உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/97 பக். 2
  • ஜூலை ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூலை ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1997
  • துணை தலைப்புகள்
  • ஜூலை 7-ல் துவங்கும் வாரம்
  • ஜூலை 14-ல் துவங்கும் வாரம்
  • ஜூலை 21-ல் துவங்கும் வாரம்
  • ஜூலை 28-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1997
km 7/97 பக். 2

ஜூலை ஊழியக் கூட்டங்கள்

ஜூலை 7-ல் துவங்கும் வாரம்

பாட்டு 6

10 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். நாட்டினுடைய மற்றும் உள்ளூர் சபையினுடைய மார்ச் மாத ஊழிய அறிக்கையின் பேரில் குறிப்பு சொல்லுங்கள்.

15 நிமி:“உண்மைத்தன்மை பலனளிக்கப்படுகிறது.” கேள்விகளும் பதில்களும். ஆங்கில விழித்தெழு! ஜனவரி 22, 1993, பக்கங்கள் 18-21-ல் வந்த அனுபவத்தை சேர்த்துக்கொள்ளவும்.

20 நிமி:“ஆறுதலைக் கண்டடைய மற்றவர்களுக்கு உதவுங்கள்.” சபையாரோடு கலந்தாலோசிப்பு. ஓரிரு அளிப்புமுறைகளை நடித்துக்காட்டுங்கள். அதே சிற்றேட்டைக்கொண்டு சம்பாஷணைகள் துவங்கப்பட்ட வேறுசில வழிமுறைகளை சொல்லும்படி சபையாரை கேளுங்கள். அக்கறையைத் தூண்ட, எளிய, நன்கு தெரிந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளை உபயோகிக்கும்படி உற்சாகப்படுத்துங்கள். (பள்ளி துணைநூல், பக்கம் 7, பாராக்கள் 9-11-ஐக் காண்க.) அளிக்கப்படவேண்டிய மற்ற சிற்றேடுகளையும், சபையின் கைவசம் இருக்கும் மற்ற சிற்றேடுகளையும் குறிப்பிடுக.

பாட்டு 70, முடிவு ஜெபம்.

ஜூலை 14-ல் துவங்கும் வாரம்

பாட்டு 5

17 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. “ராஜ்ய மன்ற நிதி” என்று பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ள விஷயத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள். “குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தை நாம் படிப்போம்” என்ற கட்டுரையை மறுபார்வை செய்யவும். தனி நபர் ஒவ்வொருவரும் படிப்பிற்காக இந்தப் புத்தகத்தின் பிரதியை சொந்தமாக வைத்திருக்க வலியுறுத்துங்கள். பாடங்களை முன்கூட்டியே தயாரிக்க அனைவரையும் உற்சாகமூட்டுங்கள்.

13 நிமி:“மக்கள் இருக்கும் இடமெல்லாம் சாட்சி கொடுங்கள்.” பேச்சு. நேரம் அனுமதிப்பதற்கு ஏற்ப, 1997 வருடாந்தர புத்தகம், (ஆங்கிலம்) பக்கங்கள் 43-6-ல் கொடுக்கப்பட்டுள்ள கூடுதலான அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

