உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 6/97 பக். 2
  • ஜூன் ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூன் ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1997
  • துணை தலைப்புகள்
  • ஜூன் 2-ல் துவங்கும் வாரம்
  • ஜூன் 9-ல் துவங்கும் வாரம்
  • ஜூன் 16-ல் துவங்கும் வாரம்
  • ஜூன் 23-ல் துவங்கும் வாரம்
  • ஜூன் 30-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1997
km 6/97 பக். 2

ஜூன் ஊழியக் கூட்டங்கள்

ஜூன் 2-ல் துவங்கும் வாரம்

பாட்டு 181

8 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். நாட்டினுடைய மற்றும் உள்ளூர் சபையினுடைய பிப்ரவரி மாத ஊழிய அறிக்கையின் பேரில் குறிப்பு சொல்லுங்கள்.

15 நிமி:“உங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுங்கள்.” கேள்விகளும் பதில்களும்.—1993, ஏப்ரல் 15, ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 28-30-ஐயும் காண்க.

22 நிமி:“கடவுளிடமிருந்து பெற்ற அறிவு அநேக கேள்விகளுக்குப் பதில்களை அளிக்கிறது.” ஓர் இளைஞன் உட்பட இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளுடன் அக்கிராசனர் கட்டுரையை கலந்தாலோசிக்கிறார். பாரா 1-ன்பேரில் குறிப்பு சொல்லி, கேள்விகளுக்குப் பதிலளிக்க நமக்கு உதவுவதில் ஏன் அறிவு புத்தகம் அதிக பயனுள்ளதாக இருக்கிறது என்பதை வலியுறுத்திக்காட்டுங்கள். பழகிப்பார்த்துக்கொள்ளும் நேரத்தை (practice session) நடித்துக்காட்டி, அதில் ஒவ்வொரு அறிமுகப்படுத்துதலுக்கும் பின்பு முன்னேற்றங்கள் செய்வதற்கு ஆலோசனை அளியுங்கள்.

பாட்டு 200-ம் முடிவு ஜெபமும்.

ஜூன் 9-ல் துவங்கும் வாரம்

பாட்டு 189

10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.

15 நிமி:மழைக் கால நினைப்பூட்டுதல்கள். பேச்சும் சபையோருடன் கலந்தாலோசிப்பும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் அடைமழை பெரும்பாலும் அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது. தேவராஜ்ய நடவடிக்கைகளை விட்டுவிடாதபடி நாம் எவ்வாறு காரியங்களை ஒழுங்கமைக்க முடியும்? பின்வருவனவற்றைக் கலந்தாலோசியுங்கள்: (1) கூட்டங்களுக்குத் தவறாமல் ஆஜராவதை விட்டுவிடாதிருத்தல். (2) ஒருவேளை மோசமான சீதோஷண நிலை மாதத்தின் பிற்பகுதியில் வந்தாலும் வரலாம்; எனவே, மாதத்தின் ஆரம்பத்திலிருந்தே ஊழியத்தில் தவறாமல் பங்குகொள்ள ஏற்பாடு செய்தல். (3) நம்முடைய பைபிள்கள், பிரசுரம், பத்திரிகைகள் ஆகியவற்றை மழையிலிருந்து பாதுகாக்க தகுந்த மழைக் கால உடையையும் பொருத்தமான பையையும் வைத்திருத்தல். (4) அடுக்கு மாடி கட்டடங்கள், அல்லது வெள்ளப்போக்கு ஏற்படாத பகுதிகள் போன்ற பொருத்தமான பிராந்தியத்தை முடிந்தால் தெரிந்தெடுத்தல். (5) சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு வசதியாக, நனைந்துவிடாமல் பாதுகாப்பாக இருக்கக்கூடிய பொது இடங்களைக் கண்டுபிடித்தல். (6) அறிக்கை செய்யப்படும் ஊழியத்தில் குறைவு ஏற்படாமல் இருப்பதற்கு மூப்பர்கள், சபை நடவடிக்கைகளை நன்கு ஒழுங்கமைத்து வைத்தல்.

