன் அவசியத்தைச் சிறப்பித்துக் காட்டுங்கள்.

25 நிமி: “எங்கும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள்.” கேள்விகளும் பதில்களும். உட்சேர்க்கையில் கொடுக்கப்பட்டுள்ள சில ஆலோசனைகள் உள்ளூர் பிராந்தியத்தில் எப்படி திட்டமிட்டு ஒழுங்கமைக்க முடியும் என்பதைக் குறிப்பிடுங்கள். வீட்டுக்கு வீடு வேலையை அசட்டை செய்துவிடாமல் சாட்சி கொடுப்பதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்த கவனமாக இருக்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். பாராக்கள் 23-25-ஐ நடித்துக் காட்டுங்கள். பாராக்கள் 34-35-ஐ வாசியுங்கள்.

10 நிமி: டிசம்பருக்குரிய பிரசுர அளிப்பை மறுபார்வை செய்யுங்கள். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை, பக்கங்கள் 11-13-லுள்ள படங்களைப் பயன்படுத்தி அளியுங்கள். அதிகாரம் 11-க்கு கவனத்தைத் திருப்புங்கள். இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு புத்தகத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வீட்டில், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தையும், அதேபோன்றதும் பிள்ளைகள் உள்ளதுமான ஒரு வீட்டில் என்னுடைய பைபிள் கதை புத்தகத்தையும் அளிப்பதை நடித்துக் காட்டுங்கள். எங்கெல்லாம் அக்கறை காண்பிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் ஒரு மறு சந்திப்பிற்கான திட்டவட்டமான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.

பாட்டு 180, முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்