அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள்
மே: காவற்கோபுரம் அல்லது விழித்தெழு!-வுக்கான சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தா 90.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தாக்களும் மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தாக்களும் 45.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தா கிடையாது. சந்தா ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால், பத்திரிகைகளின் தனிப்பட்ட பிரதிகள் 4.00 ரூபாய்க்கு அளிக்கப்பட வேண்டும். பொருத்தமான சமயங்களில், கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை 6.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்.
உருது, பஞ்சாபி (மாதாந்தர இதழ்) ஆகியவற்றைத் தவிர காவற்கோபுரம், இந்திய மொழிகள் அனைத்திலும் நேப்பாளியிலும் மாதம் இருமுறை வருகிறது என்பதைத் தயவுசெய்து நினைவில் வையுங்கள்.
தமிழிலும் மலையாளத்திலும் விழித்தெழு! மாதம் இருமுறையும், ஆனால், கன்னடம், குஜராத்தி, தெலுங்கு, நேப்பாளி, மராத்தி, ஹிந்தி ஆகியவற்றில் மாதாந்தர இதழாகவும் வெளிவருகிறது. உருது, பஞ்சாபி, பெங்காலி ஆகியவற்றுக்கான விழித்தெழு! காலாண்டு விநியோகஸ்தர் பிரதிகள் சபைகளுக்குக் கிடைக்கும்; இந்த மூன்று மொழிகளிலும் தனிப்பட்ட சந்தாவுக்கான ஏற்பாடு இல்லை.
ஜூன்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகம் 20.00 ரூபாய் நன்கொடைக்கு. வீட்டு பைபிள் படிப்புகளைத் தொடங்குவதில் கவனம் செலுத்துங்கள்.
ஜூலை மற்றும் ஆகஸ்ட்: பின்வரும் ஏதேனும் ஒரு 32 பக்க சிற்றேட்டை 6.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில்.
◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் —மராத்தி
அடிப்படை பைபிள் போதனைகள் —ஹிந்தி
◼ கிடைக்கக்கூடிய புதிய ஆடியோ கேஸட்டுகள்:
ராஜ்ய பாடல்களைப் பாடுதல் —ஆங்கிலம்
இசைக் கருவிகளோடு சேர்ந்து பாட்டுப் பாடுவதை இந்த 76 நிமிட ரிக்கார்டிங் சிறப்பித்துக் காட்டுகிறது. இவற்றில் சில, அனுபவமிக்க சகோதரர்கள் இசைக் கருவிகளோடு சேர்ந்து தனியே பாடிய பாடல்களாகவும், மற்றவை ஐ.மா. பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினர்கள் சேர்ந்து பாடிய கூட்டிசையாகவும், அவற்றில் ஒன்று பெத்தேல் சகோதரிகளின் ஒரு குழுவினரால் பாடப்பட்ட பாடலாகவும் இருக்கின்றன. இவை, நம்முடைய ராஜ்ய பாடல்கள் சிலவற்றை எப்படிப் பாடுவது என்பதற்கான மாதிரியாகவும், கேட்பதற்கு மகிழ்ச்சியளிப்பதாயும் கட்டியெழுப்புவதாயும் இருப்பதோடுகூட கேட்பவர்கள், வார்த்தைகளைக் கேட்டு, அவற்றைத் தியானிக்கவும் முடிந்தால் அவற்றை மனப்பாடம் செய்யவும்கூட வாய்ப்பளிக்கின்றன. ஒவ்வொரு கேஸட்டும், பயனியர்களுக்கு 55.00 ரூபாய்க்கும், பிரஸ்தாபிகளுக்கும் பொது மக்களுக்கும் 65.00 ரூபாய்க்கும் கிடைக்கும்.
◼ கிடைக்கக்கூடிய புதிய வீடியோ கேஸட்டுகள்:
பூமியின் கடை கோடிகளுக்கு —ஆங்கிலம்
உவாச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் 50-வது ஆண்டு விழாவின் ஞாபகார்த்தமாக இது வெளியிடப்பட்டது; இந்த 42 நிமிட வீடியோ, பார்வையாளர்களுக்கு முதல் கிலியட் வகுப்பினரை அறிமுகப்படுத்தி, 95-வது வகுப்பின் சில வகுப்பறை காட்சிகளை காட்டி, மிஷனரி வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் காண்பித்து, அந்தப் பள்ளியின் சாதனைகளை கலந்தாலோசித்து, உலகளாவிய பிரசங்க வேலையில் அது எந்தளவுக்கு பங்கு வகித்திருந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஒவ்வொரு கேஸட்டும், பயனியர்களுக்கு 150.00 ரூபாய்க்கும் பிரஸ்தாபிகளுக்கும் பொதுமக்களுக்கும் 200.00 ரூபாய்க்கும் கிடைக்கும்.