20 நிமி:மற்றவர்களுக்குக் கற்பித்தல்—ஓர் அவசரத் தேவை. ஒரு மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு. 1997 வருடாந்தர புத்தகத்தில், (ஆங்கிலம்) பக்கம் 33-லுள்ள 1996-ன் உலகளாவிய ஊழிய அறிக்கையை மறுபார்வை செய்யுங்கள். எங்கெல்லாம் ஆட்கள் காணப்படுகிறார்களோ அங்கெல்லாம் சாட்சி கொடுக்க தீவிர முயற்சி எடுப்பது நல்ல பலன்களைக் கொடுக்கிறது. பிரசுர அளிப்புகளைப் பின்தொடர்ந்து, மக்களுக்கு சத்தியத்தை கற்பிப்பதுதான் இப்போதுள்ள அவசரத் தேவையாக இருக்கிறது. பொது இடங்களில் அவர்களைச் சந்திக்கும்போது, சாதுரியத்தோடு அவர்களுடைய பெயரையும் விலாசத்தையும் மறுசந்திப்பு செய்வதற்காக தயவாக கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். வெறுமனே ராஜ்ய விதைகளை விதைப்பதோடுகூட நாம் அதிகத்தைச் செய்ய வேண்டும்; நாம் தண்ணீரும் பாய்ச்ச வேண்டும். (1 கொ. 3:6-8) விதை நல்ல நிலத்தில் விதைக்கப்படுகையில், திறம்பட்ட விதத்தில் கற்பித்தல் கருத்தைப் புரிந்துகொள்ள அவருக்கு உதவலாம். (மத். 13:23) கற்பிக்கும் வேலையில், முடிந்தளவுக்கு நாம் அதிக முழுமையாகவும், திறம்பட்ட விதமாகவும் பங்குகொள்ளவேண்டும். (எபி. 5:12அ) 1996 ஜூன் மாத நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில், பாராக்கள் 25-6-லுள்ள குறிப்புகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தேவைப்படுத்துகிறார் சிற்றேடு அல்லது அறிவு புத்தகத்திலிருந்து படிப்புகளை ஆரம்பிக்க முயற்சி எடுக்கும்படி வலியுறுத்துங்கள்.

பாட்டு 204-ம் முடிவு ஜெபமும்.

ஜூன் 16-ல் துவங்கும் வாரம்

பாட்டு 192

10 நிமி:சபை அறிவிப்புகள். புதிய பத்திரிகைகளிலுள்ள பேச்சுக் குறிப்புகளைக் குறிப்பிடுங்கள்.

15 நிமி:சபை தேவைகள்.

20 நிமி:உங்கள் மதம் மெய்யானதா, பொய்யானதா என்று அடையாளம் கண்டுகொள்ளுதல். 1992, பிப்ரவரி 8, விழித்தெழு!-வில் பக்கம் 19-ன் அடிப்படையில் ஒரு மூப்பர் இரண்டு அல்லது மூன்று தகுதியான பிரஸ்தாபிகளோடு கலந்தாலோசிக்கிறார். தெளிவாகவே உண்மையுள்ளவர்களாக இருக்கும் அநேக ஆட்கள் அடிக்கடி சந்திக்கப்படுகின்றனர். இருந்தபோதிலும், அவர்கள் பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொள்வதில்லை. திருத்தமான அறிவுக்கு ஏற்ப செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணர, இந்த விழித்தெழு! கட்டுரையில் இருக்கும் குறிப்புகளை எப்படி உபயோகிக்கலாம் என்பதைக் கலந்தாலோசியுங்கள். அறிவு புத்தகத்தில், “யாருடைய வணக்கத்தை கடவுள் ஏற்றுக்கொள்கிறார்?” என்ற 5-ம் அதிகாரத்திலுள்ள முக்கிய குறிப்புகளைக் குறிப்பிடுங்கள். பாரா 20-ஐ வாசியுங்கள். இப்படிப்பட்ட ஆட்களிடம் மறுசந்திப்புகளை செய்து, படிப்பதற்கு ஒப்புக்கொள்ளும்படியும் கூட்டங்களில் ஆஜராகும்படியும் தயவோடும் சாதுரியத்தோடும் உற்சாகப்படுத்தலாம்.

