கடவுள் வழங்கும் அதிகரிப்போடு களிகூருதல்
1 முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்கள் வைராக்கியமுள்ள பிரசங்கிகளாய் இருந்தனர். ‘சபைகள் நாளுக்குநாள் பெருகினபோது’ அவர்கள் களிகூர்ந்தனர். (அப். 16:5) அவர்கள் செய்த தைரியமான பிரசங்க வேலை ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்குள்ளும் பரவி, அநேக விசுவாசிகளை உருவாக்கியது.
2 கடைசி நாட்களில் ‘குடியிருக்கப்பட்ட பூமியனைத்திற்கும்’ பிரசங்க வேலை சென்றெட்டும் என்று இயேசு முன்னறிவித்தார். (மத். 24:14, NW) 1996 ஊழிய ஆண்டின்போது, உலகமுழுவதிலுமுள்ள நாடுகளிலிருந்து வந்த வியக்கத்தக்க அதிகரிப்புகளையும் பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலைகளையும் பற்றிய அறிக்கைகளைத் தொடர்ந்து பெற்றோம். வேகமான இந்த வளர்ச்சி, நூற்றுக்கணக்கான புதிய ராஜ்ய மன்றங்களையும் மாநாட்டு மன்றங்களையும் கட்டுவதையும், அதோடு அநேக கிளை அலுவலக கட்டடங்களை விரிவுபடுத்துவதையும் அவசியமாக்கியிருக்கிறது.
3 ஆப்பிரிக்காவில் செய்யப்பட்டுவரும் கட்டுமான பணியைக் குறித்து ஆகஸ்ட் 1996 நம் ராஜ்ய ஊழியம் அறிக்கை செய்தது. இதைப் போன்ற நடவடிக்கை லத்தீன் அமெரிக்கா முழுவதும் தொடர்ந்து முன்னேறி வருகிறது. கடந்த 1996 ஊழிய ஆண்டிற்காக, 4,70,098 பிரஸ்தாபிகள் என்ற திகைக்க வைக்கும் உச்சநிலையையும், சராசரியாக 6,00,751 பைபிள் படிப்புகளையும் மெக்ஸிகோ அறிக்கை செய்கிறது; இது, 466 புதிய சபைகள் உருவாக்கப்படுவதை தேவைப்படுத்துகிறது!
4 இந்தியாவில் இந்த வருடத்தில் சபைகளின் எண்ணிக்கை 25-க்கு உயர்ந்தது; இது, 531 சபைகளையும் தனித் தொகுதிகளையும் கொண்ட மொத்த எண்ணிக்கைக்கு கொண்டுவருகிறது. 16,615 பிரஸ்தாபிகள் தங்களுடைய ஊழியத்தை அறிக்கை செய்து, ஆகஸ்டில் 24-வது தொடர்ச்சியான உச்சநிலையை எட்டுகையில் நாம் களிகூர்ந்தோம். இந்த ஆண்டு ஏழு சதவீத அதிகரிப்பில் இது விளைவடைந்தது. சாட்சிகளுக்கு சொந்தமான 170 ராஜ்ய மன்றங்கள் இப்பொழுது இந்தியாவில் இருக்கிறபோதிலும், இந்த வேகமான வளர்ச்சி, புதிய ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதையும் அதோடு நம்முடைய கிளையலுவலக கட்டுமான திட்டத்தை நோக்கி முன்னோக்கிச் செல்வதையும் அவசியமாக்கியிருக்கிறது. தற்போது 21 ராஜ்ய மன்ற கட்டுமான திட்டங்கள் நடந்தேறிவருகின்றன.
5 கட்டுமான செலவுகள் அதிகமாய் இருக்கின்றன, ஆனால் அநேக ராஜ்ய மன்றங்கள் கட்டப்படுவதும் அவசியமாய் இருக்கிறது. இத்தகைய திட்டங்கள் பெரும்பாலும் தேசிய ராஜ்ய மன்ற நிதியினால் உதவியளிக்கப்படுகின்றன; இது, உங்களுக்கு கூட்டம் நடைபெறும் இடத்தில், ‘கட்டிட நிதி’ (Building Fund) என்று குறிப்பிடப்பட்டுள்ள பெட்டியில் நீங்கள் போடும் நன்கொடைகளால் அளிக்கப்படுகிறது. இந்தக் கட்டுமான செலவுகளுக்காக நன்கொடை அளிப்பதற்கான நம்முடைய மனப்பூர்வதன்மை, கொடுப்பதனால் வரும் மகிழ்ச்சியையும் யெகோவா வழங்கும் அதிகரிப்பை பார்ப்பதனால் வரும் ஆனந்தக்களிப்பையும் நாம் அனுபவிப்பதில் விளைவடைகிறது.—அப். 20:35.
[பக்கம் 4, 5-ன் படம்]
பராகுவே கிளை
[பக்கம் 4-ன் படம்]
ஈக்வடார் கிளை
[பக்கம் 4, 5-ன் படம்]
கட்டப்பட்டுவரும் மெக்ஸிகோ கிளையின் விரிவாக்கம்
[பக்கம் 4, 5-ன் படம்]
டொமினிக்கன் குடியரசு கிளை
[பக்கம் 4-ன் படம்]
விரிவாக்கத்துடன்கூடிய பிரேஸில் கிளை
[பக்கம் 4, 5-ன் படம்]
கட்டப்பட்டுவரும் உருகுவே கிளை
[பக்கம் 5-ன் படங்கள்]
லத்தீன் அமெரிக்காவில் குறைவான பட்ஜெட்டில் கட்டப்பட்ட ராஜ்ய மன்றங்கள்
1. பிரேஸில்
2. நிகாரகுவா
3. சிலி
4. கொலம்பியா
5. மெக்ஸிகோ
6. பிரேஸில்
7. பெரு
8. வெனிசுவேலா
9. மெக்ஸிகோ