கேள்விப் பெட்டி
◼ சவ அடக்கத்திற்காக ஏற்பாடு செய்வதில் உதவுவதற்காக சபை அழைக்கப்படும்போது, பின்வரும் கேள்விகள் எழக்கூடும்:
சவ அடக்கப் பொதுப் பேச்சை யார் கொடுக்க வேண்டும்? இது குடும்ப உறுப்பினர்களால் செய்யப்பட வேண்டிய ஒரு தீர்மானம். நல்ல நிலைநிற்கையிலுள்ள முழுக்காட்டுதல் பெற்ற எந்தவொரு சகோதரரையும் அவர்கள் தெரிவு செய்யலாம். மூப்பர் குழு ஒரு பேச்சாளரை ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டால், அவர்கள் சங்கத்தினுடைய குறிப்புத்தாளின் அடிப்படையில் பேச்சு ஒன்றைக் கொடுப்பதற்கு தகுதிவாய்ந்த ஒரு மூப்பரை பொதுவாக தெரிந்தெடுப்பார்கள். இறந்தவரைப் பற்றி உயர்த்திப் பேசாதபோதிலும், அவர் காட்டியிருக்கும் முன்மாதிரியான குணங்களுக்கு கவனத்தைக் கொண்டுவருவது பொருத்தமானதாய் இருக்கலாம்.
இராஜ்ய மன்றம் பயன்படுத்தப்படலாமா? மூப்பர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டிருந்து, வழக்கமாய் நடத்தப்படும் கூட்டத்தைத் தடை செய்யாதிருந்தால் பயன்படுத்தப்படலாம். இறந்தவர் ஒரு சுத்தமான நிலைநிற்கைக்குப் பெயர்பெற்றிருந்து, அந்தச் சபையின் ஓர் உறுப்பினராகவோ அல்லது ஓர் உறுப்பினரின் வயதுவராத பிள்ளையாகவோ இருந்தால் மன்றம் பயன்படுத்தப்படலாம். அந்த நபர் கிறிஸ்தவமல்லாத நடத்தைக்குப் பேர்போனவராய் பொதுவில் அறியப்பட்டிருந்தாலோ அல்லது அவரைப் பற்றிய பிற அம்சங்கள் சபையின் பேரில் சாதகமற்ற பிரதிபலிப்பை ஏற்படுத்தினாலோ, மன்றத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாமென்று மூப்பர்கள் தீர்மானிக்கலாம்.—நம் ஊழியம் புத்தகம், பக்கங்கள் 62-3-ஐக் காண்க.
பொதுவாக, இராஜ்ய மன்றங்கள் விசுவாசத்தில் இராதவர்களின் சவ அடக்க நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. உயிரோடிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் முழுக்காட்டுதல் பெற்ற பிரஸ்தாபிகளாய் வைராக்கியமாக சபையுடன் கூட்டுறவு கொள்பவர்களாய் இருந்து, இறந்தவர் சத்தியத்தினிடம் சாதகமான மனப்பான்மையைக் காட்டியிருந்ததாகவும் சமுதாயத்தில் நேர்மையான நடத்தைக்குப் பேர்பெற்றவராய் இருந்ததாகவும் சபையில் கணிசமான எண்ணிக்கையினர் அறிந்திருந்தாலும், உலகப்பிரகாரமான பழக்கவழக்கங்கள் அந்த நிகழ்ச்சியின்போது சேர்க்கப்படாதிருந்தாலும் விதிவிலக்கு அளிக்கப்படலாம்.
இராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்குகையில், சவ அடக்க நிகழ்ச்சியின்போது சவப்பெட்டி அங்கு இருக்கும்படி வழக்கமாக எதிர்பார்க்கப்படுகிறதா என்பதை மூப்பர்கள் கருத்தில் கொள்வர். அப்படி எதிர்பார்க்கப்படுவதாய் இருந்தால், அதை மன்றத்துக்குள் கொண்டுவர அவர்கள் அனுமதிக்கலாம்.
