அறிவிப்புகள்
◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் டிசம்பர் 1 அல்லது அதற்குப் பிறகு கூடுமானவரை சீக்கிரத்திலேயே சபையின் கணக்கைத் தணிக்கை செய்ய வேண்டும். இது செய்யப்பட்டதும் சபைக்கு அறிவிப்பு செய்யுங்கள்.
◼ 1997-க்கான நினைவு ஆசரிப்பு ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 23, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இருக்கும். தேவைப்படும் இடங்களில் மன்றங்களுக்காக சகோதரர்கள் முன்னதாக பதிவுசெய்யும்படி இந்த நினைப்பூட்டுதல் கொடுக்கப்படுகிறது.
◼ ஜனவரி முதற்கொண்டு, “நம் தேவனாகிய யெகோவாவைப் போல் யார் உண்டு?” என்று தலைப்பிடப்பட்ட பொதுப் பேச்சை வட்டாரக் கண்காணிகள் கொடுப்பார்கள். வியாழக்கிழமை (அல்லது வெள்ளிக்கிழமை) கொடுக்கப்படும் முதல் ஊழியப் பேச்சு இவ்வாறு தலைப்பிடப்பட்டுள்ளது: “நற்செய்தியில் வைராக்கியமாய் இருங்கள்.” அதே நாளில் ஒன்றுசேர்ந்து நடத்தப்படும் 45-நிமிட சபை புத்தகப் படிப்புக்குப் பிறகு கொடுக்கப்படும் இரண்டாவது ஊழியப் பேச்சு, “நற்குணமா துற்குணமா—எதை நீங்கள் தொடருவீர்கள்?” என்பதாகும். இந்தப் பேச்சுகள் ஒவ்வொன்றும் 25 நிமிடங்களுக்கு இருக்கும், வியாழக்கிழமை (அல்லது வெள்ளிக்கிழமை) கூட்டம் மொத்தமாக ஒரு மணி 50 நிமிடங்களுக்கு நீடிக்கும். ‘நீங்கள் கற்றுக்கொண்ட காரியங்களில் நிலைத்திருங்கள்’ என்ற கலந்தாராய்வு மாற்றீடு செய்யப்பட்டுள்ளவாறே இருக்கும்.
◼ 1997-க்கான வருடாந்தர வசனம்: “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்.”—சங்கீதம் 143:10. சபைகள் தங்களுடைய புதிய வருடாந்தர வசன போர்டை ஜனவரி 1, 1997, அல்லது அதற்குப் பின்பு முடிந்தவரை சீக்கிரத்திலேயே மாட்டுவதற்கு தயார்செய்ய முடிந்தால் நல்லது.
◼ கல்கத்தாவில் நடைபெறும் மாவட்ட மாநாட்டு தேதி ஜனவரி 3-5, 1997-க்கு மாற்றப்பட்டுள்ளது.
◼ 1997-ல் பயன்படுத்துவதற்கான ஊழிய நமூனாக்கள் சபைகளுக்குப் போதிய அளவு அனுப்பப்பட்டிருக்கின்றன. சம்பந்தப்பட்ட சகோதரர்களிடம் பொருத்தமான நமூனாக்களை பகிர்ந்தளிக்க சபை செயலாளர்களுக்கு உதவிசெய்யும்படி ஒரு செக்லிஸ்ட் அந்த நமூனாக்களுடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த நமூனாக்கள் அவற்றிற்கான நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், வீணாக்கப்படக் கூடாது. உங்களுடைய சபைக்கு ஓராண்டுக்குப் போதியளவு நமூனாக்கள் இருக்கிறதா என்பதை தயவுசெய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கூடுதலான நமூனாக்கள் தேவையானால், அவற்றை உடனடியாக ஆர்டர் செய்ய வேண்டும். தயவுசெய்து 1997 டிசம்பர் வரைக்கும் போதுமானளவு மட்டுமே ஆர்டர் செய்யுங்கள்.
அந்த நமூனாக்களுடன் புதிய உவாட்ச்டவர் பிரசுரங்கள் பட்டியல் நான்கு பிரதிகள் அனுப்பப்பட்டுள்ளன. ஒன்றை செயலாளர் வைத்துக்கொள்ள வேண்டும்; மற்றவற்றை பிரசுரங்கள், பத்திரிகைகள், மற்றும் கணக்குகளை கவனிக்கும் சகோதரர்களிடம் பகிர்ந்தளிக்க வேண்டும்.