உண்மைத்தன்மை பலனளிக்கப்படுகிறது
1 எபிரெயர் 11:6-ல் கடவுள் ‘தம்மை ஊக்கமாய்த் தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவறென்று’ நம்மிடமாக சொல்லப்பட்டிருக்கிறது. ‘கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களாய் இருக்கிற’ தம்முடைய பக்தியுள்ள ஊழியர்களுக்கு அவர் பலனளிக்கும் ஒரு வழி என்னவென்றால், ‘அநேகத்தின் மேலும் அவர்களை நியமிப்பதன்’ மூலமே. (மத். 25:23) வேறுவார்த்தைகளில் சொல்லப்போனால், யெகோவா தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களுக்கு கூடுதலான ஊழிய சிலாக்கியங்களைக் கொடுப்பதன்மூலம் அவர்களுடைய ஊக்கமான வேலையை தொடர்ந்து பலனளிக்கிறார்.
2 அப்போஸ்தலன் பவுலின் உண்மைத்தன்மையானது, ஐரோப்பா, ஆசியா மைனர் போன்ற பட்டணங்களிலும், கிராமங்களிலும் ஊழிய நியமிப்பை பெறுவதன் மூலம் பலனளிக்கப்பட்டது. (1 தீ. 1:12) பவுல் தன்னுடைய ஊழியத்தை முழுமையாக முடிப்பதில் கடினமான முயற்சிகள் உட்பட்டிருந்தாலும், தான் பெற்றுக்கொண்ட ஊழியத்தை அதிக மதிப்புள்ளதாக கருதினார். (ரோ. 11:13; கொலோ. 1:25) பிரசங்கிப்பதற்கான சந்தர்ப்பங்களை ஊக்கமாக தேடுவதன் மூலம் தன்னுடைய இருதயப்பூர்வமான போற்றுதலைக் காண்பித்தார். தன்னுடைய வைராக்கியமான செயல்களின் மூலமாக தான் விசுவாசத்தோடு வாழ்ந்துகொண்டிருந்தார் என்பதை தெளிவாக நிரூபித்தார். நம்முடைய ஊழிய சிலாக்கியத்தை பொக்கிஷமாக கருதுவதற்கு அவருடைய முன்மாதிரி நம்மை உந்துவிக்கிறது.
3 யெகோவா நம்மிடமாக ஊழியத்தை ஒப்படைத்திருக்கிறார்: இந்த ஊழிய சிலாக்கியத்தை பவுல் எவ்விதமாக கருதினாரோ அவ்விதமாகவே நாமும் கருதுகிறோம் என்பதை எப்படி காண்பிக்கிறோம்? ஊழியத்தில் அதிகமாக பங்குகொள்வதற்கான வழிகளை நாம் எதிர்நோக்கியிருக்கிறோம். வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வதற்கும் சந்தர்ப்பசாட்சி கொடுப்பதற்கும் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்கிறோம். பூட்டப்பட்ட எல்லா வீடுகளுக்கும் மறுமுறை செல்கிறோம்; மேலும் அக்கறையுள்ள ஆட்கள் அனைவரையும் மறுசந்திப்பு செய்கிறோம். வீட்டு பைபிள் படிப்புகளை நடத்த வருவதாக சொன்ன நேரத்தை தவறாமல் கடைப்பிடிக்கிறோம்.
4 நம்முடைய ஊழிய சம்பந்தமாக பவுல் இவ்வாறு அறிவுறுத்தினார்: ‘அவசர உணர்வோடு பிரசங்கம்பண்ணு.’ (2 தீ. 4:2, NW) அவசர உணர்வுடன் செய்யப்பட வேண்டிய காரியம் என்பது உடனடியான கவனம் செலுத்துவதை உட்படுத்துகிறது. நம்முடைய வாழ்க்கையில் ஊழியத்திற்கு முதலிடம் கொடுத்து, அவசர உணர்வோடு அதற்கு செல்கிறோமா? உதாரணமாக, வார இறுதி நாட்களில் நாம் ஈடுபடும் பொழுதுபோக்குகளும் சொந்த நாட்டங்களும் நாம் ஊழியத்திற்கு அர்ப்பணிக்க வேண்டிய நேரங்களை விழுங்கிவிடும்படி அனுமதிக்கக் கூடாது. இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு வெகு வேகமாய் நெருங்கிவருகிறதென்பதை நாம் உறுதியாய் நம்புவதால், ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பதே நாம் செய்யவேண்டிய அதிக முக்கியமான வேலை என்பதையும் உறுதியாய் நம்புகிறோம்.
5 நாம் கடவுளுக்கு உண்மையுடனும், பற்றுமாறாமலும் இருந்து நமக்கு அவர் நியமித்திருக்கிற வேலையில் உறுதியாக இருப்பது அவருக்கு உண்மைத்தன்மையை காண்பிப்பதைக் குறிக்கிறது. நம்முடைய உண்மைத்தன்மைக்கு யெகோவா அபரிமிதமாக பலனளிக்கும்படி, நம்முடைய ஊழியத்தை நாம் முழுமையாக நிறைவேற்றுவோமாக.