லகப்பிரகாரமான ஜனங்களுக்கு சவ அடக்கங்கள் நடத்துவதைப் பற்றியென்ன? இறந்தவர் சமுதாயத்தில் ஒரு நல்ல பெயரை சம்பாதித்திருந்தால், ஒரு சகோதரர் ஆறுதலளிக்கும் பைபிள் பேச்சு ஒன்றை வீட்டிலோ அல்லது கல்லறையிலோ வைத்துக் கொடுக்கலாம். ஒழுக்கக்கேடான, சட்ட விரோதமான நடத்தைக்குப் பேர்போனவராய் இருந்த, அல்லது பைபிள் நியமங்களுக்கு முற்றிலும் முரணாக வாழ்க்கை நடத்தியவராய் இருந்த ஒருவருக்கு சவ அடக்கத்தை நடத்துவதை சபை மறுத்துவிடும். ஒரு சகோதரர், கலப்பு விசுவாச சவ அடக்க நிகழ்ச்சியை நடத்தும் ஒரு மதத்தலைவரோடு சேர்ந்துகொள்ளவும் மாட்டார், மகா பாபிலோனைச் சேர்ந்த ஒரு சர்ச்சில் வைத்து ஒரு சவ அடக்கத்தை நடத்தவும் மாட்டார்.
இறந்தவர் சபைநீக்கம் செய்யப்பட்டவராய் இருந்தால் அப்போது என்ன செய்வது? சபை பொதுவாக ஈடுபடாது, இராஜ்ய மன்றமும் பயன்படுத்தப்படாது. அந்த நபர் மனந்திரும்புதலுக்கான நிரூபணத்தைக் காட்டினவராய் இருந்திருந்து, மறுபடியும் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நபராக ஆகும் ஓர் ஆவலைக் காட்டியிருந்திருந்தால், வீட்டிலோ அல்லது கல்லறையிலோ வைத்து ஒரு பைபிள் பேச்சைக் கொடுக்கவும், அதன் மூலம் சத்தியத்திலிராதவர்களுக்கு சாட்சி கொடுக்கவும், உறவினர்களுக்கு ஆறுதலளிக்கவும் வேண்டி, ஒரு சகோதரரின் மனச்சாட்சி அவரை அனுமதிக்கலாம். என்றாலும், இந்தத் தீர்மானத்தைச் செய்வதற்கு முன்பு, மூப்பர் குழுவோடு கலந்து பேசுவதும், அவர்கள் சிபாரிசு செய்யும் விஷயங்களைக் கருத்தில் கொள்வதும் ஞானமானதாய் இருக்கும். அந்தச் சகோதரர் அவ்வாறு ஈடுபடுவது ஞானமானதாய் இராதிருக்கும் சூழ்நிலைகளில், இறந்துபோன நபரின் குடும்ப உறுப்பினராயிருக்கும் ஒரு சகோதரர், உறவினர்களுக்கு ஆறுதலளிப்பதற்காக ஒரு பேச்சைக் கொடுப்பது பொருத்தமானதாய் இருக்கலாம்.—கூடுதலான வழிநடத்துதல், ஆங்கில காவற்கோபுரம், அக்டோபர் 15, 1990, பக்கங்கள் 30-1; செப்டம்பர் 15, 1981, பக்கம் 31; மார்ச் 15, 1980, பக்கங்கள் 5-7; ஜூன் 1, 1978, பக்கங்கள் 5-8; ஜூன் 1, 1977, பக்கங்கள் 347-8; மார்ச் 15, 1970, பக்கங்கள் 191-2; ஆங்கில விழித்தெழு! செப்டம்பர் 8, 1990, பக்கங்கள் 22-3; மார்ச் 22, 1977, பக்கங்கள் 12-15 ஆகியவற்றில் காணப்படலாம்.