அறிவிப்புகள்
◼ இந்த ஆண்டின் நினைவு ஆசரிப்பு சமயத்தில் விசேஷ பொதுப் பேச்சு பெரும்பாலான சபைகளில் ஞாயிறு, ஏப்ரல் 6-ம் தேதி கொடுக்கப்படும். பொதுப் பேச்சின் தலைப்பு, “உலக அசுத்தங்களிலிருந்து சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.” நாம் அனைவரும் கட்டாயம் ஆஜராக வேண்டும், நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்த புதியவர்கள் அந்தப் பேச்சைக் கேட்கும்படி வருவதற்கும் நாம் உதவ வேண்டும். நாம் கேட்கும் விஷயம் நிச்சயமாகவே கடவுளை மகிழ்விப்பதற்கு நமக்கிருக்கும் தீர்மானத்தைப் புதுப்பிக்க உதவும்.
◼ மிகப் பெரிய மனிதர் புத்தகத்திலிருந்து நடத்தப்படும் சபை புத்தகப் படிப்புகளின் மூலம் மிகுதியான பலனைப் பெற, தயவுசெய்து நம் ராஜ்ய ஊழியம், ஏப்ரல் 1993 இதழில், பக்கம் 8-ல் காணப்படும் மிகச் சிறந்த குறிப்புகளைச் சிந்தியுங்கள். ஒவ்வொரு அத்தியாயத்தையும் தயாரிப்பது எப்படி என்றும் சபை புத்தக படிப்பில் பின்பற்றப்படும் முறையையும் அந்தக் கட்டுரை விளக்குகிறது. இந்தத் தகவலை மறுபார்வை செய்வதிலிருந்து படிப்பை நடத்துபவர்களும் ஆஜராகும் அனைவருமே பலனடைவர்.
◼ ஒவ்வொரு சமுதாயத்திலும், வருடத்தின் வெவ்வேறு சமயங்களில், உலகப்பிரகாரமான விடுமுறை நாட்கள் வருகின்றன, அவை பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதிலிருந்தும் பெரியவர்கள் வேலைக்குச் செல்வதிலிருந்தும் விடுப்பளிக்கின்றன. சபைகள் வெளி ஊழியத்தில் தங்கள் பங்கை அதிகரிக்க இவை மிகச் சிறந்த வாய்ப்புகளை அளிக்கின்றன. இந்தச் சந்தர்ப்பங்கள் எப்போதெல்லாம் வருகின்றன என்பதை மூப்பர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க வேண்டும்; விடுமுறை நாட்களின்போது தொகுதியாக சாட்சிகொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதை முன்கூட்டியே சபைக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
◼ நடத்தும் கண்காணியோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட வேறொருவரோ மார்ச் 1 அல்லது அதற்குப் பிறகு எவ்வளவு சீக்கிரமாய் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாய் சபையின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கை செய்யப்பட்டதும் சபைக்கு அறிவியுங்கள்.
◼ மார்ச் 1, 1997 முதல், கன்னடா, தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளிலுள்ள காவற்கோபுரம், நம் ராஜ்ய ஊழியம் ஆகியவற்றின் எல்லா வெளியீடுகளிலும், அந்த மொழிகளிலுள்ள பாடல் சிற்றேட்டில் இருந்து எடுக்கப்பட்ட மாற்று பாடல் எண்கள் குறிப்பிடப்படும். இந்த மொழிகளில் கூட்டங்கள் நடத்தப்படும்போது ஆங்கிலப் பாடல்களுக்குப் பதிலாக இந்த மொழிகளில் உள்ள பாடல்களையே பாட வேண்டும். இது, பிரஸ்தாபிகளையும் கூட்டத்துக்கு ஆஜராகுபவர்களையும் தங்கள் சொந்த மொழியில் ராஜ்யப் பாடல்களை நன்கு பழகிக்கொள்ள உற்சாகப்படுத்தும்.