பாட்டு 201-ம் முடிவு ஜெபமும்.

ஜூன் 23-ல் துவங்கும் வாரம்

பாட்டு 193

10 நிமி:சபை அறிவிப்புகள்.

15 நிமி:அவர்கள் நம்மைப் பற்றி என்ன சொல்லுகிறார்கள்? 1986-1995-க்கான காவற்கோபுர பிரசுரங்களின் பொருளடக்க அட்டவணையில், (ஆங்கிலம்) பக்கங்கள் 341-3-ல் காணப்படும் தகவலின் அடிப்படையில் பேச்சு. (அல்லது 1986-90-ன் பொருளடக்க அட்டவணையில் பக்கங்கள் 268-9). யெகோவாவின் சாட்சிகளை—நம்முடைய நடத்தையையும் நம்முடைய வேலையையும்—பற்றிய “மற்றவர்களின் குறிப்புகள்” என்பதில் முனைப்பானவற்றைத் தெரிந்தெடுங்கள். மற்றவர்கள் நம்மிடத்திலே பார்த்தவற்றால் எப்படிச் சாதகமாக கவரப்பட்டார்கள் என்பதைக் காட்டுங்கள். எப்போதும் நம்மை சரியாக நடத்திக் கொள்ளவும், நம்முடைய வேலையில் தரித்திருக்கவும் இது ஏன் நம்மை உந்துவிக்க வேண்டும் என்பதை விளக்குங்கள். நம்மைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ள விரும்பும், நமக்குப் பழக்கமானவர்களிடமும் அக்கறை காட்டும் ஆட்களிடமும் பேசுகையில், இத்தகைய சாதகமான குறிப்புகளை எப்படி உபயோகிக்கலாம் என்பதைக் குறிப்பிடுங்கள்.

20 நிமி:“பெற்றோரே—பிரசங்கிப்பதற்கு உங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவியுங்கள்.” கேள்விகளும் பதில்களும். நம் ஊழியம் புத்தகத்தில், பக்கங்கள் 99-100-லுள்ள, “இளைஞருக்கு உதவிசெய்தல்” என்ற உபதலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் வழிமுறையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பாட்டு 211-ம் முடிவு ஜெபமும்.

ஜூன் 30-ல் துவங்கும் வாரம்

பாட்டு 197

10 நிமி:சப அறிவிப்புகள். ஜூன் மாத வெளி ஊழிய அறிக்கையைப் போடும்படி எல்லாருக்கும் நினைப்பூட்டுங்கள்.

20 நிமி:“இளைஞரே—உங்களுடைய ஆவிக்குரிய இலக்குகள் என்ன?” இரண்டு தகப்பன்மார் ஒன்றாக சேர்ந்து கட்டுரையைக் கலந்தாலோசிக்கின்றனர். பொருளாதார அக்கறைகளை நாடித் தொடருவதற்கு பதிலாக ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை கொண்டுவரும் தேவராஜ்ய இலக்குகளை வைக்க வேண்டியது ஏன் அவசியம் என்பதை தங்களுடைய பிள்ளைகள் போற்றுவதற்கு எப்படி உதவிசெய்யலாம் என்பதை அவர்கள் சிந்திக்கின்றனர்.—நம் ஊழியம் புத்தகம், பக்கங்கள் 116-18-யும் காண்க.

15 நிமி:ஜூலை மாத பிரசுர அளிப்புக்குத் தயாரித்தல். உள்ளூர் பிராந்தியத்திலே, வெகுவாக வரவேற்கப்பட்ட ஓரிரு சிற்றேடுகளைத் தெரிந்தெடுத்து, ஒவ்வொன்றிலிருந்தும் எடுக்கப்பட்ட சில முனைப்பான குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள். இவற்றை அறிமுகங்களாக பயன்படுத்துவதற்கு இருக்கும் வழிகளைக் குறிப்பிடுங்கள். அளிப்புகளின் பதிவை வைத்திருக்கும்படியும், திரும்பச் சென்று சந்தித்து அக்கறையை வளர்க்கும்படியும் எல்லாருக்கும் நினைப்பூட்டுங்கள்.

பாட்டு 109-ம் முடிவு ஜெபமும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்