15 நிமி:பெற்றோரே—சிசு பருவத்திலிருந்தே உங்கள் பிள்ளைகளுக்குப் போதிங்கள். பிள்ளைகளுக்கு சிசு பருவத்திலிருந்தே பெற்றோர் போதிக்கவேண்டிய அவசியத்தை கோடிட்டுக்காட்டும் பைபிள் நியமங்களை மூப்பர் கலந்தாலோசிக்கிறார். (நீதி. 22:6; 2 தீ. 3:14, 15) பிள்ளைகள் வளர்ந்து தாங்களாகவே முடிவெடுக்கும் வயதுவரும்வரை அவர்களுக்கு தீவிரமான பைபிள் கல்வியை அளிக்க வேண்டாம் என சில பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அத்தகைய சந்தர்ப்பங்களில், பிள்ளைகள் உலகப்போக்கை பற்றிக்கொள்கிறார்கள். சிசு பருவத்திலேயே பைபிள் போதனை ஆரம்பிக்கப்படவேண்டும். (gTL97 3/8 26-7; wTL89 3/1 12-13) தங்கள் பிள்ளைகளின் ஆவிக்குரிய தன்மையில் அக்கறை காட்டும் திருமணமான தம்பதியை பேட்டி காணவும். தந்தை எவ்விதம் தலைமைதாங்கி நடத்துகிறார் என்பதையும், ஆனால் தங்கள் பிள்ளைகளுக்கு நிலையான, முழுமையான போதனா திட்டத்தை வகுத்துக்கொடுப்பதில் பெற்றோர் இருவருமே தங்கள் தங்கள் பங்கை செய்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டவும். தங்கள் பிள்ளைகளுக்கு சத்தியத்தை போதிக்க முயலுகையிலும், வீட்டில் நல்ல திறம்பட்ட, நடைமுறையான போதனா திட்டத்தை அளிப்பதற்காக சங்கத்தின் ஆலோசனைகளை அவர்கள் பின்பற்றுகையிலும் என்ன செய்கிறார்கள் என்பதை அந்தத் தம்பதி சொல்கிறார்கள். பெற்றோரை என்ன செய்யும்படி கடவுளுடைய வார்த்தை அறிவுறுத்துகிறதோ அதைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை மூப்பர் வலியுறுத்துகிறார்.—w85 4/1 23; எபே. 6:1-4.

பாட்டு 71, முடிவு ஜெபம்.

ஜூலை 21-ல் துவங்கும் வாரம்

பாட்டு 14

15 நிமி:சபை அறிவிப்புகள். “பழைய புத்தகங்களை நன்கு பயன்படுத்திக்கொள்ளுதல்” என்ற கட்டுரையைக் கலந்தாலோசிக்கவும். இந்த வாரத்திற்குள், பிரஸ்தாபிகள் தங்கள் தனிப்பட்ட நூலகங்களை சரிபார்த்து, இப்புத்தகங்களில் எவை தேவை என்பதை அறிந்துகொள்ளவும், அதன்பிறகு புத்தக இலாக்காவில் அவற்றிற்கான ஆடரை தரும்படியும் உற்சாகப்படுத்துங்கள். அவ்வாறு செய்தால், அவற்றிற்காக இம்மாத கடைசியில் சபையானது சங்கத்திடம் விண்ணப்பிக்கும்.

15 நிமி:“புதிய சிற்றேட்டையும் அதன் கேசட்டையும் உபயோகித்து கடவுள் தேவைப்படுத்துகிறவற்றை கற்க மற்றவர்களுக்கு உதவுங்கள்.” பேச்சு. தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டின் ஆடியோ கேசட்டு கிடைத்தால், அதை உபயோகித்து, பைபிள் படிப்பு ஒன்றை நடித்துக்காட்டவும்.

