அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஜூன்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகம் 20.00 ரூபாய் நன்கொடைக்கு. வீட்டு பைபிள் படிப்புகளைத் தொடங்குவதில் கவனம் செலுத்துங்கள். ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் எதையேனும் 6.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்: “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?, கடவுளுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? செப்டம்பர்: குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகம் 20.00 ரூபாய் நன்கொடைக்கு.
◼ பிரசுரங்களை அனுப்பும்படி தனிப்பட்ட பிரஸ்தாபிகள் கேட்டுக்கொள்கையில் சங்கம் அனுப்புவதில்லை. சபையானது பிரசுரங்களுக்கான மாதாந்தர ஆர்டரை சங்கத்திற்கு அனுப்புவதற்கு முன்பு, நடத்தும் கண்காணி, ஒவ்வொரு மாதமும் சபையில் அறிவிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சொந்த பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் அனைவரும் லிட்ரேச்சர் கவனிக்கிற சகோதரரிடம் தெரிவிக்கலாம். எந்தெந்த பிரசுரங்கள் விசேஷ-தருவிப்புக்குரியவை என்பதை தயவுசெய்து மனதிற்கொள்ளுங்கள்.
◼ ஜூலை மாதம் முதற்கொண்டு, “யெகோவாவை கனப்படுத்த கல்வியைப் பயன்படுத்துங்கள்” என்ற பொதுப் பேச்சையும், “காணக்கூடிய அமைப்போடு இணைந்து செல்லுங்கள்” என்ற முடிவான பேச்சையும் வட்டாரக் கண்காணிகள் தங்களுடைய சந்திப்பின்போது கொடுப்பார்கள். வியாழக்கிழமை (அல்லது வெள்ளிக்கிழமை) அவர்கள் கொடுக்கும் முதல் ஊழியப் பேச்சு, “தைரியங்கொண்டு பிரசங்கியுங்கள்!” நடத்தும் கண்காணியோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட வேறொருவரோ ஜூன் 1 அல்லது அதற்குப் பிறகு எவ்வளவு சீக்கிரமாய் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாய் சபையின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கை செய்யப்பட்டதும் சபைக்கு அறிவியுங்கள்.
◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
யெகோவாவின் சாட்சிகளும் கல்வியும் — மலையாளம், தமிழ் 1995-ல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இந்தச் சிற்றேடு, முதல் தடவையாக இந்திய மொழிகளில் கிடைக்கிறது.
எல்லா பெற்றோரும் இதை தங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து படிக்கும்படியும் தங்களுடைய பிள்ளைகளுடைய ஆசிரியர்களுக்கு இதைக் கொடுக்கும்படியும் நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம். பிள்ளைகளே இந்தப் பிரதிகளை வழக்கமாய் பள்ளிக்குக் கொண்டு சென்று, முடிந்தளவு அநேக ஆசிரியர்களிடம் அவற்றை கொடுக்கலாம். நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் (மறுபதிப்பு செய்யப்பட்டது 1997) — மலையாளம்