மக்கள் இருக்கும் இடமெல்லாம் சாட்சிகொடுங்கள்
1 தன்னுடைய ஊழியத்தில் கடவுளுடைய ஆவியின் பங்கை உணர்ந்தவராய் பவுல் இவ்விதமாய் சொன்னார்: ‘தேவனே விளையச்செய்தார்.’ மேலும் அவர் ஒப்புக்கொண்டது: ‘நாம் தேவனுடைய உடன் வேலையாட்களாய் இருக்கிறோம்.’ (1 கொ. 3:5-9) இது ஒரு மேன்மையான சிலாக்கியமாகும். நாம் கடவுளுடைய உடன் வேலையாட்களாக இருப்பதை போற்றுகிறோம் என்பதை நாம் எவ்வாறு வெளிப்படையாக மெய்பித்துக்காட்டலாம்? நாம் எவ்வாறு காண்பிக்கலாம் என்றால் வீட்டுக்கு வீடு ஊழியத்திலும், எங்கெல்லாம் மக்களை சந்திக்கிறோமோ அங்கெல்லாம் ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிப்பதன் மூலமும் காண்பிக்கலாம்.
2 ‘சகல ஜாதிகளையும் சீஷராக்கும்படியாக’ நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறோம் (மத். 28:19) நாம் ஊழியத்தில் பங்குகொள்ளும்போது குறைவான ஆட்களையே சந்திப்போமானால் எளிதில் சோர்வடைந்து சிறிதளவுதான் செய்யமுடிந்தது என்று நினைக்கலாம். மறுபட்சத்தில் அநேக ஆட்களை கண்டுபிடித்து, அவர்களிடம் சம்பாஷிக்கும்போது ஊழியத்தை மகிழ்ந்தனுபவிக்கிறோம். இது ஓரளவு சவாலாக இருக்கலாம், ஏனென்றால் மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களைச் சந்தித்து அவர்களிடம் தொடர்புகொள்ள நம் பங்கில் கூடுதலான முயற்சி தேவை.
3 நடைமுறையான உதாரணங்கள்: கடைவீதிகளில், பூங்காக்களில், வாகனங்கள் இடைவேளைக்காக நிற்கும் இடங்களில், பேருந்து நிலையங்களில் அனுமதியிருந்தால் அங்கிருக்கும் மக்களிடம் நாம் சாட்சிகொடுக்கலாம். நீங்கள் பொதுபோக்குவரத்துகளில் பயணம் செய்யும்போது அருகில் இருப்பவர்களிடம் சாட்சிகொடுப்பதற்கு தயாராய் இருக்கிறீர்களா? கூட்டம் நிறைந்த பஸ்ஸில் இரண்டு சாட்சிகள் சபைக்கு சென்றுகொண்டிருக்கும்போது அறிவு புத்தகத்தில் உள்ள பரதீஸ் பற்றிய படத்தைக் குறித்து பேசிக்கொண்டு, எதிர் காலத்திற்கான கடவுளுடைய வாக்குறுதிகளைப் பற்றி கலந்துரையாடிக்கொண்டுவந்தனர். அவர்கள் எது நடக்கும் என்று எதிர்பார்த்தார்களோ அதேபோல், அந்த பஸ்ஸில் அருகில் நின்றுகொண்டிருந்த ஓர் இளைஞன் அதை கவனித்துக் கேட்டு தான் கேட்டவற்றால் கவரப்பட்டார். பஸ்ஸிலிருந்து இறங்குவதற்கு முன்பாக ஒரு புத்தகத்தை ஏற்றுக்கொண்டு தன்னை யாராவது வந்து சந்திக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
4 அநேக சாட்சிகள் சந்தர்ப்ப சாட்சிகொடுப்பதில் சந்தோஷத்தைக் கண்டடைந்திருக்கிறார்கள். சகோதரி ஒருவர் மதிய வேளையில் ஷாப்பிங் சென்டருக்கு சென்றார்; அங்கு பொருட்களை வாங்கிவிட்டு சாவகாசமாக இருந்த ஆட்களை அணுகினார். அவர் தன் பையிலிருந்த எல்லா பத்திரிகைகளையும் விநியோகித்துவிட்டார்கள். காரின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவர் சகோதரியிடம் பத்திரிகைகளைப் பெற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைந்தார். முன்பு அவர் கூட்டங்களிலும், மாநாடுகளிலும் கலந்துகொண்டிருந்ததால் அவர்களுடைய சம்பாஷனை அவருடைய ஆர்வத்தை மறுபடியும் தூண்டியது.
5 யெகோவாவின் பெயரை மேன்மைப்படுத்துவது ஒரு சிலாக்கியமாகும். பிரசங்க வேலைக்கான நம்முடைய வைராக்கியத்தை செயலில் காண்பிப்பதன் மூலம், நம்மிடமாக கடவுள் காண்பிக்கும் தகுதியற்ற தயவின் நோக்கத்தை நாம் இழந்துவிடவில்லை என்பதை காட்டுகிறோம். ஏனென்றால் மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கு இதோ இப்பொழுதே ‘அநுக்கிரக காலமாக’ இருப்பதனால், மக்கள் இருக்கும் இடமெல்லாம் சென்று யெகோவாவின் ‘இரட்சணியநாளைப்’ பற்றி அவர்களுக்கு சாட்சிக்கொடுப்போமாக.—2 கொ. 6:1 2.