15 நிமி:சந்தர்ப்ப சாட்சிக்கொடுக்க தயாராக இருங்கள். ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் ஆட்களிடம் சாட்சிக்கொடுக்கும் சந்தர்ப்பங்கள் நமக்கு கிடைக்கின்றன. அவ்வாறு சந்தர்ப்பம் கிடைக்கையில், உபயோகிக்க நம்மிடம் பைபிளோ பிரசுரங்களோ கைவசம் இருக்கட்டும். முன்கூட்டியே திட்டமிடுங்கள். வீட்டில் கதவுக்கு பக்கத்தில், விருந்தினரை நீங்கள் வரவேற்கும் இடத்தில் சில பிரசுரங்களை கைக்கு எட்டும் வண்ணம் வைத்திருங்கள். வெவ்வேறு பிரசுரங்களை உங்களுடைய பிரீஃப் கேஸில் அல்லது கைப்பையில் போட்டு, உங்களுடன், அல்லது உங்களது காரில், நீங்கள் வேலை செய்யும் இடத்தில், அல்லது பள்ளிக்கூடத்தில் உங்களுடைய டெஸ்கில் வையுங்கள். பொது போக்குவரத்தில் பயணம் செய்யும்போது உங்களுடன் கொஞ்சம் எடுத்துச்செல்லுங்கள். நீங்கள் பிஸ்னஸ் டிரிப் போகும்போதும், மாநாட்டிற்காகவோ விடுமுறைக்காகவோ பயணம் செய்யும்போதும் சில பிரசுரங்களை எடுத்துச்செல்லுங்கள். பள்ளி துணைநூல், பக்கங்கள் 80-2, பாராக்கள் 11-16-ல் கொடுக்கப்பட்டுள்ள கூடுதலான ஆலோசனைகளை கலந்துரையாடுங்கள். ஒரு சேல்ஸ்மேனை, ஒரு உடன் வேலையாளை, பள்ளி சகமாணவன் ஒருவனை, உடன் பயணம் செய்யும் ஒருவரை அல்லது விடுமுறையை அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒருவரை அணுகும் பல்வேறு வழிகளை சுருக்கமாக நடித்துக்காட்டுங்கள்.

பாட்டு 72, முடிவு ஜெபம்.

ஜூலை 28-ல் துவங்கும் வாரம்

பாட்டு 15

12 நிமி:சபை அறிவிப்புகள். வெளி ஊழிய அறிக்கையைப் போடும்படி, அனைவரையும் ஞாபகப்படுத்துங்கள். ஆகஸ்ட் மாத பிரசுர அளிப்பை மறுபார்வை செய்யுங்கள். ஜூலையில் அளிக்கப்பட்ட சிற்றேடுகளைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் மறுசந்திப்புகள் செய்யப்படுவதிலும், பைபிள் படிப்புகள் நடத்த முயலுவதிலும் கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள். மார்ச் 1997 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையை உபயோகித்து, திறம்பட்ட மறுசந்திப்புகளை செய்ய முக்கியமானவை சிலவற்றை சுட்டிக்காட்டவும். பைபிள் படிப்புகளை தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலிருந்தோ அறிவு புத்தகத்திலிருந்தோ ஆரம்பிக்கவேண்டும். “நமக்காக எவன் போவான்”? என்ற பெட்டியிலிருந்து உற்சாகமூட்டும் குறிப்புக்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். ஒழுங்கான பயனியர் செய்ய முடியாதவர்கள், வரவிருக்கும் ஊழிய ஆண்டின்போது, எந்த மாதம் அல்லது மாதங்களில் துணைப்பயனியர் சேவை செய்யலாம் என்று திட்டமிட விரும்புவர்.

18 நிமி:“தனிப்பட்ட படிப்பு ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு வழிநடத்துகிறது.” கேள்விகளும் பதில்களும். இடம்குறிப்பிட்டுள்ள வேதவசனங்களை நேரம் அனுமதிப்பதற்கு ஏற்ப வாசிக்கவும். தனிப்பட்ட படிப்பிற்காகவும் குடும்ப படிப்பிற்காகவும் வாராந்தர அட்டவணையை வைத்திருக்கும்படியும், அவற்றை விட்டுவிடாமல் பின்பற்றும்படியும் அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.

15 நிமி:உங்களுடைய ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றுங்கள். நம் ஊழியம் புத்தகம், பக்கங்கள் 5-8-ஐ அடிப்படையாகக் கொண்டு ஊழிய கண்காணியால் கொடுக்கப்படும் பேச்சு. பிரசங்க வேலையின் முக்கியத்துவத்தையும், அவசரத்தையும் வலியுறுத்தவும். ஊழியர்களாக தங்களது பொறுப்பை கருத்தோடு எடுத்துக்கொள்ளும்படி எல்லாருக்கும் ஊக்கம் தாருங்கள்.

பாட்டு 75, முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்